Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கத்தி சண்டை' விழாவில் வடிவேலு - சூரி இணைந்து கலக்குவார்களா?

'தலைநகரம்' படத்தில் 'நாய் சேகர்', 'மருதமலை' படத்தில் ' 'என்கவுன்ட்டர்' ஏகாம்பரம் என்று வடிவேலுவுக்கு ஸ்பெஷலாக விதவிதமான கேரக்டர்கள் அமைத்து  நடிக்க வைத்தவர், டைரக்டர் சுராஜ். இப்போது விஷால்  நடிக்கும் 'கத்திச் சண்டை' படத்தில்  வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். முதலில் வடிவேலு - சூரி இணைந்து நடிக்கும் வித்தியாசமான காமெடிக் காட்சிகளின் திரைக்கதை வசனத்தை தயார் செய்து வைத்திருந்த சுராஜ் வடிவேலுவை சந்தித்து அந்தக் காட்சிகளை விவரித்து இருக்கிறார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டார் வடிவேலு. அப்போது ' ஒண்ணு செய்யுங்க... முதல் பாதி படத்துல அவர் நடிக்கட்டும். பின்பாதில நான் நடிக்கிற மாதிரி என் டிராக்கை மாத்தி ரெடி பண்ணுங்க' என்று வடிவேலு தெளிவாக விளக்கிச் சொல்ல, எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டு ’ஒ.கே' சொல்லிவிட்டு திரும்பினாராம் இயக்குனர் சுராஜ்.

இந்த இடத்தில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக். சுந்தர்.சி. இயக்கத்தில் மாதவன் நடித்து வெளிவந்த திரைப்படம் 'ரெண்டு". இந்தப் படத்தில்தான் முதன்முதலாக அனுஷ்கா ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார். 'ரெண்டு' முதல் பிரின்ட் முழுமையாக முடிந்து பிரசாத் லேப் தியேட்டரில் வடிவேலுவுக்கு ஸ்பெஷலாக திரையிட்டுக் காட்டினார் சுந்தர்.சி. முதல் பாதியில் தான் நடித்த காட்சிகளை ரசித்துப் பார்த்தார் வடிவேலு. இடைவேளையில் எல்லோரிடமும் சிரித்து அரட்டை அடித்து மகிழ்ந்த வடிவேலு அடுத்து இரண்டாம் பாதியைப் பார்க்க இருக்கையில் அமர்ந்தார்.

இடைவேளைக்கு பிறகு நகைச்சுவை காட்சிகளில் சந்தானம் தலையைக் காட்ட... அம்புடுதேன்! ஏனோ கோபமானவர் பிரிவியூ தியேட்டர்  இருக்கையைவிட்டு எழுந்து விறுவிறுவென வெளியேறிவிட்டார். பின்னர் சுந்தர்.சி - விவேக் கூட்டணி அமைந்து சில படங்களில் இணைந்து நடித்தனர். அதன்பின் சுந்தர்.சி அனுப்பிய சமாதானப் புறாவை வடிவேலு ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில், ‘கத்திச்சண்டை’’ படத்தில் வடிவேலுவும், சூரியும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படத்தில் கிடையாது என்றொரு தகவல் உலவி வந்தது. ஆனால், 'ஒரே ஒரு காட்சியில் மட்டும் வடிவேலுவும், சூரியும் இணைந்து நடித்து இருக்கிறார்கள்' என்று இயக்குனர் சுராஜ் அறிவித்து இருந்தார். இதை சிலர் ரசிக்கவில்லை. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விஷால், வடிவேலு, சூரி நடிக்கும் 'கத்தி சண்டை' படத்தின் டீஸர் வெளியீடு இன்று நடக்கிறது. அந்த விழாவில் வடிவேலுவும், சூரியும் ஒரே மேடையில் தோன்றுவார்களா என்று எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்தச் சூழ்நிலையில் 'டீஸர் விழாவில் சிலர் கலந்து கொண்டால் நான் வரமாட்டேன் என்று விஷாலிடமும், சுராஜிடமும் வடிவேலு கறாராகச் சொல்லி விட்டதாக செய்திகள் பரவிவருகிறது. அது உண்மையா... அல்லது வடிவேலு அனைவருடனும் ராசியாகி மேடை ஏறுவாரா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்!

 - சத்யாபதி

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close