Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்டைலா.. கெத்தா... 2016-ல் கவனம் ஈர்த்த திரைப்பட வசனங்கள்! #Rewind2016

2016-ம் ஆண்டு வெளிவந்த சில படங்களில் இயல்பான, எளிமையான வசனங்களால் அழுத்தமான உணர்வுகளைக் கடத்தி கவனம் பெற்றது. 'கபாலி','ஜோக்கர்', 'மாவீரன் கிட்டு' போன்ற படங்களில் இருந்த வசனங்கள் இன்றைய பின்னணி அரசியலை உணர்த்தியது என்றால், 'தோழா', 'அச்சன் என்பது மடமையடா' போன்ற சில படங்களின் வசனங்கள் லைக்ஸ் குவித்தது. அப்படி 2016-ம் ஆண்டில் வசனங்களாலும் கவனம் ஈர்த்த படங்களின் தொகுப்பு  இது. 

குறிப்பு  : படங்களில் ரிலீஸ் ஆன  வரிசையில் உள்ளது. ரேங்க் அடிப்படையில் இல்லை.

விசாரணை : 

உன்னை, குற்றவாளியைக் கண்டுபிடிக்கவா சொன்னேன்... கேஸை முடிக்கத்தானே சொன்னேன்.

அட சும்மா இருங்க சார்... கோட்டால உள்ளே வந்துட்டு, சிஸ்டம் புரியாமப் பேசிக்கிட்டு!

எத்தனை வருஷமா டிபார்ட்மென்ட்ல இருக்கீங்க, இன்னும் ‘தொழில்’ கத்துக்கலையே..!

 

பிச்சைக்காரன் : 

நம்பிக்கையின் பலமே முழுசா நம்புறதுல தான் இருக்கு.

அவங்க உள்ளே போய் முதல்ல சாமிகிட்ட பிச்சை எடுப்பாங்க. பிறகு, வெளியே வந்து நமக்குப் பிச்சை போடுவாங்க
ஏந்துற கை என்னைக்கும் ஓங்காது.

 

தோழா : 

ஒரே ஒரு செகண்ட்ல என் லைஃப் வெறும் ஞாபகமா மாறிடுச்சு.

மனுஷன் போற இடத்துக்கு எல்லாம் மனசு போகாது 

ப்ரேயர்ல சைலன்ஸ் ஓ.கே., பார்ட்டில என்ன சார் சைலன்ஸ்?

நேசம் இருக்கும் இடத்தில் பயம் இருக்கும்

 

இறைவி : 

பொறுத்துக் கிறதுக்கும் சகிச்சுக்கிறதுக்கும் நாம என்ன பொம்பளையா... ஆம்பளை!

ஆண் நெடில்; பெண் குறில்.

எப்பவும் நாம பேசக் கூடாது. நம்ம எடுத்த படம் பேசணும்.

கருவுல இருக்கற குழந்தையை தள்ளி வெச்சுட்டு இன்னொரு குழந்தை பெத்துக்குவியா?

எனக்கு ஒரு குழந்தை இருக்கு. ஆனா யாரும் என்கிட்ட லவ்வை சொன்னதில்ல.

 

அப்பா : 

உங்க குப்பைகளை எல்லாம் பிள்ளைக மேல திணிக்காதீங்க. 

உனக்கு ஒரு விஷயம்  சொல்ல முடியும்னு நினைச்சா, அதை செய். சொல்ல முடியாதுன்னா நினைச்சா அதை செய்யாத. 

விவசாய நாடாகிய நம்ம நாட்டுல காப்பற்றபட வேண்டிய கட்டாயத்தில் இருப்பது விவசாயம் தான். 

நாம இருக்கற இடம் தெரியாம இருந்துட்டுப் போய்டணும்டா. 

 

கபாலி : 

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. 25 வர்ஷம் முன்னாடி கபாலி எப்டி போனானோ அப்டியே திரும்ப வந்துட்டேனு சொல்லு!

பறவையை பறக்கவிடு... வாழ்வா? சாவானு அது முடிவு பண்ணட்டும்!

தமிழ் படங்களில் இங்க மரு வைச்சுகிட்டு, மீசை முறுக்கிட்டு, லுங்கி கட்டிகிட்டு.. நம்பியார் 'ஏய் கபாலி'னு அப்படினு சொன்னதும் குனிஞ்சு சொல்லுங்க எஜமான் அப்படி வந்து நிப்பான்னு அந்த கபாலினு நினைச்சியாடா? கபாலிடா...

உன்னோட கருணை, சாவைவிடக் கொடூரமானது. 

கனவுல வர்ற பிரச்னை எல்லாம் கண்ணைத் திறந்தா முடிஞ்சிடுற மாதிரி வாழ்க்கை இருந்தா எப்படி இருக்கும்?

காந்தி சட்டையைக் கழட்டினதுக்கும் அம்பேத்கர் கோட் மாட்டினதுக்கும் பின்னாடி அரசியல் இருக்கு. 

நான் முன்னுக்கு வரதுதான் உனக்கு பிரச்னைன்னா, முன்னுக்கு வருவேன்டா... கோட், சூட் போடுவேன்டா...  கால் மேல கால் போட்டு உட்காருவேன்டா... ஸ்டைலா... கெத்தா....  

 

ஜோக்கர் : 

நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்டுல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?

சகாயம் பண்ணுங்கனு சொல்லலை... சகாயம் மாதிரி பண்ணுங்க!

ஒருத்தியோட அன்புக்குச் சமானமா இந்த உலகத்துல எதுவுமே இல்லை.

கோபம் வந்துச்சு... பகத்சிங்கை அவுத்துவிட்ருவேன் பாத்துக்க‌!

கொடுமை என்னன்ன, நாம யாருக்காக போராடரமோ, யாருக்காக சாகிறோமோ, அந்த மக்களே நம்மை காமெடியனா பாக்கறது தான்.

மேகி-யை‬ தடை பண்ணினா சீனாவுக்கு பிடிக்கல. ‎குளிர்பானத்த‬ தடை பண்ணினா அமெரிக்காவுக்கு பிடிக்கல. ஹெலிகாப்டரா பார்த்து‬ ஏன் கும்பிடுறீங்கனு அமைச்சர்கிட்ட சொன்னா ஆளுங்கட்சிக்கு பிடிக்கல. ‎அரைநாள்‬ உண்ணாவிரத்த்துக்கு 10 ஏர்கூலரானு கேட்டா எதிர்கட்சிக்கு பிடிக்கல.

 

ஆண்டவன் கட்டளை :

வேலைக்கு விசுவாசமா இருக்கறதா.. வேலைக்குச் சேர்த்துவிட்டவனுக்கு விசுவாசமா இருக்கறதா?

வெள்ளக்காரன் இருக்குற வரை காந்தி உயிரோட தான்டா இருந்தாரு.

சம்பாத்தியம் பண்றது லண்டன்லயும், சவுதிலயும். ஆனா முஸ்லீமுக்கும்., கிறிஸ்தவனுக்கும் வீடு தர மாட்டாங்களா?

படிச்சா டாக்டர்தான் ஆகமுடியும். படிக்கலைன்னா மெடிக்கல் காலேஜ் கட்டி கல்வித்தந்தையே ஆகலாம்.

தமிழ்நாட்ல தமிழ்ல பேசுனா பிரச்சினை. 

 

கொடி : 

நீங்க பொழப்புக்கு அரசியல்வாதி...நான் பொறந்ததுல இருந்தே அரசியல்வாதி. 

எல்லோரும் பொறக்கும்போது சிங்கிள்தான். நான் அப்பவே டபுள்ஸ். 

சேர்ந்தா தான் கூட்டம். சேர்த்தா அது கூட்டம் இல்ல. 

 

காஷ்மோரா :

காரண காரியம் இல்லாமல் இங்கே எதுவும் நடப்பது இல்லை காஷ்மோரா.

 

அச்சம் என்பது மடமையடா :

எனக்கு பசங்க பொறந்தாங்கனா, இந்த ஆறு பன்ச் பத்தியும் அந்த நாலு பேர் பத்தியும் சொல்லணும்.

லைஃப்ல எது வேணுன்னா நடக்கலாம். அதுக்கு நாம ரெடியா இருக்கோமாங் கிறதுதான் கேள்வி.

செத்துருவேன்ற பயத்துல தான் ‘ஐ லவ் யூ'ன்னு சொன்னேன்... டைமிங் வேணுன்னா தப்பா இருக்கலாம். ஆனா மேட்டர் கரெக்ட்தான். 

 

மாவீரன் கிட்டு : 

அதிகாரத்துல இருக்கிறவங்களைத் தப்பு சொல்லல. அதிகாரமே தப்புன்னுதான் சொல்றோம்

ஆண்டாண்டு காலமா அடிச்சுட்டு இருக்கான், திருப்பி அடிச்சா திமிருங்குறான்!

விட்டுக்கொடுத்து போகச் சொல்றீங்க. விட்டுகிட்டேதான் இருக்கோம், அவங்க எப்போ கொடுப்பாங்கனு தெரியலை.

இதை சட்ட விரோதம்னு சொல்றீங்க, ஆனா, சட்டமே எங்களுக்கு விரோதமா இருந்தா, நாங்க என்ன செய்யமுடியும்?

சாப்பிடற சோத்துல கல்லு வந்து எரிச்சல்படுத்தறா மாதிரி, அவனுங்க எதையோ செஞ்சிக்கிட்டே இருக்காங்கள்ல.

 

தொகுப்பு : நா.சிபிச்சக்கரவர்த்தி

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close