Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இளையராஜா ஆன் ஸ்க்ரீனில் கலக்கிய பாடல்கள்!

80-களில் தயாரிப்பாளர்கள் ஹீரோவை முடிவு செய்வதற்கு முன்னரே இசையமைப்பாளராக இளையராஜாவை முடிவு செய்துவிடுவார்கள். இவர் படத்தில் இருந்தால் படம் ஹிட்டென்பது தமிழ்சினிமாவின் சென்டிமென்ட். சில பாடல் காட்சிகளுக்கு இளையராஜாவே திரைக்கு முன்வந்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். அவ்வாறு இளையராஜா நடித்த ஹிட் பாடல்கள் இதுதான். 

இளையராஜா

நிழல்கள்:-  ‘மடைதிறந்து தாவும் நதி அலை நான்...’

“மிஸ்டர் ஹரி உங்க ட்யூன் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிப்போச்சு. எங்களோட புதுப்படத்துக்கு நீங்க தான் மியூசிக் டைரக்டர். இந்த ஆயிரம் ரூபாயை அட்வான்ஸா வச்சிக்கோங்க.” இப்பாடல் முடியும் போது வரும் டயலாக். பாரதிராஜா, வாலி, எஸ்.பி.பி கூட்டணியில் அசத்திய பாடல். 

தர்மபத்தினி:- ‘நான் தேடும் செவ்வந்தி பூவிது...’

‘இளையராஜா வழங்கும் இன்னிசை விருந்து’ நிகழ்ச்சிதான் இப்பாடலின் சீன். படத்தில் கார்த்திக்கும் ஜீவிதாவும் காதலில் விழுந்து கரையும் காட்சிகளும் அடிபொலி. 

சாதனை:-  ‘ஓ வானம்பாடி உன்னைத் தேடி...’

சிவாஜி சொல்லும் சிச்சுவேஷனுக்கு ராஜா ட்யூன் போட்டு காட்டும் சீன். “எல்லோரும் சொல்லுறாங்க நீங்க ஒரு சரித்திரம்னு, ஆனா நான் சொல்லுறேன் நீங்க ஒரு சகாப்தம். உங்களோட வேலை செய்யுறதையே பெருமையா நினைக்கிறேன்” என்று இளையராஜா டயலாக்கும் பேசுவார். 

புதுப்புது அர்த்தங்கள் :- ‘கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே...’

இன்று நேற்று நாளை என என்றும் ஹிட் லிஸ்டில் முதலில் இருக்கும் இளையராஜாவின் வெறித்தனப் பாடல். தொடக்கத்தில் இளையராஜா மெட்டு எடுத்துக் கொடுக்க, ரகுமான் பாடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ரசிகர்களின் எவர்கிரீன் பாடல் இது.  

கரகாட்டக்காரன் :- ‘பாட்டாலே புத்தி சொன்னான்...’

கங்கை அமரன் இயக்கத்தில் அசத்திய ஹிட். அனைத்து பாடலுமே வேற லெவல். இப்படத்திற்கான டைட்டில் பாடலை இளையராஜா எழுதி, படத்தில் தோன்றி பாடியிருப்பார்.  அவருக்கு அவரே பாடியிருப்பது போன்ற ஃபீல் தரும். 

கும்பக்கரை தங்கய்யா:- ‘என்னை ஒருவன் பாடச் சொன்னான்...’

கங்கை அமரன் படத்தில் பெரும்பாலும் டைட்டில் பாடல் இளையராஜாதான் பாடியிருப்பார். பிரபு, கனகா, பாண்டியன் நடித்த இப்படமும் படத்தின் பாடல்களும் ரசிக்கும் விதம். இளையராஜாவின் சகாப்தம் உச்சக்கட்டத்தில் இருந்த 1991-ல் வெளியான படம் இது. 

 

கண்ணாத்தாள் :-  ‘அம்மன் புகழைப்பாட...’

பாரதிகண்ணன் இயக்கத்தில் ஆர்.பி.செளத்ரி தயாரித்த படம் கண்ணாத்தாள். கரண், நீனா, இந்து, வடிவேலு என பலர் நடித்திருக்கும் படத்திற்காக பக்திப் பாடலில் மெட்டிசைத்திருப்பார். 

 

 

அழகர் மலை :-  ‘உலகம் இப்போ எங்கோ போகுது...’

ஆர்.கே.,வடிவேலு, லால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படம் ‘அழகர் மலை’ . இளையராஜாவின் இசையைத் தவிர, படத்தில் ஸ்பெஷல் எதுவுமில்லை.  சின்னப் பட்ஜெட் படங்களில் தொடங்கி பெரிய பட்ஜெட் வரையிலும் இசையும் இசை சார்ந்த நிமித்தமும் என்றால் இளையராஜா ரெடி. 

நாடிதுடிக்குதடி :- ‘காதலே இல்லாத... ’ 

நியூ ஜெனரேஷன் உலகிற்காக, ட்ரெண்டியான மியூசிக்குடன், வெள்ளை உடையில் நடித்துக் கெத்துக்காட்டியிருப்பார்  இளையராஜா. வித்தியாசமான தீம். கலர்ஃபுல் காஸ்ட்யூமில் வரும் நடிகர்களுக்கு மத்தியில் வெள்ளை உடையில் இளையராஜா நடித்திருப்பது ஆஸம். பாடலுக்காக பாலைவனம், கடல் என வித்தியாசமான லொக்கேஷனில் இருக்கும். 

 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close