Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹீரோக்களின் சென்டிமெண்ட்!

ம்ம தமிழ் சினிமாவில் அமைதியா இன்டஸ்ட்ரிக்குள்ள வந்து ஒரு கட்டத்தில் சில சென்டிமெண்ட்கள்  க்ளிக் ஆகி, இவர் இப்படி நடிச்சா படம் கண்டிப்பா ஹிட்ன்னு சொல்ற அளவுக்கு ரொம்ப பாப்புலரான சில ஹரோக்கள் இருந்திருக்காங்க. அப்படி சில ஹீரோக்களைப் பார்க்கலாம் வாங்க...

மோகன்: 

வெள்ளிவிழா நாயகன்னு பேர் எடுத்தவர். இவரை இப்பவும் மைக் மோக ன்னுதான் சொல்வாங்க. பல படங்களில்  இவர் மைக் பிடித்து பாடும் பாடகரா நடிச்சிருக்கார். இவர் மைக்கை கையில் புடிச்சுகிட்டு பாடுற மாதிரி ஸ்டில்ஸ் ஒட்டுனா லே போதும் படம் ஹிட். அப்படி இவரையும் மைக்கையும் பிரிக்கவே முடியாது.

டி.ராஜேந்தர்:

சகலகலா வல்லவன்னு பேர் எடுத்தவர். சினிமாவில் இசை, எடிட்டிங், கலை, ஒளிப்பதிவுன்னு எல்லா ஏரியாவுலயும் புகுந்து விளையாடுவார். சென்டிமெண்ட் படங்கள்தான் இவர் ஸ்பெஷல். இவர் படங்களில் ஹீரோயின் கேரக்டர் இருக்கோ இல்லையோ ஆனா கண்டிப்பா தங்கச்சி கேரக்டர் இருக்கும்.

இப்போ வெளிவரும் மெகா சீரியல்களுக்கு இவரின் படங்கள்தான் முன்னோடி. அப்படி இவரையும் கண்ணீரையும் பிரிக்கவே முடியாது.

ராமராஜன்: 

கிராமத்து நாயகன்னு பேர் எடுத்தவர். ஒரு கிராமம், சில மாடுகள், ஒரு ஹீரோயின் இருந்தா போதும் இவர் படம் ஹிட் ஆகிடும்னு சொல்ற அளவுக்கு இவர் படங்கள் வெற்றி அடைஞ்சிருக்கு. ஹீரோயின் கூட டூயட் பாடுனதவிட மாடுங்க  கூடத்தான் அதிகமா பாடியிருப்பார். அப்படி இவரையும் மாட்டையும் பிரிக்கவே முடியாது.

முரளி:


புரட்சி நாயகன்னு பேர் எடுத்தவர். சினிமாவில் ரொம்ப காலத்துக்கு காலேஜ் படிக்கிற ஹீரோவா நடிச்சது இவராகத்தான் இருக்கும். இதயம் படத்துல இவர் காதலைச் சொல்லத் தவிச்ச தவிப்பைப் பார்த்துட்டு, தைரியமாக இருந்த பலபேர் காதலை சொல்ல பயந்து ஒதுங்கியிருக்காங்க. அப்படி இவரையும் காலேஜையும் பிரிக்கவே முடியாது.
 

விஜயகாந்த்:

புரட்சி கலைஞர்னு பேர் எடுத்தவர். அதிக படங்களில் போலீஸா நடிச்ச ஹீரோ இவராகத்தான் இருக்கும்.

இவர் போலீஸ் ஆபீசரா நடிச்சா கண்டிப்பா படம் ஹிட்டுன்னு சொல்ற அளவுக்கு போலீஸ் கதைகளில் நடிச்சு வெற்றி பெற்றவர்.

இவரோட பூட்ஸ் காலில் உதைபட்ட வில்லன்கள் அதிகம். அப்படி இவரையும் போலீஸ் டிரெஸ்ஸையும் பிரிக்கவே முடியாது.

- ருத்ரன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close