Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ் - செளந்தர்யா - சோனம் கபூர்... ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ கூட்டணி!

 

நாம்  சில வாரங்களுக்கு முன்பு ' செளந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார்' என்கிற கட்டுரையை வெளியிட்டு இருந்தோம். அந்த செய்தி இப்போது உண்மையாகி, உறுதியாகி விட்டது.  ' நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் கதை நாயகனுக்கு நடிப்பதற்கு அதிக ஸ்கோப் இருப்பதை தனுஷிடம் விவரித்து இருக்கிறார், செளந்தர்யா. அவருக்கும் கதை பிடித்துப்போய் உடனே நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். 'கபாலி' படத்தின் 100-வது நாளுக்கு பிறகு அடுத்து  செளந்தர்யா இயக்கத்தின் தனுஷ் நடிக்கும் படத்தை தயாரிக்கும் பணியில் பரபரப்பாக களமிறங்கி விட்டார்,  'கலைப்புலி' தாணு.

கதை, திரைக்கதை, வசனம் என்று தனது ஸ்கிரிப்ட்டை பக்காவாக ரெடி செய்து கொண்டு இருக்கிறார், செளந்தர்யா. தனுஷூக்கு ஜோடியாக நடிப்பதற்காக முதலில் சக்திகபூர் மகள் ஷமிதாகபூர் பேசப்பட்டது. இப்போது அணில்கபூர் மகள் சோனம்கபூரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.  ஏற்கெனவே 'ராஞ்னா' படத்தில் சோனம்கபூருடன் தனுஷ் நடித்து அறிமுகமாகி இருப்பதால் அவரையே ஜோடியாக்கி ஒரேநேரத்தில் தமிழிலும், இந்தியிலும் படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தோடு இருக்கிறார்கள்.
                    

இசையமைப்பாளர் விஷயத்தில் ஏற்கெனவே தனுஷ் 'ஜோக்கர்' இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.  'என்ன இருந்தாலும் அனிருத் நம்மவீட்டு பையன்' என்று ஐஸ்வர்யாவும்,  செளந்தர்யாவும் அனிருத்துக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்கள். இருவரின் பேச்சைக்கேட்டு  என்ன முடிவுசெய்வது என்கிற மனக்குழப்பத்தில் தனுஷ் தவித்து இருக்கிறார்.  நேற்றுவரை அனிருத் அனுப்பிக் கொண்டு இருந்த சமாதானப் புறாவை எல்லாம் ஃப்ரை செய்து சாப்பிட்டுவந்த தனுஷ், மீண்டும் அனிருத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டலாமா? என்று யோசித்து இருக்கிறார். ஆனால், அதற்கும் தடைக் கல்லாக நடைபெற்றது ஒரு சம்பவம்.                          

சமீபத்தில் சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படத்தின்  'நன்றி' விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அனிருத் 'நான் வேறு கம்பெனிகள் தயாரிக்கும்  படங்களுக்கு இசையமைத்து இருக்கிறேன் அதைவிட 24 எஃஎம் தயாரிப்பில் இசையமைக்கும்போது எனக்கு கம்பேர்டபுளாக இருக்கிறது' என்று பேசினார். 'அனிருத் பேசிய பேச்சு என்னுடைய வொண்டர் பிலிம்ஸ் நிறுவனத்தைத்தான் குத்திக் காட்டுவதாக இருக்கிறது' என்று சினமாக  சீறிய தனுஷ், அனிருத்தை கமிட் செய்ய வேண்டாம் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம். ஆக, 'கலைப்புலி' தாணு, தனுஷ், செளந்தர்யா, சோனம்கபூர், ஷான் ரோல்டன் கூட்டணியில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் ஷூட்டிங் நவம்பரில் துவங்கலாம் என்கிறார்கள்!

- சத்யாபதி

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close