Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிச்சனுக்கு எதுக்கு மாடர்ன் காஸ்ட்யூம்? - ஃபரினா ஆஸாத் சொல்லும் லாஜிக்

சன் டிவி கிச்சன் கலாட்டா ஷோவை சாப்பாட்டுக்காக பாக்கறாங்களோ இல்லையோ மக்களே! ஃபரீனாவோட ஆடைகளுக்காகவே பாக்கறாங்க ரசிகர்கள். ஷூட்டிங்குக்கு அவசரமா கிளம்பிக்கிட்டு இருந்தவங்கள 10 நிமிஷம் பிடிச்சு ஒக்கார வெச்சு கேள்வி கேட்டோம். பட பட படன்னு பட்டாசு மாதிரி பேசிட்டு பறந்துட்டாங்க.

காஸ்ட்யூம்ஸ்லாம் கலக்குறீங்களே?


(கேள்வி முடிக்கறதுக்கு முன்னாடியே பதில் வருது). அமா ஆமா. அந்த ஷோக்கு காஸ்ட்யூம்களுக்காகவே ரசிகர்கள் அதிகம். ஆரம்பத்துல எல்லாம் கிச்சன் ஷோக்கு இப்படி மாடர்ன் காஸ்ட்யூம் எதுக்கு? சாரி, சுடிதார் போதாதான்னு நினைச்சாங்க. ஆனாலும் ட்ரை பண்ணி பாப்போமேன்னு இப்படி டிசைன் பண்ணோம். அது சூப்பர் ஹிட் ஆகிடுச்சு.

இதுக்கெல்லாம் தேடி அலைஞ்சு வாங்க ரொம்ப  மெனக்கெட வேண்டி இருக்குமே?

அதான் இல்லை. காஸ்ட்யூம் டிசைனர் இருக்காங்க. அவங்க கச்சிதமா வடிவமைச்சு குடுப்பாங்க. நாங்க சும்மா போட்டு பாக்கலாமேன்னு ஏதோ ஒரு பேண்டுக்கு ஏதோ ஒரு டாப், ஏதோ ஒரு டாப்புக்கு ஏதோ ஒரு ஸ்கர்ட்ன்னு மிக்ஸ் அண்ட் மேட்ச் பண்ணுவோம். அது ஹிட் அடிச்சுடும். தோடு, நெக் செட்ன்னு எதுவும் தேடி வாங்கினதில்ல. ஷாப்பிங் போகும்போது பாக்க பிடிச்சுருந்தா வாங்குவேன். அது எதாவது ஒரு டிரஸ்க்கு கச்சிதமா பொருந்திடும்.

இப்போ சீரியல், ரியாலிடி ஷோக்கள்ல எல்லாம் காஸ்ட்யூம்க்கு ரொம்ப முக்கியத்துவம் தர்றாங்களே?

ஆமாம். ஆரம்பத்துல நானே பாக்க நல்ல இருந்தா போதும்ன்னுதான் ட்ரெஸ் பண்ணுவேன். ஆனா ரெஸ்பான்ஸ் நல்லா வரவே, நம்மள நோட்  பண்ணறாங்கன்னு பார்த்து பார்த்து ட்ரெஸ் பண்ண ஆரம்பிச்சேன். இப்போ மக்கள் காஸ்ட்யூம்க்கு அதிக முக்கியத்துவம் .கொடுக்கறாங்க. அதனால ஷோ நடத்தறவங்களும் அதுக்கு முக்கியத்துவம் தர்றாங்க. ஆடை ஆபரணங்கள் பார்க்கவே  நிறைய பேர் இப்போ சீரியல் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.

சாய் பிரசாத் மரணம் உங்களை பாதித்ததா?

மிகப்பெரிய முட்டாள்தனம். அவர் தற்கொலைக்கு ஒரு வாரம் முன்னாடி கூட சன் டிவி ஷூட்டிங் நடந்துது. அந்த கதைப்படி தற்கொலைக்கு முயற்சி செய்யற ஒரு பொண்ணை காப்பாத்தி அட்வைஸ் குடுப்பார். அடுத்த 5 நாள்ல அவர் மரணம் செய்தி கேட்டப்போ ஒரு நிமிஷம் என்ன செய்யறதுன்னே தெரியல. அவர் எழுதி வெச்ச லெட்டர்ல ஸ்மைலி எல்லாம் போட்டுருக்கார். ஸ்மைலி போட்டு சந்தோஷமான மனநிலைல இருக்கற ஒருத்தர் எப்படி தற்கொலை செஞ்சுக்க முடியும்னே புரியல. என்னதான் இருந்தாலும் தற்கொலை முடிவு மிகப்பெரிய முட்டாள்தனம்.

நீங்களும் இந்த பல்லி, கரப்பான்பூச்சி கூட எல்லாம் ரேஸிங் சேஸிங் நடத்திருக்கீங்களா?

பொண்ணுங்கன்னா கரப்பான்பூச்சிக்கு எல்லாம் பயப்படுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன் . ஆனா எனக்கு அப்படி எல்லாம் பயம் வர மாட்டேங்குதே?

கூகிள்ல ஃபரினான்னு குடுத்தாலே டிராப் டவுன்ல ஹாட் பிக்சர்ஸ்ன்னு காட்டுதே? உங்களுக்கு தெரியுமா?

அப்படியா? நான் இது வரைக்கும் பார்த்ததில்ல. என் போட்டோவை யார் எப்படி போட்டாலும் கவலை இல்லை. நான் எப்படின்னு எனக்கு தெரியும். என் நண்பர்களுக்கு தெரியும். என்னை நம்பறவங்க மட்டும் எனக்கு போதும்.

எப்போ சினிமா என்ட்ரி?

நல்ல கதை.. நல்ல கேரக்டர்.. நல்ல டைரக்டர் கிடைச்சா பாக்கலாம்!

தா. நந்திதா (மாணவப்பத்திரிக்கையாளர்)

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close