Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“மீம்ஸ்லாம் போதும்... நான் ஃபீல்ட விட்டே போயிடவா?!” - ‘சரவணன் மீனாட்சி’ ரச்சிதா

கண்களை உருட்டிக் கோபப்படுவதும், கண்கள் கவர காதலில் விழுவதும், அம்மன் வேடத்தில் முறைப்பதும்... என, டிவி ப்ரியர்களின் ஃபேவரைட் ஆகிவிட்டார் ‘சரவணன் மீனாட்சி’ ரச்சிதா​​​​​​​. சின்னத்திரையின்  லவ்வர் கேர்ள் இவர். பெங்களூரு பொண்ணு தமிழ் பேசக் கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், இப்போது முத்து முத்தாக எழுதவும் செய்கிறார். “உங்க பெயர் என்ன சொல்லுங்க, எழுதிக்காட்டுறேன்”  என்று   சிரிக்கிறார் ரச்சிதா​​​​​​​. விஜய் தொலைக்காட்சி விருதில் இரண்டாவது முறையாக  ஃபேவரைட் நடிகைக்கான விருதும் பெற்றுவிட்டார்.  

ரச்சிதா

ஒரு பக்கம் ரசிகர்கள் இவரைக் கொண்டாடுகிறார்கள்; மறுபக்கம் இவரைக் கலாய்த்து மீம்ஸ் போடுகிறார்கள். இதற்கெல்லாம் சரியான விளக்கம் அவரால் மட்டுமே தர முடியும் என்பதால், அவரிடமே பேசினேன். 

 

“சீரியலில் நடிக்கும் நடிகைகளின்மீது அன்பைக் கொட்டிக்கொடுக்கும் ரசிகர்கள், இந்த ஊர்ல மட்டும்தான் இருக்காங்க. ஜீ தமிழ் சேனலில் ஒரு நிகழ்ச்சிக்கு நடுவரா இருக்கேன். என்னோடு மீனா மேடமும் இருப்பாங்க. ரசிகர்கள் என்கிட்ட வந்து ஊர் கதையெல்லாம் பேச ஆரம்பிச்சுடுறாங்க. அவங்க விட்டுல நானும் ஒருத்தியா இருக்கேன்னு நினைக்கிறதே வேற லெவல் ஃபீல். ரசிகர்களுக்கு நிறையவே நான் கடன்பட்டிருக்கேன்.  எனக்கு என் ரசிகர்கள்தான் எல்லாமே. அவங்க பாராட்டு, எனக்கு மிகப்பெரிய போதை. 

இந்தத் துறையில் பெருமைப்படுறதைவிட, பொறாமைப்படுறவங்கதான் அதிகம். என் முன்னாடியே நிறைய பேர் பேசியிருக்காங்க. நான் ஃபீல்டைவிட்டுப் போயிடணும்னு நினைக்கிறாங்க. ஏன்னா, நான் நல்லா நடிக்கிறேன். நிறைய வாய்ப்புகள் குவியுதுங்கிறதுதான் காரணம்.

இங்கே உண்மையான பாராட்டு ரசிகர்களிடமிருந்து மட்டும்தான் வருது. இதுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டுச் சொல்றேன். என்னோட இன்ஸ்டாவில் ஐந்தாயிரம் ஃபாலோயர்ஸ்தான் முதல்ல இருந்தாங்க. இந்த ஒரு மாதத்துல மட்டும் 85 ஆயிரம் ஃபாலோயர்ஸ் வந்துட்டாங்க. அதனாலேயே எப்போதும் ரசிகர்களுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணிட்டே இருப்பேன். 

ரச்சிதா சரவணன் மீனாட்சி

``அதே இணையத்துல உங்களுக்கு எதிரா மீம்ஸும் வருகின்றனவே?''

``மீம்களினால் நிறையவே பாதிக்கப்பட்டிருக்கேன். ஃபீல்டைவிட்டே போய்விடவா?. சில சமயம் அப்படிக்கூட யோசிச்சதுண்டு. என்னுடைய ரசிகர்களுக்காகவும் என்மீது அன்பு செலுத்துறவங்களுக்காகவும்தான் தொடர்ந்து நடிக்கிறேன். முதல்ல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. என்னோட மனநிலை நிறையவே மாறிடுச்சு. இப்பெல்லாம் மீம்ஸ் போடலைன்னாதான் வருத்தப்படுவேன். என்னைப் பற்றி மீம்ஸ் வரலைன்னா ‘ஐய்யையோ நல்லா நடிக்கலையோ’னு தோணும். நீங்க மீம்ஸ் போடுங்க. அப்பதான் நான் லைவ்ல இருக்கேன்னு எனக்குத் தெரியும்.

இப்பெல்லாம் மீம்ஸ் பார்த்து ரசிக்க ஆரம்பிச்சுட்டேன். `சரவணன்-மீனாட்சி' டீம்ல யாருமே இந்த அளவுக்குப் பாதிக்கப்படலை. நான் மட்டும்தான் அதிகமா  வருத்தப்பட்டிருக்கேன். மீம் க்ரியேட்டர்ஸ் போடுற மீம்ஸ் நியாயமா இருந்தால் ஏத்துப்பேன். என்னைக் கலாய்க்கிறவங்களும் இங்கேதான் இருக்காங்க; என் பெயரை டாட்டூ குத்திக்கிட்டு ரசிக்கிறவங்களும் இதே ஊர்லதான் இருக்காங்க. என்னை வெறுக்கிறவங்க 100 பேர்னா, கொண்டாடுறவங்க 1,000 பேர். அதனால என் அன்பானவர்களுக்காகத்தான் நான்.''

“உங்க உயிர் ரசிகர்களுக்காக என்ன பண்ணப்போறீங்க”  

``இன்னும் நல்லா நடிக்கப்போறேன். `ரச்சிதா பெஸ்ட் ஹீரோயின்'னு எல்லோருமே சொல்லணும். நிறைய சினிமா விருதுகள் வாங்கணுங்கிறது என் ஆசை.''

``அப்போ சினிமாவில் நீங்க நடிக்கணும். ஆனா, ‘உப்புக்கருவாடு’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்துலயும் கமிட்டாகலையே?''

``ஒரு சீரியல்ல கமிட்டாகிட்டோம்னா, படங்கள் நடிக்கிறது ரொம்ப கஷ்டம். நிறைய படங்கள், கதைகள் வந்துட்டுதான் இருக்கு. சீரியல்கள் பெண்கள் சார்ந்ததுங்கிறதுனால, எங்களுக்கு நிறையவே சீன்கள் இருக்கும். மாதம் முழுவதும் ஷூட்டிங் இருக்கும். அப்புறம் எப்படி சினிமாவில் நடிக்க முடியும்? அதனாலேயே ஏகப்பட்ட படங்கள் விட்டாச்சு.   `சரவணன்-மீனாட்சி' முடிஞ்சதும்தான் என்னோட நெக்ஸ்ட் ப்ளான்.''

``உங்க சீரியல்களில் ‘லைஃப் டைம் பெஸ்ட் சீன்’னு எதைச் சொல்வீங்க!''

``தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு பல மொழி சீரியலிலும் நடிச்சுட்டேன். ஆனா, ‘சரவணன் மீனாட்சி’ சீரியலுக்காக அம்மன் வேஷம் போட்டதை என்னால் மறக்கவே முடியாது. அம்மன்னா சும்மா இல்லை. நடிக்கும்போது கை, கால் நடுங்கும். அம்மன் கெட்டப் போடணும்னு விரதம் இருந்தேன். சினிமாவில் நடிக்கும்போது பண்ணணும்னு நினைச்ச கெட்டப், சின்னத்திரையிலேயே நிறைவேறிடுச்சு. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close