Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகை பாவனாவுக்கு பாலியல் துன்புறுத்தல் - வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!

பாவனாபிரபல தென்னிந்திய நடிகை பாவனாவிடம் சிலர் தகாத முறையில் நடந்து கொண்டது கேரள திரையுலகை மிகுந்த பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது. பாவனா மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகை. தமிழில்  சித்திரம் பேசுதடி, தீபாவளி, அசல் ஆகிய படங்கள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நேற்று (17.02.2017) இரவு 9 மணி அளவில் கேரளா, அங்கமாலியில் உள்ள அதானி என்ற ஊரில் இருந்து கொச்சிக்கு சென்று கொண்டிருக்கும்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கமாலியில் காரை மறித்து ஏறிக்கொண்ட சிலர், அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். புகைப்படங்கள் மற்றும் வீடியோவும் எடுத்துள்ளனர்.

காரில் ஏறிய அவர்கள், கார் ஓட்டுநரை மிரட்டி தொடர்ந்து ஓட்டிக்கொண்டு செல்ல வற்புறுத்தியுள்ளனர். வழியில் பலரிவட்டம் என்ற ஊரில் இறங்கி, வேறு வாகனத்தில் தப்பித்துச் சென்றிருகிறார்கள்.

அதானிக்கும் பலரிவட்டம் என்ற ஊருக்கும் சுமார் 25 கிலோ மீட்டர் தூரம். கிட்டத்தட்ட 40-45 நிமிடங்கள் அவர்கள் காரில் இருந்து, பாவனாவைத் துன்புறுத்தி, அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகத் தெரிகிறது. 

பலரிவட்டத்தில் இருந்து அருகில் உள்ள காக்கிநாட் என்கிற ஊரில் உள்ள இயக்குநர் ஒருவரது வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவங்களை விளக்கியுள்ளார் பாவனா. அவர் உடனே காவல்துறையைத் தொடர்பு கொண்டு புகார் அளித்ததன் பேரில், போலீஸார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். நேற்றிரவு நடந்த இந்த சம்பவம் குறித்து,  நடிகரும் கேரள எம்.பி.யுமான இன்னசண்ட் அதிர்ச்சியாகி டி.ஜி.பியைத் தொடர்பு கொண்டு விசாரணையை முடக்கிவிடக் கோரினார்.

போலீஸார் விசாரணைக்குப் பிறகு அதிர்ச்சிகரமான திருப்பமாக, பாவனாவை ஏற்றிக் கொண்டு வந்த டிரைவரும் சம்பவத்திற்கு உடந்தை என தெரிய வந்துள்ளது. 

பாவனா வந்த வாகனம், அவர் கலந்து கொண்ட ஷூட்டிங்கிற்குப் பிறகு, படப்பிடிப்புக்குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட வாகனம். அதானி அருகே டெம்போ டிராவலர் ஒன்றில் வந்தவர்கள், அதிலிருந்து இறங்கி, காரை மறித்து ஏறி இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர். பாவனாவிடம் விசாரித்தபோது சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் சுனில் என்பவரும் இருந்ததாகக் கூறியுள்ளார்.

சுனில், வழக்கமாக நடிகர், நடிகைகளுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்கிற பணியில் இருக்கிறார். பாவனாவின் வாகனத்தை ஓட்டிவந்த, டிரைவர் மார்ட்டினையும் சுனில்தான் அனுப்பியுள்ளார். இதன் அடிப்படையில், போலீஸார்,  கார் டிரைவர் மார்ட்டினின் அழைப்புகளைப் பரிசோதித்தபோது அவரிடம் இருந்து சுனிலுக்கு அழைப்புகள் சென்றுள்ளதாக தெரிந்தது. கிட்டத்தட்ட  20 அழைப்புகளுக்கு மேல் அவர்கள் இருவருக்கும் இடையில் நிகழ்ந்ததை அறிந்தனர். மார்ட்டின், சுனிலுக்கு சில மெசேஜ்களும் அனுப்பியது தெரியவந்தது. பாவனாவும், வாகனம் ஓட்டும்போது மார்ட்டின் ஃபோனில் யாருக்கோ மெசேஜ் அனுப்பியதைக் கவனித்ததாகக் கூறினார்.  இதன் அடிப்படையில் மார்ட்டினை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, ‘பாவனா பயந்துபோய் விடுவார்.. இதைப்பற்றிப் பேசமாட்டார். இந்த விஷயத்தை காவல்துறை வரை கொண்டு செல்வார் என்று குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எதிர்பார்க்கவில்லை’ என்று கூறினர். 

சம்பந்தப்பட்ட சுனில் தலைமறைவாகி உள்ளார். அவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். படப்பிடிப்புக் குழுவினர் ஏற்பாடு செய்யும் வாகனங்கள் குறித்தும், அதன் டிரைவர்களின் நம்பகத்தன்மை குறித்தும் திரையுலகினர் இப்போது அச்சமடைந்து விவாதித்து வருகின்றனர். இந்நிலையில்,  இரவு 9 மணிக்கு, நகரம் பிஸியாக இருக்கும்போதே இந்த சம்பவம் நடந்ததில் இருந்து, ‘காவல்துறை சோதனைகள் சரிவர நடைபெறுவதில்லை என்பது தெளிவாகி உள்ளது’ என்று எதிர்க்கட்சிகள் இந்தச் சம்பவத்தைக் கையில் எடுத்துள்ளது. 

- சத்ரியன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
[X] Close