Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பைரவா 16 கோடி, ரெமோ 8 கோடி, கொடி 5 கோடி..! களை கட்டும் சாட்டிலைட் பிசினஸ்

 

 

 'இனிமேல் சாட்டிலைட் பிசினஸ் கிடையாது... புதுப்படங்களை வாங்க மாட்டோம்' என்று டிவி சேனல்கள் அறிவித்தபோது தமிழ் சினிமா உலகமே தவித்துப் போனது. குறிப்பாக  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பரிதவித்துப் போனார்கள். ஆனால், இப்போது அரசல் புரசலாக புதுப்படங்களை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி சேனல்கள் விலைக்கு வாங்க ஆரம்பித்து விட்டன. ஆனாலும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டும்தான் கிராக்கி. சின்ன பட்ஜெட் படங்களுக்கு மதிப்பில்லை. 'வலியவன்' படத்துக்கு வெறும் 5 லட்சம் கேட்டிருக்கிறார்கள். 'அய்யோ... வேண்டவே வேண்டாம் சாமீ..' என்று விலகி ஓடியிருக்கிறார்கள். 


 பிரமாண்ட சேனல் ஒன்று தனுஷ், திரிஷா நடித்த 'கொடி' படத்தை சுமார் 5 கோடிக்கு வாங்கியிருக்கிறதாம். அதுவே சிவ கார்த்திகேயனின் ’ரெமோ'வுக்கு 12- கோடிக்கான பேச்சு வார்த்தை நடந்ததாம். ஆனால், ஆளும் தரப்புடன் புகைச்சல் வேண்டாம் என 12 கோடியை நிராகரித்துவிட்டு அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமான சேனலுக்கு சுமார் 8 கோடி ரூபாய்க்கு படத்தின் உரிமை கைமாறவிருக்கிறதாம்.


 பொதுவாக விஷால் நடித்த படம் 3 கோடி ரூபாய்க்கு மேல் சாட்டிலைட் உரிமை போகாது. ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின் வடிவேலு நடித்த விஷால் படமான 'கத்தி சண்டை'க்கு 6 கோடி ரூபாய் விலை பேசியிருக்கிறதாம் பிரமாண்ட சேனல். ஆனால், அதற்கு ஒரு நிபந்தனையும் உண்டு... சேனல் தயாரிக்கும் 1 மணி நேர நிகழ்ச்சியில் வடிவேலு இலவசமாக வந்து நடித்துக் கொடுக்க வேண்டும் என்பதே அது. அதற்கும் சேர்த்துதான் அந்த விலையாம். வடிவேலுவும் அந்த நிபந்தனைக்கு சரி சொல்லிவிட்டாராம். 


விஜய் தற்போது நடித்து வரும் 'பைரவா' படத்துக்கு அந்த சேனல் நிர்ணயித்திருக்கும் விலை எவ்வளவு என கணிக்க முடிகிறதா..? 16 கோடி ரூபாயாம்!? 


- சத்யாபதி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close