Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவில் ரஜினி அரசியல் ஆலோசனை?

`காலா' படப்பிடிப்புக்காக மும்பை செல்வதற்காக ரஜினி சென்னை விமான நிலையம் வந்தபோது அவரை மீடியாக்கள் சூழ்ந்துகொண்டு அரசியல் பிரவேசம் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டனர். அப்போது மெளனம் காத்த ரஜினி  `அடுத்த ரசிகர்கள் சந்திப்பு எப்போது?' என்ற கேள்விக்கு மட்டும் `அநேகமாக செப்டம்பர், அக்டோபரில் சந்திப்பேன்' என்று பதில் சொன்னவர், இப்போது அமெரிக்காவுக்குப்  பறந்திருக்கிறார். சென்றமுறை சிகிச்சைக்குப் போனபோது துணைக்கு மூத்த மகள் ஐஸ்வர்யாவை அழைத்துப்போனார்.  இந்த முறையும் ஐஸ்வர்யாவைத்  தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.

ரஜினி

முன்பு ஒருமுறை அமெரிக்காவில் தீவிர சிகிச்சை எடுத்துவிட்டு சென்னையில் தனுஷ் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது  `கபாலி' படத்தைப் பார்க்க சோ விரும்பினார். அவரை வரவேற்பதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃப்ரிவ்யூ தியேட்டருக்கு  வந்து அவரோடு சேர்ந்து `கபாலி' படத்தைப் பார்த்தார். அன்றைக்கே `உங்கள் உடலில் இன்ஃபெக்‌ஷன் ஆகிவிடும். பொது இடத்துக்குச் செல்லாதீர்கள்' என்று டாக்டர்கள் அறிவுறுத்தியபோதும் ரஜினி பிடிவாதமாக ஃப்ரிவ்யூ தியேட்டருக்குச் சென்றார். அதன்பிறகு கெமிக்கல் வாசம் கலந்த படப்பிடிப்புத் தளத்தில், அதிகமான வோல்ட்டேஜ்  பாயும் மின்சார பல்ப் வெளிச்சத்தில் கேமரா முன் `2.0' படத்தில் நடித்தார். 

ரஜினி

அடுத்து  மே மாதத்தில்  ஶ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்தார். ரசிகர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டார். தன்  ரசிகர்கள் மத்தியில் `அரசியல் பிரவேசம்' குறித்துப் பேசிய பேச்சு தமிழக அரசியலில் அதிர்வலைகளை எழுப்பியது. அதன் பிறகு  `காலா'  படப்பிடிப்புக்காக மும்பையில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியான தாராவியில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். `காலா' படத்தின் முதல் ஷெட்யூலில் நடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினியிடம், `நீங்கள் டாக்டர்கள் சொன்ன அட்வைஸைத் தாண்டி நிறைய உழைத்து வருகிறீர்கள். அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது' என்று  இங்குள்ள டாக்டர்கள் சொன்ன ஆலோசனைகளை ஏற்று மும்பை சென்று  `காலா' படப்பிடிப்பில் கலந்துகொண்டு, அங்கிருந்து அமெரிக்கா செல்லும் முடிவை எடுத்தார்.    

சிகாகோ நகரில் ஏற்கெனவே சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவமனையில் தங்கி உடல்பரிசோதனை செய்துவருகிறார். மகள் ஐஸ்வர்யா உதவிக்கு இருந்து வருகிறார். அமெரிக்காவிலேயே இரண்டு வாரங்கள் இருப்பதற்கு முடிவுசெய்திருக்கிறார். ரஜினிக்கு எப்போதெல்லாம் மனக்குழப்பம், மனஉளைச்சல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அமெரிக்காவில் சென்று அங்கே இருக்கும் தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் தங்குவது வழக்கம். அங்கு தியானம் செய்யும்போது சில முக்கிய முடிவுகளை எடுப்பதும் வழக்கம்.

ரஜினி

அதுபோல  இப்போது `அரசியலில் இறங்கலாமா... வேண்டாமா?' என்பது குறித்தும் ஆலோசனை தியானம் செய்யவிருக்கிறார் ரஜினி.  நாம் முன்பு சொன்னதைப்போலவே ஜூலை மாதத்திலேயே 15 மாவட்டங்களில் இருக்கும் ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில்  சந்திக்கிறார் ரஜினி என்று சொல்கிறார்கள். அப்போது அமெரிக்காவில் எடுத்த எதிர்கால முடிவை ரசிகர்கள் மத்தியில்  பகிரங்கமாக அறிவிக்கப்போகிறார் ரஜினி.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close