Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விளம்பரங்களில் சுஜாதா பெயரைச் சேர்த்த சைத்தான் படக்குழு!

சைத்தான்

ஆனந்தவிகடனில் 1992-ல் சுஜாதா எழுதி, தொடர்கதையாக வந்த கதை ‘ஆ..!’. விஜய் ஆண்டனி நடிப்பில்,   பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியாக இருக்கும் சைத்தான் திரைப்படம், ‘ஆ’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இதைக்குறித்து சுஜாதாவின் ‘ஆ’ நாவலுக்கும் ‘சைத்தான்’ படத்துக்கும் என்ன லிங்க்?  என்ற தலைப்பில் இயக்குநரின் விளக்கத்துடன் ஒரு கட்டுரை பதிவிட்டிருந்தோம்.

ஆ நாவலின் கதாபாத்திரப் பெயர்கள் உட்பட எல்லாமே அப்படியே சைத்தான் படத்தின் இருந்தாலும், படத்தின் பிற்பகுதிகளில் சில மாற்றங்கள் செய்திருப்பதாக இயக்குநர் நேற்று தெரிவித்தார். சுஜாதா இருந்திருந்தால் இப்படி பெர்ஃபெக்டாக படமாக்கியிருக்கியிருக்கிறீர்கள் என்று பாராட்டித்தான் இருப்பார் என்று காட்சிகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. ஆனால் சுஜாதா வாசகர்களுக்குத்தான் புலம்ப ஒரு விஷயம் இருக்கிறது. இதற்கு முன்னர் வெளியிட்ட டிரெய்லர் முடிவில் உள்ள பெயர்களிலோ, இந்த ஃபுல் டைட்டில் ஓடும் வீடியோவில் எந்த இடத்திலுமோ சுஜாதா பெயரைக் காணமுடியவில்லை. ஒருவேளை படத்தின் ஆரம்பத்தில் நன்றியோ, இந்த நாவலைத்தழுவி எடுக்கப்பட்டது என்றோ போடக்கூடும் என்று நினைத்திருந்தோம். இயக்குநரிடமும் இது குறித்து பேசியபோது

‘ப்ரோ.. நானும் பெரிய சுஜாதா வாசகன்தான். உங்களை மாதிரியே நானும் அவரை மிஸ் பண்றேன்.  ‘ஆ’ படிச்சதுமே பிடிச்சு, அதுல இருந்து சில பகுதிகளை எடுத்துதான் இந்தப் படத்தை எழுதினேன். முன்னாடியே சுஜாதா ரங்கராஜன் மேடத்தை பார்த்து அனுமதியும் வாங்கிட்டோம். இசை வெளியீட்டு விழாவுலயும் ‘சுஜாதா சார் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது’ன்னு குறிப்பிட்டோம். ஆனா, வெறும் 9 நிமிஷம்தான் வந்திருக்கு ப்ரோ. அப்பறமா விஜய் ஆண்டனி சாருக்கு தகுந்த மாதிரி, நிறைய மாற்றங்களோட செம்ம கமர்ஷியலா வந்திருக்கு படம்.  முழுசா பார்ப்போமே..  நம்ம எல்லாருக்குமே பிடிக்கும். பாருங்க”

“சரி.. சுஜாதா சார் பேர் போடுவீங்கதானே..?’

“நிச்சயமா... அவர் நாமல்லாம் பேர் போட்டு சொல்ற உயரங்களையெல்லாம் தாண்டி எங்கயோ நிக்கறார் ப்ரோ!’

-என்றிருந்தார். 

நேற்று இதுகுறித்து கட்டுரை வெளியான நிலையில், இன்று வெளியான தினசரி விளம்பரங்களில் சுஜாதா பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. 

சைத்தான்

உண்மையாகவே சுஜாதா இதையெல்லாம் எதிர்பார்க்கிறவர் அல்ல, ‘மையமாக’ சிரித்துவிட்டுப் போய்விடுவார் என்றாலும் சுஜாதா வாசகர்கள் இணையத்தில் இதுகுறித்து பேசி வந்தார்கள். படக்குழுவினரின் இந்த முடிவு அவர்களுக்கு சின்ன மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. 

 

-பரிசல் கிருஷ்ணா

 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close