Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யப் டிவி பஜார்... பிரீமியம் வீடியோக்களின் தொகுப்பு..!

இந்திய உள்ளடக்கங்களுக்கான உலகின் மிகப்பெரிய ஓவர்-தி-டாப் (OTT) சேவை வழங்குனர்களில் ஒன்றாகத் திகழும் YuppTV, YuppTV Bazaar என்னும் உயர்-தரம் கொண்ட வீடியோ உள்ளடக்கங்களுக் கானதொரு சந்தையிடத்தை அறிமுகம் செய்துள்ளது. மும்பை, ஜுஹுவில் உள்ள JW மேரியட்டில், டிசம்பர் 23 அன்று, மாண்புமிகு மஹாராஷ்டிர மாநில ஆளுனர் திரு.வித்யாசாகர் ராவ் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் திரு.அபிஷேக் பச்சன் ஆகியோரால் அறிமுகம் செய்யப்பட்டது.

YuppTV Bazaar – ன் அறிமுகத்தின் வழியாக, கல்வி, குறும்படங்கள், இணைய தொடர்கள், திரைப்பட டிரெய்லர்கள் போன்ற பல்வேறு வகையினங்களைச் சேர்ந்த உயர்-தரம் கொண்ட ப்ரீமியம் வீடியோ உள்ளடக்கங்களுக்கான அடித்தளத்தினை YuppTV வழங்கும்.

தங்களது ப்ரீமியம் உள்ளடக்கங்களை சந்தையாக்கல் செய்தல் மற்றும் அதன் வழியாக பணமீட்டுவதற்கு வழக்கமான வீடியோ-பகிர்வு முறைகளான போர்டல்கள், சாட்டிலைட் மற்றும் DTH  அடித்தளங்களில் பெரும் சிரமத்தை சந்தித்து வரும், சார்பற்ற வீடியோ உள்ளடக்கங்கள் உருவாக்குனர்களை இம்முன்முயற்சி மிகவும் மகிழ்விக்கும். உத்திரவாதம் கொண்ட தர மேற்பார்வை மற்றும் பெரிய அளவிலான பயணர் அடித்தளம் ஆகியவைகளின் வழியாக, இத்தொழில்முனைவோர் அவர்களது உயர்-தரம் வாய்ந்த வீடியோக்களை ஒரு நம்பத்தகுந்த அடித்தளத்தில் காட்சிப்படுத்தவும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நேயர்களை ஸ்மார்ட்டிவிக்கள், ஸ்மார்ட்ஃபோன்கள், டேப்லெட்கள் மற்றும் கணிணிகள் போன்ற சாதனங்களின் வழியாக அடையவும் YuppTV Bazaar அனுமதிக்கும்.

இதன் அறிமுகத்தின் போது பேசிய, YuppTV நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. உதய் ரெட்டி அவர்கள், “கட்டுப்பாடுகளற்ற வீடியோ உள்ளடக்கங்கள் டிஜிட்டல் அடித்தளத்தில் வெகுவாகப் பரவியுள்ள நிலையில், உள்ளடக்கங்கள் கொண்டு பணமீட்டுதல் மற்றும் புகழ்பெறுதல் ஆகியவைகள் ப்ரீமியம் வீடியோ உருவாக்குனர்களுக்கு மிக முக்கிய சிக்கலாகத் திகழ்கிறது. அவர்களது உள்ளடக்கங்களானது, தற்செயலான பயணர்-உருவாக்க உள்ளடக்கங்களாகக் கருதப்படும் நிலையே உள்ளது. அனைவருக்கும் இலவசமாக வீடியோக்களைப் பகிரும் அடித்தளங்களினால் ஏற்படும் பாரம்பரிய தடைக்கற்களை நீக்கும் தீர்வாக YuppTV Bazaar அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இம்முன்முயற்சி பெரும் வெற்றியைப் பதிவு செய்யும் என்பதிலும் மற்றும் உள்ளடக்க உருவாக்குனர்களின் வழங்குதல்களுக்கு புகழும் மற்றும் பணமும் சேர்க்கும் வகையில் சிறந்ததொரு அடித்தளமாத் திகழும் என்பதிலும் நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்று கூறினார்.

மாண்புமிகு மஹாராஷ்டிர மாநில ஆளுனர் திரு.வித்யாசாகர் ராவ் அவர்கள், “சார்பற்ற படைப்பாற்றல் மிகுந்த உள்ளடக்கங்கள் உருவாக்குனர்கள் பணமீட்டும் வகையில் ஒரு ஊடகத்தினை வழங்குவதன் வழியாக, YuppTV தொழில்முனைவு உத்வேகத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த நவீன முன்முயற்சிக்கு, மஹாராஷ்டிர மாநிலம் தனது முழுமையான ஆதரவினை வழங்குகிறது மற்றும் YuppTV & YuppTV Bazaar ஆகியவைகளுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

YuppTV Bazaar  அறிமுக விழாவில் பங்கேற்று சிறப்பித்த, பிரபல திரைப்பட நடிகர் திரு.அபிஷேக் பச்சன் அவர்கள், “தங்களது படைப்பாற்றவை வெளிப்படுத்துவதற்கான சரியானதொரு அடித்தளத்தை எதிர்நோக்கும் திறமைசாலிகளை, இந்தியா தற்போது அதிகளவில் கொண்டுள்ளது. YuppTV  – ன் YuppTV Bazaar அறிமுகம், ஒரு வரவேற்கத்தக்க முயற்சியாகும். இது இந்திய உள்ளடக்க உருவாக்குனர்களுக்கு, அவர்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கானதொரு நம்பிக்கை வாய்ந்த மற்றும் ஆற்றல் மிகுந்த அடித்தளத்தினை வழங்கும்” என்று கூறினார்.

இந்தியாவில் 2015 – ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, தனது தனிப்பட்ட அணுகுமுறை மற்றும் நீடித்த வலையமைப்பின் வழியாக, YuppTV டிஜிட்டல் பொழுதுபோக்கு தொழில்துறையில் ஒரு புரட்சியை படைத்து வருகிறது. தற்போது, உலகின் மிகப்பெரிய இணைய தொலைக்காட்சி மற்றும் வீடியோ ஆன் டிமாண்டு (VOD) ஸ்ட்ரீமிங் வழங்குராக, மொபைல் ஆப் டவுன்லோடுகள் வழியாக 5 மில்லியன் மக்களையும் மற்றும் ஸ்மார்ட்டிவிக்கள் வழியாக 400 மில்லியனுக்கும் மேற்பட்ட இல்லங்களையும் கொண்ட நேயர்கள் அடித்தளத்தைக் கொண்டுள்ளது. கூகுள் பிளேஸ்டோரில் இரண்டாவது மிகப்பிரபலமான செயலியாகவும் மற்றும் இந்திய எல்ஜி மற்றும் சாம்சங் ஸ்மார்ட் தொலைகாட்சிகளின் முக்கிய தொலைகாட்சி செயலியாகவும் திகழ்கிறது.

YuppTV  குறித்து:

உலகின் மிகப்பெரிய இணையம் அடிப்படையிலான தொலைகாட்சி சேவை வழங்குனர்களில் ஒன்றாகத் திகழும் YuppTV 200 – க்கும் மேற்பட்ட இந்திய தொலைகாட்சி சேனல்களை 12 மொழிகளில் வழங்கி வருகிறது. YuppTV வழங்கும் நேரடி தொலைகாட்சி மற்றும் கேட்ச்-அப் தொலைகாட்சி தொழில்நுட்பம் வழியாக, நேயர்கள் கடந்த 7 நாட்களின் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை கண்டு மகிழலாம் மற்றும் தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை தவறவிடாமல் பார்க்கலாம். கூடுதலாக, நேயர்கள் ஒற்றை பட்டனை கிளிக் செய்வதன் வழியாக, 5000 – ற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 100 – க்கும் மேற்பட்ட தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் கண்டு மகிழலாம். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான நம்பர்.1 இணைய கட்டண தொலைகாட்சி அடித்தளமான YuppTV திகழ்கிறது மற்றும் இந்தியாவின் ப்ரீமியம் உள்ளடக்க வழங்குதல் இணைய தொலைகாட்சி அடித்தளமாகவும் மற்றும் இணையம் ஏதுவாக்கப்பட்ட சாதனங்களுக்கான அணுகுவசதிகளை வழங்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது.

 

ஸ்மார்ட் டிவிக்கள், ஸ்மார்ட் ஃபோன்கள், டேப்லெட்கள் மற்றும் கணினிகள் போன்ற இணையம் ஏதுவாக்கப்பட்ட சாதனங்கள் வழியாக, YuppTV  சேவையை எந்தவொரு நேரத்திலும், இடத்திலும் அணுக முடியும். இதற்கு வழக்கமான ஆன்டெனாக்கள் மற்றும் செட்-டாப் பாக்ஸ்கள் தேவையில்லை.

உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்களுக்கு, இந்தியத் தொலைகாட்சி சேனல்களை அணுகத்தக்கதாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு, 2006 – ம் ஆண்டு YuppTV நிறுவப்பட்டது. இன்று, ஐந்து கண்டங்களிலுள்ள 50 – க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல மில்லியன் மக்கள் YuppTV சேவைகளைப் பயன்படுத்தி தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்த்து மகிழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 2015 – ம் ஆண்டிற்கான புத்தாக்கம், அமலாக்கம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவைகளுக்கான “உலகின் மிகச்சிறந்த 100 நிறுவனங்களில் ஒன்று” என்னும் ரெட் ஹெர்ரிங் விருது உட்பட பல்வேறு கௌரவம் வாய்ந்த விருதுகளை YuppTVவென்றுள்ளது. அக்டோபர் 2015 – ல், இந்தியாவில் முதல் முறையாக கேட்ச்-அப் டிவி மற்றும் மூவி ஆன் டிமான்டு போன்ற பல்வேறு புத்தாக்க வசதிகளுடன், தனது சேவைகளை அறிமுகம் செய்தது. இவைகள் வழக்கமான கேபிள் அல்லது DTH அடித்தளங்களில் கிடைக்கப்பெறுகிறது. ஒரு நாளைக்கு வெறும் ரூ.5 என்னும் குறைவான கட்டணத்தில் துவங்கும் பேக்கேஜ்கள் வழியாக, YuppTV இந்தியா முழுவதும் அணுகுவசதி எளிய செலவில் வழங்குகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close