Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போடாத ட்விட்டுக்கு பொங்கிய நெட்டிசன்கள் - சமுத்திரகனி மறுப்பு!

சினிமா கட்டணம் குறித்து டிவிட்டரில் தாம் எதுவும் கருத்து சொல்லவில்லை என இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி மறுப்பு தெரிவித்துள்ளார். நேற்று இரவு 12 மணியளவில் சமுத்திரகனியின் பெயரில் உள்ள ட்விட்டர் அக்கௌன்ட்டில் இருந்து ஒரு ட்விட் வெளியிடப்பட்டது. 

 

 

 

 

 

 

"சினிமா டிக்கட்களின் விலை அடுத்த மாதம் முதல் ரூ.120லிருந்து ரூ.345க்கு உயரப்போகிறது. இரண்டாம் வகுப்பின் குறைந்த பட்சக்கட்டணமே ரூ.275 ஆக இருக்கும் அதிகபட்சம் பால்கனிக்கு ரூ.345 வரை இருக்கும்" என்று அதில் தெரிவிக்கபட்டது. 32000 பேர்களுக்கும் மேல்  சமுத்திரகனியின் பெயரிலிருக்கும் அந்த கணக்கை பின்தொடர்வதால் காலையில் அந்த ட்விட்டை பார்த்தவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே சினிமா கட்டணம் அதிகமாக உள்ளது என்கிற பேச்சு உள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் ஒரு விலை என்று நிர்ணயிக்கபடாத விலையால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. 

 

 

 

 

இந்நிலையில் மதிக்கத்தக்க வேடங்களில் நடித்து வரும் சமுத்திரகனியின் பெயரில் இப்படி ஒரு செய்தி பகிரப்படவும் இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சினிமாவில் தொடர்ந்து நல்ல கருத்தை கூறிவரும் நீங்களே இப்படியான கருத்தை தெரிவித்தால் திருட்டு சிடி விற்பனைதான் அதிகரிக்கும் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தமிழ் ராக்கர்ஸ் போன்ற புதுப்படங்களை உடனடியாக இணையத்தில் வெளியிடும் தளங்களுக்குத்தான் நன்மை செய்கிறீர்கள் என்றும், "டோரன்ட் இருக்க பயமேன்" என்றும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.  

இது பற்றி சமுத்திரகனி தரப்பில் கேட்டபோது " அவர் தற்போது ஷூட்டிங்கில் உள்ளார். முதலில் அவருக்கு ட்விட்டரிலோ பேஸ்புக்கிலோ எந்த கணக்கும் கிடையாது. அதிக வேலைப்பளுவினால் அதை பயன்படுத்தும் நேரமும் இல்லை. அவரின் பெயரில் விஷமிகள் யாரோ போலி அக்கௌன்ட்டை நடத்தி வருகின்றனர். இது தெரிய வந்தவுடன் சென்னை போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அது சமுத்திரகனி அவர்களின் ட்விட்டர் கணக்கும் அல்ல எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க மீண்டும் வற்புறுத்துவோம்" என்று தெரிவித்தனர். 

(இயக்குநர் சமுத்திரகனி கொடுத்த புகாரின் நகல்) 


சினிமா, அரசியல், விளையாட்டு என அனைத்து துறை பிரபலங்களின் பெயரில் முகநூலிலும், டிவிட்டரிலும் போலிகணக்குகள் நிறைய உள்ளன. இப்படி போலியான கணக்குகள் பிரபலங்களின் பெயரில் இருப்பதாலேயே #Verified என்கிற தகுதியை சமூக வலைத்தளங்கள் வழங்குகிறது. அந்தக்கணக்கை வைத்திருப்பவர்தான் மேற்படி பிரபலம் என உறுதிப்படுத்திய பின்னர் வழங்குகின்றன.  

-வரவனை செந்தில்
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close