Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

92 வயதிலும் தளராத “கலைஞர்”

ஆரம்ப காலத்தில் ஆதிக்க சாதியினரின் சமஸ்கிருதம் கலந்த பேச்சும், புராணக் கதைகளும் மூட நம்பிக்கைகளும் மட்டுமே உலவிவந்த தமிழ்சினிமாவில் புதுமையான கதைகளாலும், அழகு தமிழ் வசனங்களாலும் மாற்றத்தை ஏற்படுத்தியவர் கருணாநிதி. நடிகர் திலகம் சிவாஜி கணேசனை முதல்படத்திலேயே வெகுமக்களுக்கு அறிமுகப்படுத்தியதே தமிழ்த் திரைப்பட வரலாற்றின் திருப்பு முனை.

பராசக்தி, மனோகரா, மந்திரிகுமாரி, திரும்பிப் பார், பூம்புகார் ஆகிய திரைப்படங்களானாலும், காகிதப்பூ, போர்வாள், தூக்குமேடை ஆகிய நாடகங்களானாலும் கலைஞரின் பங்கு குறிப்பிடத்தக்கது. கடும் உழைப்பு, சுறுசுறுப்பு, அரசியல் நாகரிகம், அனலும் புனலும் கலந்த தமிழ் மேடைப்பேச்சு.  என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்பே! என்ற வார்த்தையைக் கேட்பதற்காக கூடும் மக்களே அவரின்  வெற்றி!

92 வருட கலைஞரின் வாழ்க்கை நகர்வுக்கும், மூன்று தலைமுறைகளைக் கடந்து அரசியலுக்கும், கலையுலகிற்கும் இவர் புரிந்த அர்ப்பணிப்பிற்காக சிறப்பு ஆடியோ தொகுப்பு  இதோ...

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close