Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ் சினிமாவில் இந்த மீனவர் ஸ்பெஷல் பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா? #மீனவர்தினம்

மீனவ

இன்று உலக மீனவர் தினம்.  75 வருட தமிழ் சினிமா தமிழ் மக்களின் பண்பாடுகளை  அதன் களத்திலிருந்து பதிவு செய்து கொண்டிருக்கிறது.  அப்படி நாம் பார்த்து, ரசித்து, தெரிந்து கொண்ட மக்களின் வாழ்வியலில் மீனவர் வாழ்க்கையும் ஒன்று. மீனவர்களை அவர் தம் வாழ்வியலை காட்டும் பல தருணங்கள் பாடல்களாகவே அமைந்திருக்கின்றன. அதிலும் காதலை, காதலின் துயரங்களை, காத்திருத்தலை, காதலின் கொண்டாட்டங்களை கூட  மீனவப் பாடல்கள் வழியே நமக்கு கடத்தியிருக்கிறார்கள் நம் கோலிவுட் டீம். அப்படி தமிழகம் கேட்டு ரசித்து கொண்டாடிய மீனவப் பாடல்கள் சிலவற்றை பார்ப்போம். 

சித்திர செவ்வானம் சிவக்க கண்டேனே! 

ஜெயச்சந்திரனின் குரலில் இளையராஜாவின் இசையில் மெருகேற்றும் காதல் பாடல் இது. காதலி தன் மேல் வைத்திருக்கும் பாசத்தை, எளிமையாய், அவளின் அழகை வர்ணித்து பாடும்  பாடல். எளிமை மனிதர்களின் சுவையான காதலை மீனவப் பாடல் வழியாக எழுதியிருப்பது வேறு யாருமல்ல, திரைத்தொண்டர் பஞ்சு அருணாச்சலம் அவர்கள் தான். காற்றினிலே வரும் கீதம் என்ற படத்தில் வரும்  அந்த பாடல் இதோ உங்களுக்காக!

 

நீல சேலை கட்டிக்கொண்ட சமுத்திர பொண்ணு!

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற காதலுனுக்காக காத்திருக்கும் காதலியை பார்த்து தோழி பாடும் பாடல் இது! ஏலேலோ ஏலே ஏலே லோ என்ற இந்த பாடலை பாடிய சுஷீலா அவர்களின் குரலுக்கேற்ப சாவித்ரி  காட்டும் முக பாவங்கள் நம்மை மயக்கிவிடும்.  

"வலையை வீசி கயிறு போட்டு வளைக்கவில்லையா?

 நதி வந்து வந்து உன் உடலை கலக்கவில்லையா?" என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் கே.வி. மாகாதேவன் இசையில் காதலின் கடலில் மூழ்க வைக்கும் பாடல் இதோ!

 

 

தரை மேல் பிறக்க வைத்தான்!

மீனவர்களின் துயரத்தை அவர்களின் அன்றைய நிலையை  எடுத்துரைத்த பாடல் இது. எம்.ஜி.ஆர் அவர்கள், கையில் பறையை  வைத்துக் கொண்டு இசைக்கும் இப்பாடலை கேட்டால் கல் நெஞ்சத்தவரும் கலங்கி விடுவார்கள். கடலை தங்கள் வீடாக கருதும் மக்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் இப்பாடலை விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் இசையமைத்திருக்கிறார்கள். 

"உலகத்தின் தூக்கம் கலையாதோ?

உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ?
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ?
ஒரு நாள் பொழுதும் புலராதோ?" 

என்று கவிஞர் வாலி எழுதியிருக்கும் மனதை உருக்கும் பாடல் இதோ!

 

 

கடலிக்கணர போனோரே!

தமிழ் மக்கள் அதிகம் கேட்டு கொண்டாடிய  மிக முக்கியமான மலையாள பாடல் இது. செம்மீன் என்னும் தகழி சிவசங்கரன் எழுதிய மீனவ மக்களின் வாழ்க்கை எதார்த்தத்தை முன்னிறுத்திய நாவலை தழுவி எடுக்கப்பட்ட படத்தில் வரும் பாடல் இது. நாவலை போலவே, எதார்த்தம் குறையாமல் எடுக்கபட்டிருந்ததால் இப்படம் மக்களிடம் அதிகம் பேசப்பட்டது. இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அதுவும் இப்பாடல் வெளிவந்த நாளில் கிராமங்களின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. ஒவ்வொரு பாடலையும் இசையமைப்பாளர் சலில் சௌத்ரி, மீனவர்களின் இசைக்கேற்ப அமைத்திருப்பார். இன்றளவும் மீனவர்களின் பாடல் என்றாலே மனதில் தோன்றும் பாடல் இதோ...  

 

காதலுக்கு மரியாதையில் அய்யா வூடு, சிட்டிசனில் மேற்கே முளைத்த சூரியனை, மரியான், சுறா - என எம்ஜிஆர் தொடங்கி விஜய், அஜித் வரை நடித்த ஏராளமான பாடல்கள் உண்டு. எல்லா பெரிய ஸ்டார்களுமே தங்கள் கரியரில் ஒரு முறையாவது மீனவராக நடித்திருக்கிறார்கள்.

-அ.அருணசுபா

(மாணவ பத்திரிக்கையாளர்)

MUST READ

எடிட்டர் சாய்ஸ்