Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வி.ஐ.பி படத்துல இந்த லாஜிக் தப்பை கவனிச்சுருக்கீங்களா?

லவ் ஃபெயிலியர்னா தாடி வைக்கணும், லவ் சக்ஸஸ்னா ட்ரீட் வைக்கணும்னு பல அரிய கண்டுபிடிப்புகளைலாம் தமிழ் சினிமா சொல்லிக் கொடுத்து  வெச்சிருக்கிற மாதிரி இந்த சிமென்ட் கம்பெனி விளம்பரம், சினிமாலாம் பார்த்து சிவில் இன்ஜினீயர்னாலே மஞ்சள் கலர் ஹெல்மெட்தான் போடணும்னு மனசுல பதிய வெச்சுட்டாங்க. 

திலேயும் குறிப்பா தனுஷ் நடிச்ச 'வேலையில்லா பட்டதாரி'  படத்துல அம்புட்டு இன்ஜினீயர்களுமே மஞ்சள் கலர் சிங்குச்சான்னுதான் வந்து நிற்பாங்க. அதுலதான் அப்படினா இப்போ 'வேலையில்லா பட்டதாரி 2' னு ஒரு போஸ்டர் விட்டாங்க. அதுலேயும் அதே மஞ்சள் கலர் ஹெல்மெட்டைப் போட்டுக்கிட்டு வந்துதான் போஸ் கொடுத்துருக்காரு தனுஷ். ஒரே வித்தியாசம் என்னன்னா அதுல அமலாபால் இதுல பழைய 'தங்கத்தாமரை மகளான' கஜோல். அம்புட்டுதான்.

ஹெல்மெட்

ப்போ என்னா மேட்டர்னா அந்த மஞ்சள் கலர் ஹெல்மெட்டுங்கிறது இன்ஜினீயர்களுக்குக் கிடையாதுங்கிறதுதான். ஆமாங்க சைட் கான்ட்ராக்டர்களோட வசதிகளுக்கு ஏற்ற மாதிரி அக்ரீமென்ட் டாக்குமென்ட்டில் என்ன சொல்லிருக்காங்களோ அதை வெச்சுதான் ஊருக்குள்ள சில பேர் ஃபாலோ பண்ணிட்டு இருக்கிறாங்க. அதைத்தான் நாமளும் பார்க்கிறோம். ஆக்சுவலா சிவில் கன்ஸ்ட்ரக்‌ஷனைப் பொறுத்தவரைக்கும் இந்தந்த வேலை செய்றவங்க இந்தந்த கலர்ல உள்ள ஹெல்மெட்டைதான் கட்டாயம் பயன்படுத்தணும்னு விதிகளே இருக்குதாம் பாஸு. தெரிஞ்சவங்களுக்கு ஓகே. ஒருவேளை தெரியாதவங்க இருந்தாங்கனா அவங்களுக்காகதான் இந்த லிஸ்ட். அந்த லிஸ்ட்டைப் பார்த்தா...

வெள்ளை கலர்  ஹெல்மெட்டை கன்ஸ்ட்ரக்‌ஷனில் இருக்கிற மேனேஜர்ஸ், ஃபோர்மேன்கள், இன்ஜினீயர்கள் அப்புறம் சூப்பர்வைசர்கள் உபயோகிக்கணுமாம். பச்சை கலர்ல உள்ள  ஹெல்மெட்டைப் பாதுகாப்பு ஆய்வாளர்களும், பழுப்பு கலர் ஹெல்மெட்டை வெல்டர்கள் மற்றும் உயர் வெப்பநிலையான வேலைகளில் ஈடுபடுறவங்க பயன்படுத்தணும். தச்சு வேலைகளைச் செய்றவங்க, மத்த டெக்னிகல் வொர்க் பார்க்கிறவங்க அப்புறம் எலக்ட்ரிக் வேலை பார்க்கிறவங்கள்லாம் நீல நிறத்தினால் ஆன ஹெல்மட்டை யூஸ் பண்ணணும்.

ஹெல்மெட்

சைட்டைப் பார்க்க வர்ற விசிட்டர்களுக்கு சாம்பல் கலர் ஹெல்மெட் கொடுக்கணும். லேபர்ஸ் சில நேரம் அதை மிஸ் பண்ணிட்டோ, மறந்துட்டோ வந்துட்டாங்கனு வைங்க, பிரச்னையே இல்லை .அவங்க பிரைட்டான பிங்க் கலர் ஹெல்மெட்டைக்கூட அந்த நேரத்துல யூஸ் பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமாம். கலர்ல என்ன வித்தியாசம் எதைப் போட்டா என்னன்னுதானே யோசிக்கிறீங்க. அதுதான் இல்லை. ஒவ்வொரு ஹெல்மெட்டும் அவங்கவங்க பார்க்கிற வேலைக்கு தகுந்த மாதிரி டிசைன் பண்ணிருப்பாங்க.. உதாரணத்துக்கு ஹீட் அதிகமான வெல்டிங் வேலை பார்க்கிறாங்கனா அவங்களுக்கு ஹீட்டைத் தாங்குற மாதிரியாக அதை டிசைன் பண்ணிருப்பாங்க. இப்படி ஒவ்வொருத்தவங்களுக்கும் இருக்கு.

னுஷ் போட்ட அந்த மஞ்சள் ஹெல்மெட்டை அப்போ ஆக்சுவலா யாருதான் போடணும்னா, பொது லேபர்ஸ், ஜே.சி.பி ஆபரேட்டருங்க, அப்புறம் பொக்லைன், புல்டோசர் ஆபரேட்டருங்க மாதிரியான எர்த் மூவர்ஸுக்குதான் அந்த ஹெல்மெட்டாம். ஹ்ம்ம்.. இதெல்லாம் தெரியாமதான் மஞ்சள் ஹெல்மெட் போட்டுட்டு வந்தாங்களா இல்லை, இன்ஜினீயர்களுக்குதான் வேலை கிடைக்கலையே பாஸு அதைக் குறியீடாகச்  சொல்லத்தான் பொது லேபர்ஸுடைய ஹெல்மெட் கலர்லேயே வந்துட்டோம் னு சொல்ல வர்றாங்களான்னுதான் தெரியலை மக்களே...

- ஜெ.வி.பிரவீன்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close