Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆன்லைனில் பாதுகாப்பா படம் பாருங்க! (sponsored content)

‘வீடியோ ஸ்ட்ரீமிங்’ என்பது நாம் காண விரும்பும் காணொளியையோ, மனதிற்கு இனிய திரைப்படத்தையோ பார்க்க உதவும் ஒரு தொழில்நுட்பம். இன்று, திரைப்படத்தைக் காணும் முறை முற்றிலும் மாறிவிட்டது. ஒரு காணொளியைக் காண்பதற்கு, அதனை முழுமையாகத் தரவிறக்கம் செய்யவேண்டிய அவசியமில்லை. மாறாக ஆன்லைனில் இருந்தால், சிறிது சிறிதாக ‘ஸ்ட்ரீமிங்’ செய்து பார்த்துக்கொள்ளலாம். ஒரு பகுதியைப் பார்த்து முடிப்பதற்குள் அடுத்த பகுதியை ‘ஸ்ட்ரீமிங்’ செய்து வைத்துக்கொள்ளலாம். இதனால் எந்தவொரு காணொளியையும் முழுமையாகத் தரவிறக்கம் செய்யாமலே பார்த்துக் கொள்ளலாம். 

இன்று எல்லோருடைய இல்லத்திலும் இணைய சேவை வந்துவிட்ட நிலையில், பெரும்பாலான மக்கள் ‘வீடியோ ஸ்ட்ரீமிங்’ சேவையினை பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் இந்தத் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு விஷயங்களுக்குப் பயன்படுகிறது என்றபோதும் சில நிறுவனங்கள், தங்கள் விளம்பரங்கள், அறிவிப்புகள் ஆகியவற்றை வெளியிடவும் பயன்படுத்துகிறார்கள். முழுமையாகத் தரவிறக்கம் செய்யத் தேவையில்லை என்பதால், ஒருவருடைய டேட்டா பயன்பாடு முன்பைவிட மிகவும் குறைவாகவே தேவைப்படுகிறது. இதுபோல ஆன்லைனில் காணொளி அல்லது திரைப்படங்களை ‘ஸ்ட்ரீமிங்’ முறையில் பார்ப்பவர்கள் பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளுதல் நலம்.

இந்த முறையினால் நாம் வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க முடிகிறது என்பது நமக்கு அனுகூலமான விஷயம். அவ்வாறு ஆன்லைனில் நாம் வீடியோக்களை பார்த்து மகிழும்போது, அந்த வீடியோக்களின் தரத்தினை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கும். HD தரத்தில் திரைப்படங்களைப் பார்க்கும்போது அதிக டேட்டா பயன்பாடு இருக்கும். நல்ல திரைப்படங்களுக்கு நாம் டேட்டாவை செலவிடுவதில் தவறில்லை. வெறுமனே ஒரு பாடல் மட்டும் கேட்கவேண்டும் என்றால், HD என்பதை மாற்றி  குறைந்த ஒளித்தரத்தில் வைத்துக்கொண்டால், டேட்டாவை மிச்சப்படுத்தலாம்.

இன்று ஏராளமான ஆன்லைன் ‘ஸ்ட்ரீமிங்’ தளங்களில் அனுமதி பெறாத, புதிய படங்கள் காணக்கிடைக்கின்றன. இந்தத் தளங்களில் சென்று பார்க்கும்போது, வைரஸ் தாக்குதல்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், நம்முடைய கணினியில் உள்ள தகவல்கள், (வங்கிக் கணக்கு எண், கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள்) ஆகியவை திருடு போகும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே, ஆன்லைனில் திரைப்படம் பார்க்கும்போது, முறையான அனுமதி பெற்ற தளங்களில் மட்டும் சென்று பார்த்தல் அவசியம். இதுபோன்ற தளங்களில் பயனாளர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும். 

ஹீரோடாக்கீஸ்.காம் (www.herotalkies.com) இதுபோன்ற பாதுகாப்பான தளங்களில் ஒன்று. இந்த ஆன்லைன் தளத்தில் சுமார்  850 திரைப்படங்களுக்கு மேல் காணக்கிடைக்கிறது. தரமான 1080P HD மற்றும் 5.1 Surround Sound குவாலிட்டியில் ரொமேன்ஸ், ஆக்க்ஷன், நகைச்சுவை மற்றும் காலத்தால் அழியாத பழைய படங்கள் ஆகியவற்றை வெளிநாட்டில் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களின் வீட்டு வரவேற்பறைக்குத் திரைப்படங்களைக் கொண்டு சேர்க்கிறது ஹீரோடாக்கீஸ். இந்தத் தளத்திற்கென ஆன்ட்ராய்டு, ஆப்பிள் ஆப்புகள் இருப்பதால் மொபைல் போன், டேப்லெட், லேப்டாப் என எதில் வேண்டுமானாலும் கண்டுகளிக்கலாம். 

நல்ல திரைப்படங்களைக் குடும்பத்துடன் அமர்ந்து பார்த்து மகிழவும், ஒரு சிறிய தொகையைச் செலுத்தி ஹீரோடாக்கீஸ்.காம் தளத்தில் ரெஜிஸ்டர் செய்துகொள்ளவேண்டும். குரோம்காஸ்ட், ஆப்பிள் டிவி, ரோகு போன்றவற்றின் உதவியுடன் 2-6 வாரங்களுக்குள் வெளியான புதிய திரைப்படங்களையும் பாதுகாப்பான முறையில் கண்டுகளிக்கலாம்.  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close