Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கெல்லாம் முன்னோடியான சலில்தாவைத் தெரியுமா?

நவம்பர் 19: சலில்தா பிறந்தநாள்.. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டும் நாம் சலில் சௌத்ரி (எ) சலில்தா பற்றிப் பேசுவது கூட இல்லை. இப்போது நாம் ஐபேட், மொபைல், 5.1டெக்னாலஜி என திரையிசைப்பாடல்களைக் கேட்டு வருகிறோம் எனில் அதற்கு இந்தியாவில் அடித்தளம் அமைத்தவர் இவர்தான். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் இசையமைத்தவர். சில இசைக்கருவிகளைக் கூட இந்தியாவின் திரையிசையில் புகுத்தியவர் இவரே.

புல்லாங்குழல், பியானோ, எஸ்ரஜ் என பல இசைக்கருவிகளைக் கொண்டு வந்த மேதை. இளையராஜாவிற்கே சலில்தா குறித்து விமர்சனம் செய்பவர்களைப் பிடிக்காது என ஒரு கருத்து உண்டு. நவம்பர் 19, 1925ல் மேற்கு வங்காளத்தில் பிறந்த சலில்தா 1995 செப்டம்பர் 5ம் தேதி மறைந்தார். இவரின் வழிவந்தவர்கள் தான் இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் .

லதா மங்கேஷ்கருடன் சலில்தா

 பல மொழிகளில் பல பாடல்களை இசையமைத்த சலில்தாவின் பாடல்கள் ஏனோ தமிழில் அந்த அளவிற்கு நிற்கவில்லை என்றாலும் அவரின் அரிய பாடல்கள் தமிழிலும் முத்துக்களாக இன்றும் நிற்கத்தான் செய்கின்றன. ’பூ வண்ணம் போல மின்னும்’, ’நாள் எண்ணும் பொழுது போன்ற பாடல்கள் பழங்காலப் பாடல்களின் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பரிச்சயம்.

முக்கியமாக இவரின் இரண்டு பாடல்களைச் சொன்னால் இக்கால இளைஞர்களின் கண்கள் கூட விரியும். மலையாளத்தின் பிரபல பாடல்கள் ‘கடலிணக்கர போணோரே’, மற்றும் ‘மானச மைனே வரூ’ பாடல்களை உருவாக்கியவர் சலில்தா தான்.

பாட்டுக்கு மெட்டமைத்த காலத்தில் வாழ்ந்த சலில்தா தான், வருங்காலத்தில் மெட்டுக்குப் பாட்டெழுதும் முறை மட்டுமே மேலோங்கும். நம் மெட்டுக்களுக்கு கவிஞர்கள் சொல்வதைச் செய்வார்கள் என இசையமைப்பாளர்களின் எதிர்காலம் குறித்து தீர்க்கரிசி போல் சொன்னவரும் இவரே என பாடலாசிரியர் முத்துலிங்கம் தனது பாடல் பிறந்த கதை புத்தக்கத்தில் குறிப்பிட்டிருப்பார். உண்மையும் அதுவே. அவர் சொன்னதுபோல் இசையமைப்பாளர்கள் கொடுக்கும் மெட்டுக்குத்தானே இப்போது கவிஞர்கள் பாட்டெழுதுகிறார்கள்.

- ஷாலினி நியூட்டன் - 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close