Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"யாருக்கும் அடங்காத ஓநாய் மிஷ்கின்!" பா.இரஞ்சித்

இயக்குனர் ராம் ஹீரோவாகவும் இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும் நடிக்க  மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கி இருக்கும் படம் சவரக்கத்தி. இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. தமிழ்த் தாய் வாழ்த்தை தொடர்ந்து நடிகர் நாசர் பாரதியார் பாடலை பாட விழா துவங்கியது. நிகழ்ச்சி தொகுப்பாளினி மீண்டும் ஒரு முறை டிரைலரும் பாடலும் திரையிடப்படும் என சொன்னதும். எழுந்த இயக்குனர் மிஷ்கின் " அய்யயோ வேணாங்க பிளீஸ் " என சொல்லி கலகலப்பாக்கினார். 

விழாவில் கலந்து கொண்டவர்கள் பேசியதில் இருந்து சில துளிகள்:

தமிழச்சி தங்க பாண்டியன் ;
" இந்த படத்துல வேலை செஞ்சதுல மகிழ்ச்சியும் மனநிறைவும். லோன் வூல்ப்ங்கிறது தான் அவரு எப்போவுமே தன்னை முன்னிறுத்திக்குற ஒரு விஷயம். மிஷ்கினை எந்த விதமான அடையாளத்துக்குள்ளும் அடக்கிட முடியாது. மிஷ்கின் ஒரு தனிமையின் சாண்டாகிளாஸ். 'நான் ஒரு transgenderஆ தான் பிறந்துருக்கணும்’னு அவரு அடிக்கடி சொல்லுவாரு. மிஷ்கின் ஒரு ஆணையோ பெண்ணையோ அணைச்சுக்கறப்போ அவ்ளோ பாதுகாப்பா எல்லோராலையும் உணர முடியும். பாதுகாப்பையும் பேரன்பையும் கொடுக்குறவரு. முழுக்க முழுக்க பிடித்ததோட வேலை செய்ற அலுவலகமா தான் இருக்கும். எல்லோருக்கும் என்னோட வாழ்த்துகள்" 

இயக்குனர் பாலாஜி சக்திவேல் :

" மிஷ்கின் ஒரு பாசக்கார பையன், என்னடா பையன்னு சொல்லலாம் தானே? தமிழச்சி தங்க பாண்டியன் எழுதி மிஷ்கினால் பாடப்பட்ட ஒரு பாடல் திரையிடப்பட்டது. அந்தப் பாட்டு உண்மையிலேயே மனதை பாதித்தது. நிச்சயமா பெரிய அளவில் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் " என முடித்துக் கொண்டார்.

இயக்குனர் சசி :
" சில இயக்குனர்கள் தப்பா படம் பண்ணிடுவாங்க ஆனா என்னைக்கும் தப்பான படம் பண்ண மாட்டாங்க. அப்படித்தான் ராமையும் மிஷ்கினையும் பார்க்கிறேன். இன்னும் சொல்ல போனால் இந்த இரண்டு பேரும் தப்பான படங்களிலேயே பங்கேற்க மாட்டாங்கன்னு தான் சொல்லணும். அந்த நம்பிக்கையோடு தான் நான் இந்த படத்தையும் பார்க்கிறேன். இந்த இரண்டு ஆளுமைகளையும் மீறி ஆதித்யாவும் அரோல் கரோலியும் பின்னிட்டாங்க . இருவருக்கும் என்னோட வாழ்த்துகள்" 

இயக்குனர் ரஞ்சித் : 
" யாருக்கும் அடங்காத ஓநாய் மிஷ்கின் அண்ணா. தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் யாருக்குமே அடங்காதவர் இவர். அவரோட படமும் அப்படித் தான். ராம் அண்ணாவும் இதுல நடிச்சுருக்காரு ரொம்ப மகிழ்ச்சி. படம் மிகப்பெரிய வெற்றி பெறணும்னு ஆசைப்படறேன். அண்ணன் நல்லா இருக்கணும் "

நடிகர் நாசர் : 
' மிஷ்கினுக்கு என்னோட வாழ்த்துகள்.., எப்போதுமே ஓநாய்கள் கூட்டமா தான் இருக்கும். தனியா ஒரு ஓநாய் திரியுதுன்னா அது ரொம்ப திமிர் பிடிச்ச ஓநாயா தான் இருக்கும். மிஷ்கின் அப்படி ஒரு திமிர் பிடிச்ச ஓநாய். ஒரு கலைஞனுக்கு கண்டிப்பா அந்த ஞானத் திமிர் வேண்டும். அது இல்லைனா அவன் கலைஞனாவே இருக்க முடியாது. மிஷ்கினோட எல்லாப் படமும் எப்போதும் ரொம்ப ஆழமா இருக்கும். ஆனா இந்த படம் ஹியூமர் கலந்து இருக்கும்னு நினைக்குறேன். மிஷ்கினோட குழு எப்போதுமே ரொம்ப ஜாலியா இருக்கும். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள்"

ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் :
" மிஷ்கின் திடீர்னு எப்போவாச்சும் போன் பண்ணி ஐ லவ் யூ ன்னு சொல்லிட்டு கட் பண்ணிடுவான். அஞ்சாதே படத்தை பார்த்துட்டு மிஷ்கினுக்கு கூப்பிட்டேன். படம் முடிஞ்சு தியேட்டரை விட்டு வெளிய வரதுக்குள்ள கிளம்பி வந்துட்டான். அவனோட எல்லா படத்துலயும் ஒரு பாதிப்பை ஏற்படுத்திடுவான். கார்த்திக் என்னோட அசிஸ்டென்ட். அவன் கண்டிப்பா நல்லா பண்ணிருப்பாங்கிற நம்பிக்கை இருக்கு. எல்லோருக்கும் வாழ்த்துகள் "

இயக்குனர் ராம் :
" ஒரு மனிதன் இன்னொரு மனிதனை முதல் முதல்ல சந்திச்சா கை குடுப்பான். இல்லனா கட்டி பிடிப்பான். ஆனா முதல் முதல்ல நான் மிஷ்கினை சந்திச்சப்போ ஒரு நிகழ்ச்சியில உட்கார்ந்திருக்கேன். பின் சீட்டுலேர்ந்து யாரோ என் தலையை தடவி கொடுத்து சொறிஞ்சுகிட்டே இருந்தாங்க. திரும்பி பார்த்தா மிஷ்கின் உட்கார்ந்துட்டு இருக்காரு. அதுக்கப்புறம் எப்போலாம் நான் குழப்பமா இருக்கேனோ அப்போவெல்லாம் மிஷ்கினை பார்க்க போய்டுவேன். மிஷ்கினை பொறுத்தவரைக்கும் அவரிடம் ஒரு முரட்டு துணிச்சலும் அசாத்திய நம்பிக்கையும் இருக்கும். மிஷ்கின் ஒரு குங் ஃபூ கத்துகிட்ட  குங் ஃபூ பாண்டா. இந்த படம் ஆரம்பிச்ச சமயத்துல மிஷ்கின் ஆபிஸ்க்கு போயிருந்தேன். ஒரு படத்துல நடிக்க போறேன் காமெடி ஸ்க்ரிப்ட்னு சொன்னாரு. நான் அவருக்கு ரொம்ப தைரியம் சார். உங்கள காமெடியா வைச்சு காமெடி எடுக்கணும்னு நினைக்குறாருனு சொன்னேன். அப்படித்தான் இந்தப் படத்துல நடிப்பதற்கான சூழல் அமைஞ்சது. கற்றது தமிழ்ல தான் முதல் முதல்ல ஷூட்டிங் எப்படி இருக்கும்னே பார்த்தேன். அதே போல இந்த படத்துல இன்னொரு யூனிட்டோட ஷூட்டிங் எப்படி இருக்கும்னு பார்க்க்க முடிஞ்சது. சவரக்கத்தி ஆரம்பம் முதல் முடிவு வரை முழுக்க முழுக்க காமெடி நிறைஞ்சதா இருக்கும்.”

நடிகை பூர்ணா :
" தமிழ் படங்கள்ல ஆரம்பிச்சு எதுவும் சரியா போகாத தருணம். அப்போதான் சினிமாவுக்கு திறமை மட்டுமே போதாதுன்னு தெரிஞ்சுது. முழுக்க முழுக்க என்னோட டான்ஸ் பயிற்சிகள்ல இறங்கிட்டேன். அப்புறம் தெலுங்குல ஒரு படம் நல்லா போனது. தொடர்ந்து அங்கேயே நிறைய படங்கள் நடிச்சேன். தமிழ்ல வாய்ப்பு வரும்போதெல்ல்லாம் தவற விட்டுக்கிட்டே இருந்தேன். அப்புறம் தான் இந்த படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. டிரைலர் பார்த்த அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டு அழுதாங்க.”

இயக்குநர் மிஷ்கின் :

" தம்பி உடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க. ஆனா இவன தம்பியா வைச்சுகிறதுக்கு நான்தான் பயப்படணும். முதல்ல என்கிட்ட வந்து ஒரு ஸ்க்ரிப்ட் எழுதி தாங்கன்னு சொன்னான். சரி என்னமாதிரி வேணும்னு கேட்டேன். ஒரு காமெடி ஸ்கிரிப்ட் கொடுங்கன்னு சொன்னான். சரின்னு ஆரம்பிச்சதும் இதுல நீங்களே நடிச்சுடுங்கன்னு சொன்னான். சில காட்சிகள் எழுதியதும் எதுலயுமே கதையோட என்ன பொருத்தி பார்க்க முடியல. அப்புறம் தான் ராம் வந்தான். எல்லா விஷயத்துலயும் ராமை ரொம்ப பிடிக்கும். தமிழ் சினிமாவில் ராம் ரொம்ப அழகானவன். அப்புறம் தான் சுமத்திராங்கிற கேரக்டர் வந்துச்சு. ரொம்ப முக்கியமான கதாபாத்திரம். என்னோட அம்மாவை நினைச்சு எழுதினேன். ஆனா ஹீரோயின்ஸ்கிட்ட கேட்குறப்போ யாருமே ஒத்துக்கல. எல்லாம் ஓகே சார். ஆனா ரெண்டு குழந்தைங்க , வயித்துல ஒரு பத்து மாச குழந்தைன்னுலாம்  நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. எல்லோருக்குமே இன்னும் இருநூறு வருஷம் நடிக்க போறோம்ங்கிற எண்ணம் போல. பிறகு தான் பூர்ணா வந்தாங்க. அவங்க நடிச்ச படமெல்லாம் எடுத்து பார்த்தா எல்லாமே மொக்க படம். இதுல ஒரு அஞ்சு வயசு குழந்தை மாதிரி அவ்ளோ அழகா கேட்டுகிட்டு நடிச்சுருக்காங்க. ராம் ஒருபக்கம் காமெடி பண்ணுவாரு. நான் ரவுடித்தனம் பண்ணிட்டு இருப்பேன். நடுவுல பூர்ணா பத்து வயசு குழந்தையோடன்னு மூணு பெரும் படம் பூரா ஓடிக்கிட்டே இருப்போம். ஒரு ஸீன்ல நானும் ராமும் கட்டிப்பிடிச்சு சண்டை போட்டு அவருக்கு உண்மையிலேயே கால் உடைஞ்சுடுச்சு. அவ்ளோ ஈடுபாட்டோட நடிச்சான். ரொம்ப சூப்பரான படம் அப்படி இப்படினுலா சொல்ல மாட்டேன் .ஒரு நல்ல படம் அவ்ளோதான் குடும்பத்தோட பாருங்க. இது ஒரு ஒழுக்கமான படமா இருந்தா கண்டிப்பா ஓடும்! " 

சவரக்கத்தி ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியின் ஆல்பத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்

 

 



- க. பாலாஜி

படங்கள் : உ.கிரண்குமார் 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close