Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எதிர்ப்புகளை எதிர்கொள் - நடிகர் செந்தில் சொல்லாமல் சொல்லும் பாடம் #HBDSenthil

இராமநாதபுரம், முதுகுளத்தூர் அருகே ஒரு கிராமத்தில் இதே நாளில் பிறந்த செந்திலுக்கு இன்று வயது 65. கவுண்டமணியுடன் இவர் செய்த காமெடிகள் அட்டகாசம் என்றால் தனியாகவும் இவர் கலக்கத் தவறவில்லை.

பல இருந்தாலும்.. அவர் காட்சிகளை வேறு கோணத்தில் பார்த்ததில்.. கார்ப்பரேட் பாடங்களாகவே கொள்ளலாம். அதில் ஆறு இங்கே...

 

1. டேடாபேஸில் அப்டேட்டாக இருங்கள்!

 

நீங்கள் எங்கே,, என்ன வேலை செய்தாலும் டேடாபேஸ் புலியாக இருந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்! 

------

2. வீக்னெஸ் என்றொன்று இல்லை!

 

 

படிப்போ, திறமையோ, சாதுர்யமோ பிறரைவிட, எதிலாவது நீங்கள் குறையாக இருக்கலாம்.அதை பலவீனமாக எண்ணத் தேவையில்லை!

 ------

3. கேட்டால் கிடைக்கும்!

 

 

அடுத்தவர் கிண்டல் செய்வார்கள், நம்மை முட்டாள் என்று நினைப்பார்கள் என்ற கவலையெல்லாம் கொள்ளத்தேவையில்லை. ‘கழுதமேய்க்கற பயபுள்ளைக்கு இம்புட்டு அறிவா’ என  ஏளனம் கூடச் செய்வார்கள். ஒரு விஷயத்தில் தெளிவு வேண்டுமென்றால் அந்த எதிர்ப்புகளையெல்லாம் எதிர்கொண்டு.. கேளுங்கள்! கேட்டால் கிடைக்கும்!

 ------

4. சவாலே சமாளி!

 

இன்றளவும் அரசியல்வாதிகள் பின்பற்றும் பாடம் இது. ஒரு தவறை செய்துவிட்டால், எப்படியாவது அதை சமாளித்துக் கொண்டே இருப்பது. ஆனால்.. இது சின்னச் சின்ன தவறுக்குதான் ப்ரோ!

 -------

5. அறிவியல் அறி!

 

அவர் சொல்கிறார். இவர் சொல்கிறார் என்றெல்லாம் நம்பத்தேவையில்லை. அறிவியல்பூர்வமாக ஒன்றை ஆராய்ந்து அறியும் திறன் கொள்!

 ---------

6. ஆயிரம் கண் கொள்!

 

நீங்கள் வேலையில் மூழ்கியிருக்கலாம். உங்களுக்குத் தெரியாமலே உங்களுக்கான குழி வெட்டப்பட்டுக் கொண்டிருக்கலாம். அநாயாசமாக அதைச் சமாளித்து, வெற்றியைத் தொடர.. அகக்கண், புறக்கண் உட்பட எட்டுத்திசையையும் பார்க்கும் கண்கள் உங்களுக்குத் தேவை!

சத்ரியன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close