Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதனால்தான் சாதிச்சாங்க ரஜினியும், கமலும்!

மல், ரஜினி ரெண்டு பேருமே ஒரே காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் வளர்ந்து பல வெற்றிகளை அடைஞ்சாங்க. எம்ஜிஆர், சிவாஜி ரசிகர்களிடையே போட்டி இருந்தது மாதிரி, இவங்க ரெண்டு பேரோட ரசிகர்களுக்கும் போட்டி, சண்டை இருந்துச்சு. 

இவர்களும் ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமான கேரக்டர்களையே தேர்ந்தெடுத்து நடிச்சாங்க. மக்களும் அதை ரசிச்சாங்க. ரெண்டு பேருக்குமான ஆன் ஸ்க்ரீன் வித்தியாசங்கள் நிறைய இருக்கு. 

கமல் சர்க்கஸ் கலைஞனைப் போல பல ஆச்சர்யமான, திறமையான, சமயங்களில் பரிதாபப்படவைக்கும் வேடங்களை செய்து மக்களை ரசிக்க வைப்பார். ரஜினி, ஒரு மேஜிக் நிபுணரைப்போல, தனது ஸ்டைலான, மயக்கவைக்கும் நடிப்பின் மூலமே மக்களை வசியம் செய்வார். 

ரஜினியோட படங்களில் தம்பி, தங்கச்சி, அம்மா-ன்னு குடும்ப உறவுகளுக்கு அதிகமான முக்கியத்துவம் இருக்கும். சென்டிமெண்ட் காட்சிகள் கண்டிப்பா இருக்கும். அல்லது நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கும். ரஜினி அவங்களுக்காக உழைப்பார். வில்லன்கள்கிட்ட இருந்து அவங்களை காப்பாத்த சண்டை போடுவார். 

கமல் படங்களில் பெரும்பாலும் காதலிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் இருக்கும். கமல் படங்களில் அதிகமாக காதலில் ஜெயிக்க சவால் விடுவது, காதலியை காப்பாற்ற வில்லன்களுடன் போராடுவது போல காட்சிகள் இருக்கும்.

ரஜினி படங்களில், ரஜினி தன்னை ரொம்ப வருத்திக்கொண்டு நடிப்பதையோ அல்லது ஒரு மாற்றுத் திறனா ளியா நடிப்பதையோ ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாங்க. அதிலும் குறிப்பா கிளைமாக்ஸ்ல ரஜினி சாகுற மாதிரி எல்லாம் யாரும் யோசிக்க கூட மாட்டாங்க.

கமல் படங்களில் அவர் தன்னோட உருவத்தை மாற்றி எவ்வளவு வித்தியாசமா நடிக்கிறாரோ அந்த அள வுக்கு ரசிகர்கள் அதை ரசிப்பாங்க. கமல் கேரக்டருக்காக தன்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வருத்திக்கொண்டு நடிச்சு ரசிகர்களிடம் வரவேற்பை பெறுவார்.

உதாரணமாக 2 படங்களின் கிளைமாக்ஸ் காட்சிகளை சொல்லலாம். ரஜினி நடிப்பில் 1992-ல் வெளிவந்த 'பாண்டியன்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி மற்றும் வில்லனின் கைகள் சங்கிலியால் பிணைக்கபட்டிருக்கும். சற்று நேரத்தில் அணுகுண்டு வெடிக்கப்போவதை உணர்ந்த ரஜினி, வில்லனின் கையை வெட்டி தப்பித்துக்கொள்வார்.

கமல் நடிப்பில் 1994-ல் வெளியான 'மகாநதி' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு கட்டிட மாடியில் வில் லனோடு கமல் மோதும்போது, யதேச்சையாக கமல் மற்றும் வில்லனின் கைகள் சங்கிலியால் பிணைக்கப் படும். சண்டையின்போது வில்லன் கீழே விழக்கூடிய நிலையில் தொங்கிக்கொண்டு இருப்பார். கீழே போலீஸ் வருவதை கண்டு, வில்லன் உயிரோடு இருக்கக்கூடாது என்று எண்ணி கமல் தன்  கையை வெட்டி வில்லனை சாகடிப்பார்.

இப்படி இருவருமே தங்களோட வழியை சரியாக திட்டமிட்டுக்கொண்டு, புத்திசாலித்தனத்துடன் திறமையாக உழைத்ததால்தான் பல வருடங்களாக அசைக்க முடியாத இடத்தைப் பிடிச்சிருக்காங்க! 

- ருத்ரன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close