Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`விரைவில் சினிமா டிவி சேனல் தொடக்கம்' - விஷாலின் அடுத்த ஆக்‌ஷன்

மே 31- ம் தேதி முதல், தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி அமைப்பு, விநியோகஸ்தர்கள், திரையரங்கச் சங்கங்கள் என சினிமாவைச் சார்ந்த அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து  சினிமா ஸ்டிரைக் நடத்தி ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையே ஓர் உலுக்கு உலுக்கும்விதத்தில் கேரவேனில் அமர்ந்து ஆறஅமர திட்டம் போட்டது விஷால் குழு.

‘`முதலில் தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்காமல், விஷால் தன்னிச்சையாக எடுக்கும் சினிமா ஸ்டிரைக் போராட்டத்தை ஆதரிக்க மாட்டோம். சினிமா திரையரங்கங்கள் உரிமையாளர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள்’’ என்று, சென்னை திரையரங்கச் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதனும், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியனும் இணைந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

சினிமா - விஷால்

அடுத்த நாளே அபிராமி ராமநாதனைத் தொடர்புகொண்ட விஷால்,  பிரகாஷ்ராஜ் மற்றும் தன் குழுவினரோடு அபிராமி ராமநாதனையும் அழைத்துக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கோட்டையில் சந்தித்து, கோரிக்கை மனு கொடுத்தார். உடனே தன் அறையிலிருந்து தகவல் துறைச் செயலாளரை அழைத்து, அனைத்து கோரிக்கைகளையும் ஆவண செய்யும் வேலையில் இறங்குமாறு ஆணையிட்டார் எடப்பாடி. அறையைவிட்டு  வெளியே வந்தவுடன் ‘`மே 31-ம்தேதி, திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடத்துவது உறுதி. அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்'' என்று விஷால் சொல்லச் சொல்ல, சுற்றியிருந்தவர்களுக்குச் சுழன்றடித்தது ஷாக். 

விஷால் நடத்தும் ஸ்டிரைக்கால் பெரிதும் பாதிக்கப்படப்போவது சினிமாவில் தினக்கூலி சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்தும் பெப்சி தொழிலாளர்கள்தான். கடந்த காலங்களில் இதுபோன்ற சூழ்நிலையில் சினிமா ஸ்டிரைக் நடந்தபோது ஏற்பட்ட நெருக்கடிகள் ஏராளம். எனவே, `மே-31 அன்று நடக்கவிருக்கும் ஸ்டிரைக்கில் பெப்சி அமைப்பு கலந்துகொள்ளுமா?' என்று அதன் தலைவர் செல்வமணியிடம் கேட்டோம். ‘‘விஷால் நடத்தும் ஸ்டிரைக்கில் பெப்சி அமைப்பு நிச்சயம் பங்குபெறும்'' என்று பதில் சொன்னார்.

``எங்கள் சங்கம் பெப்சி அமைப்பின் கீழ்தான் இயங்குகிறது. செல்வமணி எடுக்கும் முடிவுகளுக்கு, தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கட்டுப்பட்டுச் செயல்படும்’’ என்று திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் கூறினார்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விஷால் தலைமையில் இயங்கும் குழு, அடுத்த கட்டமாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் சினிமா டிவி சேனல் ஒன்றைத் தொடங்கத்  திட்டமிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் வெளிவரும் அத்தனை படங்களின் பாடல்கள், டிவி ரைட்ஸ் அனைத்தையும் சினிமா டிவி சேனல் மட்டுமே ஒளிபரப்பும். பிரபலமான வேறு சேனல்களுக்கு, புதுப்படங்களின் எந்த உரிமையும் வழங்கப்படமாட்டாது. சினிமா டிவி-யின் துணை சேனல்களாக ‘சினிமா மியூசிக் டிவி' திரைப்படப் பாடல்களை மட்டுமே 24 மணி நேரமும் ஒளிபரப்பும். அதேபோல ‘சினிமா ஃபங்ஷன் டிவி' என்ற சேனல் சினிமாவில் நடக்கும் விழாக்களை ஒளிபரப்பு செய்யும். சினிமா தொடர்புடைய நிகழ்ச்சிகளில் வேறு சேனல்கள் பங்குபெற அனுமதியில்லை. புதுப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், ஷூட்டிங் ஸ்பாட் என அனைத்து நிகழ்ச்சிகளுமே சினிமா டிவி சேனலில் மட்டுமே ஒளிபரப்பப்படும் என்பதில் தெளிவாகவும் தீவிரமாகவும் தீர்க்கமான முடிவெடுக்கத் தீர்மானித்துள்ளது விஷால் அணி. இனிமேல் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாள்களில் ‘சினிமா டிவி-யில் மட்டுமே நடிகர், நடிகைகளின் பேட்டிகள் இடம்பெறும் என்ற புதிய திட்டத்துடன் களம் இறங்கப்போவதுதான் விஷாலின் அடுத்தகட்ட ஆக்‌ஷன். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close