Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித்.. அப்பவும் இப்பவும் கெத்துதானே விக்டர்!!

அஜித்தின் 24 வருட திரை வாழ்க்கையில் அவரது ட்ரான்ஸ்ஃபர்மேஷன் எப்படி இருந்திருக்கிறது. காதல், நடனம், மேன்லி லுக் என 'வாட் எ சேஞ்ச் ஓவர்' காட்டியிருக்கிறார் அஜித். ஒரு ஜாலி ஸ்லைட் ஷோ பார்க்கலாமா?  

படங்களின் நடுவே இருக்கும் மெல்லிசான கோட்டை இடதுபுறம் நகர்த்தினால் அப்போ அஜித் , வலதுபுறம் நகர்த்தினால் இப்போ அஜித்! 
 
கெட்டப்

மிக எளிமையான மேக்கப் கூட அலட்டிக் கொள்ளாத தோற்றம். இப்போதும் மேக்கப் பற்றி கவலை இல்லைதான். ஆனால், பிறரை அதிர வைக்கும் கெத்து லுக்!

காதல்

உருகி உருகி காதலிப்பார். மிக ஜெண்டிலான காதலனாகிவிட்டார். சமயங்களில் ஹீரோயினை தொட்டுக் கொள்ளாமல் பட்டுக் கொள்ளாமல் கூட காதலிக்கிறார்!  

நடனம்

அப்போதும் இப்போதும் அலட்டிக் கொள்ளாத ஸ்டெப்தான். ஆனால், இப்போது ஸ்டைல் அதிகரித்திருக்கிறது! 

பெண்களுக்கு மரியாதை 

முரட்டு ஹீரோவாக நடித்தாலும் பெண்களுக்கு மரியாதை கொடுப்பார். ஒரு சில படங்கள் தவிர ஈவ் டீஸிங் காட்சிகளில் கூட நடித்திருக்க மாட்டார். 

டான்

தீனா காலம் முதலே டான் கேரக்டர் மீது அலாதி பிரியம். அழகிய தாதாவாக இருந்தவர் இப்போது செம ரஃப் அண்ட் டஃப் லுக்கில் இருக்கிறார்! 

கெமிஸ்ட்ரி

 50 லிட்டர் ஆசிட் ஊற்றியது போல கெமிஸ்ட்ரி தீப்பிடிக்க கட்டிப் பிடித்து உருண்டு புரள்வார். இப்போதோ சின்ன புன்னகை, மென்மையான தழுவல்களிலேயே காதல் தருணங்களை உணர்த்தி விடுகிறார்! 

தல - தளபதி

விஜய்யுடன் எப்போதும் நட்புதான். அதை சமீப காலத்தில் வெளிப்படையாகவே காட்டிக் கொள்கிறார்.

குட் பாய் vs பேட் பாய்

முன்னர் அமுல் பேபி, லவ்வர் பாய் கதாபாத்திரங்களிலேயே தோன்றுவார். இப்போது பெரும்பாலும் ‘பேட் பாய்’தான். மங்காத்தாவில் வில்லன், வேதாளத்தில் வில்லன்களுக்கே வில்லன் என அடி வெளுக்கிறார்! 

மாறாத ஒரே விஷயம்...

தன் படத்தின் எந்த புரமோஷன் நடவடிக்கைகளிலும் தலை காட்ட மாட்டார்...! 

ச.ஸ்ரீராம்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close