Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய், அஜித் ரசிகர்கள் காரசார மோதல் - அனல் பறக்கும் பொங்கல்

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி கொடுத்துவிட்ட நிலையில் பல சேனல்கள் ஜல்லிக்கட்டை நேரடியாக ஒளிபரப்பும் முயற்சியில் உள்ளனர். வழக்கம் போல பட்டி மன்றம், செலிபிரிட்டி மீட் என ஆளாளுக்கு வித்யாசமான நிகழ்ச்சிகளை தொகுக்க ஆரம்பித்து விட்டனர்.

சரி என்னென்ன புதுப்படங்கள்... நமக்கு அதுதானே முக்கியம். தீபாவளி மட்டுமல்ல பொங்கலும் இந்த முறை ஜெயா டிவிதான் என்கிற ரீதியில் பாகுபலி அதைத்தான் ஏற்கனவே ஒளிபரப்பி விட்டார்களே என நீங்கள் நினைத்தால் இதோ அஜித்தின் என்னை அறிந்தால் , மாட்டுப் பொங்கலில் ஜோதிகா நடித்த 36 வயதினிலே, சாயங்காலம் ஓகே கண்மணி என லிஸ்ட் நீள்கிறது.

சரி இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்ன படம் என சன் டிவியை கொஞ்சம் சேஞ்ச் செய்தால் மெகா ஹிட் பாபநாசம், விஷாலின் பாயும்புலி என படையெடுக்கிறது.

விஜய் டிவியில்  இந்த முறை படங்கள் கொஞ்சம் வீக். சண்டி வீரன், பத்து எண்றதுக்குள்ள.அடுத்த நாள் மெட்ராஸ்.ஆனாலும் விஜய் டிவி இந்த முறை சிறப்பு நிகழ்ச்சிகளில் கொஞ்சம் அனல் பறக்க வைக்க திட்டமிட்டுள்ளார்கள்.

விஜய் , அஜித் ரசிகர்கள் காரசார விவாதம் நடக்கப் போகிறது நீயா நானா நிகழ்ச்சியில். காபி வித் டிடி நிகழ்ச்சியில் இளையராஜா முதல் முறையாக புது அரங்கத்தில் அமர்ந்து பேசவிருக்கிறார். கலைஞர் டிவியில் வை ராஜா வை, வருத்தப்படாத வாலிபர் சங்கம். ராஜ் டிவியில் போக்கிரி மன்னன் என இந்தப் பொங்கலும் டி.ஆர்.பி ரேட்டை எகிற வைக்க ஒவ்வொரு டிவியும் ரேஸில் ஓடக் காத்திருக்கிறார்கள். பார்க்கலாம்!!

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close