Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கபடி வெளையாடுற படத்துக்கு ஏன் 'கில்லி'னு பேர் வெச்சீங்க டைரக்டர்ஸ்..?!

சினிமாவில் சில நேரம் டைட்டில்னு ஒண்ணு வைப்பாங்க. ஆனா படம் அதுக்கு கொஞ்சம்கூட  சம்பந்தமே இல்லாம இருக்கும். அப்படி வந்த பல  படங்களில் சில... 

கில்லி

* சிவகார்த்திகேயனும் ஹன்சிகாவும் நடிச்ச படம் ‘மான்கராத்தே’. சினாகானா டுபாக்கூரான பீட்டர்ங்கிற கேரக்டர்ல படத்துல பாக்ஸிங் விளையாடுவாரு. இவர்தான் இது ஆடுறாரு, ஒரிஜினல் பீட்டராவது கராத்தே ஆடுவாரானு பார்த்தா அவரும் வந்து அந்த பாக்ஸிங்கைதான் விளையாடுவாரு.  எல்லோருமே பாக்ஸிங் விளையாடுற படத்துக்கு ‘மான் கராத்தே’னு எதுக்குய்யா பேரு வெச்சீங்க? பாக்ஸிங்னுகூட டைட்டில் வைக்க வேணாம். அட்லீஸ்ட் `மான் பாக்ஸிங்'னாவது வெச்சுருக்கலாம்ல?

* 'மகளிர் மட்டும்'னு ஒரு படம். ரேவதி, ஊர்வசி, ரோஹிணினு பலபேரு நடிச்சிருப்பாங்க. மேட்டர் அது இல்ல. கமல், நாகேஷ், நாசர்னு ஆண்களும்தான் அந்தப்படத்துல நடிச்சிருப்பாங்க. ஆனா படத்துக்கு மகளிர் மட்டும்னு டைட்டில் வச்சிருப்பாங்க. மகளிர் மட்டும்னா மகளிர்மட்டும்தானே மக்களே நடிச்சிருக்கணும். ஹ்ம்ம் இப்ப திரும்பவும் மகளிர் மட்டும்ற அதே பேர்ல ஜோதிகா நடிச்சு அடுத்து ஒரு படம் வருதாம். அதுலயாவது மகளிர் மட்டும் இருக்குறாங்களான்னு பார்ப்போம்.

டைரக்டர்ஸ்

* விஜய்யும் த்ரிஷாவும் சேர்ந்து நடிச்ச படம் ‘கில்லி’. விஜய் படம் முழுக்க டான்ஸ் ஆடுவாரு, ஊர்  ஊராப் போயி கபடி ஆடுவாரு, மிளகாய்ப்பொடியைத் தூவிவிட்டு வில்லன்களைப் பந்தாடுவாரு. இந்தப்பக்கம் இன்ட்ரோ சாங்க் கொடுத்து த்ரிஷா கூட ஒரு பாட்டு ஆடிருப்பாங்க. ஆனா ஒரு சீன்லகூட டைட்டில்ல சொன்ன அந்த கில்லியை ஆடவே மாட்டாங்க. கபடி ஆடுற படத்துக்கு எதுக்கு கில்லினு பேரு வெச்சீங்க? கபடினு தானே பாஸ் வைக்கணும்?

* சிங்கீதம் சீனிவாசன் இயக்கத்துல கமல்ஹாசன் நடிச்சு வெளிவந்த ஒரு படத்தின் பெயர்  'பேசும் படம்'. ஆரம்பத்துல இருந்து கடைசிவரைக்கும் படத்துல  யாரும் பேசியிருக்கவே  மாட்டாங்க. ஆனா பாருங்க படத்துக்கு 'பேசும் படம்'னு வச்சுருப்பாங்க. யாருமே பேசாத ஒரு  படத்துக்கு எதுக்கு 'பேசும் படம்'னு பேர் வச்சாங்க. ஆக்சுவலா பேசாத படம்னு தானே பாஸ் வைக்கணும்?

கில்லி

* அட நம்ம ஊர்லதான் இப்படி இருக்குதுனு பார்த்தா, அங்கே கூட பல படங்கள் வந்திருக்குது பாஸ்.  எக்ஸாம்பிளுக்கு ஜாக்கிசான் நடிச்ச ‘கராத்தே கிட்’ படத்தைக்கூட எடுத்துக்கங்க.அந்தப்படம் முழுக்க குங்ஃபூ தான் விளையாடுவாங்க. ஆனா பாருங்க, படத்துக்கு வெச்சுருக்கிற பேரு என்னவோ  'கராத்தே கிட்'. ஹ்ம்ம்.. இந்தமாதிரி இன்னும் பல படங்கள் இருக்குது. புதுசு புதுசாக வந்துக்கிட்டும் இருக்குது. இதுக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா டைரக்டர்ஸ்..?!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close