Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“சாப்பாட்டுக்கு தான் சண்டை வரும்..!” - தல தீபாவளி கொண்டாடும் நடிகர் ஆரி-நதியா 

நடிகர் ஆரி-நதியாயின் திருமணம் 10 நாட்களுக்கு முன்பு நடந்திருந்தால் 2015ம் ஆண்டு தீபாவளியே அவர்களுக்கு தல தீபாவளியாக இருந்திருக்கும். 10 நாட்களில் தவற விட்ட தல தீபாவளிக்காக ஒரு வருடம் காத்திருந்து இந்த வருட தீபாவளியை கொண்டாடயிருக்கிறார்கள். அவர்களை சந்தித்து சிறிது நேரம் நினைவுகளை அசைபோட வைத்தோம்.

“நான் சத்தியமா லண்டன் பொண்னை கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சுக்கூட பார்க்கலை. எப்படி இது நடந்ததுனு இன்னும் என்னால நம்ப முடியலை. நான் நடிச்ச மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தை இவங்க பார்த்துட்டு அவங்க வீட்டில, நான் கல்யாணம் பண்ணுனா இந்த பையனை தான் பண்ணுவேன்னு விளையாட்டா சொல்லிருக்காங்க. அதுக்கப்புறம் இவங்களோட படிச்ச என்னோட ஃப்ரெண்ட்கிட்ட நான் நடிச்ச படத்தை பற்றி சொல்லிருக்காங்க. அப்போ அந்த படத்தோட ஹீரோ என்னோட ஃப்ரெண்ட் தான்னு அவரும் சொல்ல, அப்பறம் நாங்களும் நண்பர்கள் ஆனோம்” என்று ஆரி சொல்லும் போது குறுக்கிட்டார் நதியா.

“எங்களுக்குள்ள எப்போ காதல் வந்துச்சுன்னு தெரியலை. எங்க வீட்டுல எனக்கு பையன் பார்க்க ஆரம்பிச்சப்போ, ஏன் நாம கல்யாணம் பண்ணிக்ககூடாதுனு தோணுச்சு. அதுக்கப்பறம் எங்க வீட்டுல இதை சொல்லி, ஆரிக்கு பல டெஸ்ட் வச்சு அப்புறம் ஓகே பண்ணினாங்க” என்ற நதியாவிடம் சென்னை பிடிச்சிருக்கா என்று கேட்டதற்கு, “நான் லண்டன்ல இருக்கும் போது டூரிஸ்ட்டா சென்னைக்கு வரும் போதே சென்னை எனக்கு பிடிச்சிருந்தது. கல்யாணத்துக்கு அப்புறம் சென்னையிலையே செட்டில் ஆகும் போதுதான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. இப்போ செட்டாகிடுச்சு” என்றவரிடம், ‘உங்களுக்குள்ள சண்டை வந்தா முதல்ல யார் சாரி கேட்பா..?’ என்று தேரை அவிழ்த்தோம். 

 

“இதற்கு நான் பதில் சொன்னா நல்லாயிருக்காது, நதியாவே சொல்லட்டும்” என்று நகர்ந்தார் ஆரி. சிரித்தப்படியே பேச ஆரம்பித்த நதியா,“எங்களுக்குள்ள எப்போ சண்டை வந்தாலும் ஆரி தான் முதலில் சாரி சொல்லுவார். ரொம்ப ஸ்வீட் பர்ஷன் ஆரி. என்னை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிறார். நான் சென்னைக்கு புதுசுனு எனக்கு தோணவே தோணாது. அந்த அளவுக்கு என்னை வசதியா ஃபீல் பண்ண வைப்பார்” என்றவரிடம், ‘எந்த விஷயத்திற்காக உங்களுக்குள் சண்டை வரும்’ என்று ஆரியிடம் கேட்டோம்.

“சாப்பாட்டு விஷயத்துல தான் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும். நான் தமிழ்நாட்டு பாரம்பரியமான சாப்பாடு தான் கேட்பேன். அவங்க லண்டன் வகையறா சாப்பாடு தான் அதிகம் செய்வாங்க. அதுனால அப்போ அப்போ சண்டை வரும். ஆனால் எவ்வளவு சண்டை வந்தாலும் ஆண்கள் முதலில் சாரி கேட்டுட்டா பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்னு பல மேதாவிகள் எனக்கு அறிவுரை கொடுத்ததால் அதை இன்று வரை ஃபாலோ செய்கிறேன்” என்று கலகலப்பாக பேசியவரிடம் தல தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல் என்று கேட்டோம். 

“சென்ற வருட தீபாவளியை காதலர்களாக கொண்டாடினோம். இந்த வருட தீபாவளி, தல தீபாவளி என்பதால் நாங்க இரண்டு பேரும் ஸ்ரீலங்கா போகலாம்னு ப்ளான் பண்ணியிருக்கோம். அங்க போய் எங்க தீபாவளியை செமையா கொண்டாடுவோம்” என்று முடித்தனர், ஆரி மற்றும் நதியா. 

- மா.பாண்டியராஜன்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close