Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷாரூக் தந்த ஷார்ப் பதில்களின் தொகுப்பு! #HBDShahRukh

பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான் பிறந்தநாள் இன்று. அவரது படங்கள் போலவே ஆளும் செம கலாட்டா. அவரிடம் சில நிகழ்ச்சிகளிலும், பேட்டிகளிலும், ட்விட்டரிலும் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு ஷாரூக் சொன்ன கலாய் பதில்களின் தொகுப்பும், கீழே ஒரு சர்ப்ரைஸும் உங்களுக்காக காத்திருக்கிறது...!

1. காலையில் எழுந்து பார்க்கும் போது நீங்க அமிர்கானா இருந்தா என்ன பண்ணுவீங்க?

"ஷாரூக் கான் தான் என்னை விட சிறந்த நடிகர்"னு நான் இந்த உலகத்துக்கு சொல்லுவேன்.

    

2. அப்பாவா ஆனது உங்கள் சினிமா வாழ்க்கைய பாதிக்கிறதா?

ஆமா நிறையவே. அதனால தான் என்னுடைய ஹீரோயின்கள நான் குழந்தைகள் போல நடத்தறேன். அவங்கள தூக்கிக்கறேன், அரவணைக்கறேன், அவங்கள பேபினு கூப்பிடறேன்.

  

3. உங்களுக்கும் சல்மானுக்குமான உறவு நல்ல படியா தான் இருக்கா?

ஆமா, அது ரொம்ப நல்லா போகுது. சீக்கிரமே குழந்தை பெத்துக்க திட்டமிட்டிருக்கோம்.

4. ட்விட்டரில் ஒரு பெண்: நீங்க தான் என்னுடைய முதல் காதல்...

ஓ... நல்ல சாய்ஸ்!

  

5. நீங்க பை-செக்‌ஷுவலா?

இல்ல நான் ட்ரை செக்‌ஷுவல். எல்லாத்தையும் ட்ரை பண்ணுவேன்.

 

6. எப்போ நீங்க வித்தியாசமான படங்களில் நடிப்பீங்க?

நீங்க எப்போ வித்தியாசமான கேள்விகள் கேட்க ஆரம்பிக்கறீங்களோ அப்போ.

 

 

7. உங்களுடைய அடுத்த படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குவீங்க?

புது ப்ளேஸ்டேஷன் வாங்கப் போதுமான அளவு.

   

8. பெண் நிருபர்: KBC -3 க்கு நீங்க அதிக சம்பளம் வாங்கியிருக்கதா சொல்றாங்களே, எவ்வளவு தான் வாங்குறீங்க?

நீங்க இந்த கேள்விய இன்னொரு முறை கேட்டீங்கன்னா, உங்களுடைய வயசு என்ன?னு நான் கேட்ருவேன் மேடம்.

   

9. நீங்க இவ்வளவு அழகா இருக்கீங்களே, இதுக்குப் பின்னால எதாவது காரணம் இருக்கா?

"என்னங்க பண்றது? நான் பொறந்ததே இப்படித் தான்".

 

10. நீங்க பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க, தினமும் காலையில் எழுந்தரிக்கும் போதே இப்படித் தான் இருப்பீங்களா?

ச்சே சே.. இல்ல தினமும் காலைல எழுந்ததும் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிப்பேன்.

 

11. பெண்களுடைய மைண்ட ரீட் பண்ண டிக்‌ஷனரி எதாவது இருக்கா?

நிச்சயமா, அதுக்குப் பேர் லிசனிங் (listening).

 

12. எப்படி இவ்வளவு அழகான முடிய மெயிண்டைன் பண்ணுறீங்க?

ரபுன்ஸல் (நீள முடியுள்ள கார்டூன் பாத்திரம்) உபயோகிக்கும் அதே ஷாம்பூ தான் நான் யூஸ் பண்றேன், அதனாலதான். 

 

13. ஏன் நீங்க அடிக்கடி உங்கள சிறந்தவர்னு சொல்லிக்கறீங்க?

இதை நான் கூட நம்பலைனா வேற யார் நம்புவா?

14) பெரிய ஸ்டாரா இருக்கறது எப்பிடி ஃபீல் பண்றீங்க?

எப்போ எல்லாம் நான் பெரிய ஸ்டாருன்னு ஃபீல் பண்றேனோ அப்போ எல்லாம் அமெரிக்கா கிளம்பி போயிடுவேன். அங்க தான் அவமனப்படுத்திட்டே இருப்பாங்க.

"தட் சர்ப்ரைஸ்" சிறுவயது ஷாரூக்:

 

தொகுப்பு: பா.ஜான்ஸன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்