Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிம்புவுக்கு இவங்க எல்லாரும் சீனியர்ஸ்! கோலிவுட் புல்லட் பாண்டீஸ்

என்னமோ சிம்புவும் மஞ்சிமாவும்தான் பைக் சவாரியையே கண்டுபிடிச்சவங்க மாதிரி அந்த ரவுசு பண்ணிக்கிட்டு இருக்குறாங்க சில AYM ஃபேன்ஸ். அதே புல்லட்டை வச்சு ஆல்ரெடி நம்ம ஹீரோக்கள்லாம் ஊருக்குள்ள ரைடு போயிக்கிட்டும் வந்துக்கிட்டும்தான் இருக்குறாங்க. சும்மா ஒரு ரீவைண்ட் ரைட் போயிட்டு வருவோமா... இதுலயும் குறுக்க குறுக்க வராம இந்த 'தள்ளிப்போகாதே' க்ரூப்பெல்லாம் கொஞ்சம் அங்கிட்டுத் தள்ளிப்போங்கய்யா.

புல்லட்

து கிரீடம் படத்துல பல்சரை (த்ரிஷாவை அப்படித்தாங்க அந்தப்படத்துல சொல்லுவாங்க) புல்லட்ல ஏத்திட்டுபோற விழியில் உன் விழியில் பாட்டு. சோலாவா போயிருந்தா ஃப்ரேமுக்குள்ளேயே சிக்காம பறந்திருப்பாரு அஜீத். ஹ்ம்ம் என்ன பண்ணுறது, த்ரிஷாவும் நமக்கு முக்கியம்ல!

பைக் ரைடுன்னா இந்தப்பாட்டு ஞாபகத்துக்கு வரலைனா எப்படி? படம் முழுக்க வந்த ஜோதிகாவை மறந்தாலும் மறந்திருப்பாங்க. கமாலினி முகர்ஜியை யாரும் மறந்திருக்கவே மாட்டாங்க. காலர் டியூன்லயும் ரிங்டோன்லயும் கதறோ கதறுன்னு கதறுன பாட்டா இல்லையா!

முழங்கால் செத்தவன்தான் பஸ்ல கம்பியைப்பிடிச்சுக்கிட்டு வருவான். நாங்கள்லாம் சிறுத்தை அதுவும் கறுஞ்சிறுத்தைன்னு வடிவேலு சொல்லுறமாதிரி ஓட்டத்தெரியாதவன்தான் கண்ணைத்தொறந்துக்கிட்டு ஓட்டுவான். நானெல்லாம் கண்ணைக் கட்டிக்கிட்டே ஓட்டுவேன் மக்களே..ன்னு கெத்தா ஸ்டைலா அந்த புல்லட்டை ஓட்டிக்கிட்டு வருவாரு 'நெறஞ்சமனசு' விஜயகாந்த். ஹ்ம்ம் சிலபேருக்கு திறந்துக்கிட்டு ஓட்டும்போதே மஞ்ச லாரி கண்ணுக்குத் தெரியலையாம். கெரகத்த!

'மன மன மா மென்டல் மனதில்' பாட்டை ஸ்க்ரீன்ல பார்க்குறப்போதான் லைட்டா தலைவலிக்கிறமாதிரி இருக்கும். மத்தபடி இது நல்ல பாட்டுங்க. லிவிங்க் டு கெதர்,  ஜாலியான வேலை, நல்ல சம்பளம், கையில புல்லட், புல்லட் ல பொண்ணு இதைவிட ஜாலி ரைடு போக வேற என்ன வேணும்? எல்லாமே ஓக்கேதானே பாஸு?

ட்டணத்துக்குப் போயி படிச்சிட்டு எப்பயாச்சும் ஊருக்கு வந்து சின்ராசோட டூயட் பாடிட்டு போறதையே வேலையாக வச்சிருக்கும் லவ்வரை, வண்டியிலே ஏத்தி வச்சு சுத்துறதையே வேலையாக வச்சிருக்கும் சின்ராசு ஊரையே ரவுண்ட் அடிக்க கூட்டிக்கிட்டுப்போற இந்த பைக் ரைடைத்தான் மறந்துடுவீங்களா என்ன? (உங்களை எப்படி சுத்தவிட்டேன் பாத்தீங்களா?)  அதுக்கப்புறம் அதே வண்டியில தேவயானியைக்கூட்டிக்கிட்டு வர்றது வேற கதை!

- ஜெ.வி.பிரவீன்குமார்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close