Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்கள் சூப்பர்ஸ்டார் தெரியும், நேச்சுரல் ஸ்டார், கோல்டன் ஸ்டார் எல்லாம் தெரியுமா?

முன்னொரு காலத்தில் ஒரு ட்ரெண்ட் இருந்தது. ரெண்டு படம் நடிச்சு முடிச்சதும் பேருக்குப் முன்னால சோலார் ஸ்டார், நெப்ட்யூன் ஸ்டார், ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்னு பட்டம் போட்டுக்கறது. சமீபத்தில் மக்கள் சூப்பர்ஸ்டார் சர்ச்சையானதை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ்ல மக்கள் செல்வன் வரைக்கும் பார்த்தாச்சு. மற்ற எல்லா மொழிகளும் லிஸ்டு பெருசா நீளும். இப்போதைக்கு தெலுங்கு கன்னடத்தில் மட்டும் யாருக்கு என்ன பேரு?னு ஒரு லுக் விடலாம்.

'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி, 'பவர் ஸ்டார்' பவன் கல்யாண், 'ப்ரின்ஸ்' மகேஷ் பாபு இதெல்லாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். இவங்களுடைய பெயர் எல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்களா?

யங் டைகர் - ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்.டி.ஆர் படம் முழுக்க ஃபைட்டர்ஸ பறக்கவிட்ட சமயத்தில் உதயமானது தான் இந்தப் பெயர். 

NTR

யங் ரெபல் ஸ்டார் - பிரபாஸ்

பிரபாஸ் படத்தை விட ஃபைட் சீன்களை ரசிக்க கூட்டம் வந்த கதை எல்லாம் உண்டு. பின்னால 'ரெபல்'னு டைட்டில் வெச்ச படத்தில் கூட நடிச்சார். கன்னடத்தில் ஒரு ரெபல் ஸ்டார் இருக்கதால, நாம யங் ரெபல் ஸ்டார் ஆகிட்டோம்.

Prabhas

ஸ்டைலிஷ் ஸ்டார் - அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜுனுடைய முதல் நான்கு படங்கள விட்டுட்டு பார்த்தீங்கன்னா எதுக்காக இந்த பேருன்னு தெரியும். ஒவ்வொன்னுலையும் ஹேர்ஸ்டைல், ட்ரெஸ்ஸிங் ஸ்டைல்னு எதை எடுத்தாலும் ஸ்டைல் தான்.

Allu Arjun

நேச்சுரல் ஸ்டார் - நானி

இவர் நடிப்பு ரொம்ப நேச்சுரலா இருக்கும் அதனால தான் நேச்சுரல் ஸ்டார். அப்பாடி சமாளிச்சாச்சு!

Nani

மெகா பவர் ஸ்டார் - ராம் சரண்

சிம்பிள், அப்பாகிட்ட 'மெகா'வையும், சித்தப்பாகிட்ட 'பவர் ஸ்டார்'ஐயும் எடுத்து கோர்த்தா மெகா பவர் ஸ்டார் ரெடி.

Ram Charan

கிங் - நாகர்ஜுனா

கமர்ஷியல், பயோகிராபிகல், காமெடி, ரொமான்ஸ்னு எல்லாத்திலும் பூகுந்து விளையாடுவார். எல்லாமே சக்சஸ் ஆகறதால இந்தப் பெயரா இருக்கலாம்.

Nagarjuna

மாஸ்மஹாராஜா - ரவிதேஜா

ஆரம்பத்தில் நடிக்கவே லாயக்கு இல்லாத முகம்னு பல அவமானங்களையும் கடந்து வந்து, பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டா கொடுத்த டைம்ல வெச்ச பேரு தான் இது.

Ravi Theja

ராக்கிங் ஸ்டார் - மனோஜ் குமார் மஞ்சு

வேலைக்கு ஆகுதோ இல்லையோ, எல்லா படத்திலும் சண்டை போடக் கூடிய ஆள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஃபைட் சீன் இருந்ததா? ஆனா, அதனுடைய தெலுங்கு ரீமேக் கரென்ட் தீகா படத்தில் ஃபைட் சீன் வெச்சு நடிச்ச 'ராக்கிங் ஸ்டார்' மனோஜ் குமார்.

Manoj

எனர்ஜிடிக் ஸ்டார் - ராம்

என்ன கதையா இருந்தாலும் இவருடைய கேரக்டர் டிசைன் மட்டும் மாறவே மாறாது. துருதுருனு இருக்கும் ரோல் தான் இருக்கும். இவ்வளவு கஷ்டப்பட்டு இப்ப ஒரு எனர்ஜிடிக் ஸ்டார் ஆகியிருக்கார்னா, அது சும்மா இல்ல. அதுக்குப் பின்னால அவ்வளோ எனர்ஜி இருக்கு.

Ram

கீழ்காணும் ஸ்டார்களுக்கு ஏன் அந்த பெயர் வந்தது என உங்களுக்கு காரணம் தெரிந்தால் கூறவும். ஏன்னா ஹாட்ரிக் ஸ்டாருக்கு காரணம் கண்டுபிடிக்கலாம், கோல்டன் ஸ்டாருக்கெல்லாம் என்ன காரணம் சொல்றது?

அபிநய சக்ரவர்த்தி - 'கிச்சா' சுதீப்

Sudheep

ரியல் ஸ்டார் - உபேந்திரா

Upendra

ஸ்டைலிங் ஸ்டார் - சிவ ராஜ்குமார்

SRK

பவர் ஸ்டார் - புனித் ராஜ்குமார்

PRK

ஸ்டைலிஷ் லவ்லி ஸ்டார் - ப்ரேம்

Prem

ராக்கிங் ஸ்டார் - யாஷ்

Yash

சேலஞ்சிங் ஸ்டார் - தர்ஷன்

Dharsan

ரோரிங் ஸ்டார் - ஸ்ரீமுரளி

Srimurali

கோல்டன் ஸ்டார் - கணேஷ்

Ganesh

...

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close