Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கரன்சி திட்டத்தை வரவேற்கிறேன்... ஆனால், அந்தப் பாட்டியின் வேதனை... குழந்தையின் மரணம்..!’ - கலங்கும் விஜய்

 

நவம்பர் 8ம்தேதி இரவு, பிரதமர் மோடி நாட்டில் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துகள் உலவி வருகின்றன. ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பிரதமர் மோடியின் இந்த முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில் இன்று நடிகர் விஜய் முதன்முறையாக இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: 

‘எல்லாருக்கும் வணக்கம். மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு உண்மையிலேயே நல்ல விஷயம்தான். நல்ல முடிவுதான். உண்மையிலேயே நம்ம நாட்டுக்குத் தேவையான, துணிச்சலான, வரவேற்கக்கூடிய ஒரு முயற்சிதான். கண்டிப்பா இது நம்ம நாட்டோட பொருளாதாரத்தை உயர்த்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

ஒரு நோக்கம் பெரிசா இருக்கும்போது, அதற்கான பாதிப்புகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனா என்னன்னா, அந்த பாதிப்புகள், நோக்கத்தைவிட அதிகமா ஆகிவிடக்கூடாதுங்கறதை நாம பாத்துக்கணும்னு நெனைக்கறேன். சில விஷயங்கள் தவிர்த்திருக்கலாம்னு ஒரு சின்ன ஃபீல் எனக்கு இருக்கு. ஒரு குறிப்பிட்ட சதவிகித மக்கள் சாப்பிட முடியாம, மருந்து மாத்திரை வாங்க முடியாம சிரமப்படறதா சொல்றாங்க. அதைத் தவிர்த்திருக்கலாம்னு தோணுது. நாலைஞ்சு நாட்களா இருந்த அந்த பதற்ற நிலை இப்ப குறையுதுன்னும் சொல்றாங்க. சின்னச் சின்ன தொழில் பண்ற வியாபாரிகள், தியேட்டர்கள், மார்க்கெட் இந்த மாதிரி தேவையில்லாம இவங்கள்லாம் பாதிக்கப்படறாங்களோன்னு ஒரு சின்ன ஃபீல்தான்.

அது மட்டும் இல்ல. நான் நியூஸ்ல நிறைய விஷயம் பார்த்தேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.. என்னன்னா, ஒரு பாட்டி பேத்தியோட கல்யாணத்துக்காக தன் நிலத்தை வித்து அந்தப் பணத்தைக் கொண்டு  வர்றாங்க. பணம் செல்லாதுன்னு கேள்விப்பட்ட உடனே, தற்கொலை செய்யற அளவுக்குப் போறாங்க. இன்னொரு சம்பவத்துல, ஒரு பிறந்த குழந்தைக்கு ஏதோ பிரச்னை. அங்கயும் பணம் வாங்காததால, டிரீட் பண்ண முடியாம அந்தக் குழந்தை இறந்து போயிடுது. இந்த மாதிரி சில விஷயங்களை தவிர்த்திருக்கலாமோன்னு தோணுது.

நாட்டுல ஒரு 20% பணக்காரங்க இருப்பாங்களா? அதுல ஒரு க்ரூப் பண்ற தவறுக்காக பாக்கி 80% எளிய மக்கள் என்ன பண்ணினாங்கன்னு கேட்கத் தோணுது. நான் திரும்பத் திரும்ப சொல்றேன். இதுவரைக்கும் யாரும் பண்ணாத, யாரும் பண்ண யோசிக்காத, சிறப்பான பெரிய முயற்சிதான் இது. அதுல எந்த மாற்றமும் இல்லை.. எந்த தவறும் இல்லை. ஆனா இப்டி ஒரு பிரச்னைக்கு தீர்வு காணும்போது, அமல்படுத்தும்போது, என்னென்ன பிரச்னைகள் வரும்னு முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு அதுக்கான முன்முயற்சிகளை எடுத்துப் பண்ணிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்குமோ அப்டிங்கறதுதான் என்னுடைய மிகத் தாழ்மையான கருத்து. 

ஆனா இன்னைக்கு கொஞ்சம் நிலைமை சீராகுதுன்னு சொல்றாங்க. சில தினங்களுக்கு முன் இருந்த சிரமம் குறையுதுன்னு சொல்றாங்க. ஆனாலும் இன்னும் கிராமங்கள்ல சில சிரமங்கள் இருக்கு. சீனியர் சிட்டிசன்ஸுக்கு சின்ன முக்கியத்துவம் குடுத்து அவங்களுக்கு இருக்கற கஷ்டங்களை சீக்கிரமாவே மத்திய அரசு தீர்த்தா நல்லாருக்கும்’

-இவ்வாறு விஜய் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். 

ரஜினி முதல் பலரும் கருத்து தெரிவித்து ஓய்ந்த நிலையில், இன்றைக்கு விஜய்யும் தன் பங்குக்கு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பில் தனது கருத்தைப் பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

-சத்ரியன்

 

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close