Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’நாடோடிகள்’ பாணியில் த்ரில் கல்யாணம்’ ...புது மாப்பிள்ளையானார் ஆதித்யா சேனல் TSK

 

தித்யா சேனலின் 'தலதளபதி' நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் ‘TSK' சரவணனுக்குக் கல்யாணம். புது மாப்பிள்ளையிடம் சில கேள்விகள்...

காதல் பூத்த தருணம் பற்றி சொல்லுங்களேன்...
 
“ நான் காலேஜில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு மிமிக்ரி, நிகழ்ச்சி தொகுப்பெல்லாம் பண்ணுவேன். அப்போ தான் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரி நிகழ்ச்சியில, அவங்கள சந்திச்சேன். பார்த்த உடனே எனக்குப் பிடிச்சிடுச்சு. காதல் பூத்து பட்டாம்பூச்சிக் கூட பறக்க ஆரம்பிச்சுடுச்சு. அதுதான் முதல் சந்திப்பு!”
 
காதலை எப்படிச் சொன்னீங்க? 
 
“முதல் தடவ அந்தக் கல்லூரியில என்னை வற்புறுத்திக் கூப்பிட்டாங்க. அடுத்தத் தடவை நானே வற்புறுத்தி வரேன்னு சொல்லி அவங்கள பார்க்குறதுக்காகவே போனேன். அப்போதான் எங்களுக்குள்ள நட்பானோம். என்னை அவங்க டிவியில கூட பார்த்தில்லை. அங்க இருந்த பொண்ணுங்க எல்லாரும், என்கிட்ட கையெழுத்து வாங்கினாங்க. அப்போகூட அவங்களுக்கு என்னை பார்த்த ஞாபகம் வரலை. அப்போதான் நான் ஒரு மோதிரம் வாங்கி அன்பளிப்பா குடுத்தேன். காதல சொல்றதுக்கு முன்னாடியே நட்பாகி, மோதிரம் அன்பளிப்பு எப்படி நம்ம திட்டம்!”
 
திரும்ப உங்க காதலி உங்களுக்கு கொடுத்த அன்பளிப்பு? 
 
“ஒரு கீ செயின் கொடுத்தாங்க. அப்புறம் அவங்களோட முதல் மாச சம்பளத்துல வெள்ளி மோதிரம், இரண்டாவது மாத சம்பளத்துல தங்க மோதிரம் வாங்கிக்கொடுத்தாங்க. என்னை யாரும் எதுக்கும் குறை சொல்லிடக் கூடாது. அப்படிச் சொன்னா வைஷ்ணவிக்கு அவ்வளவு கோபம் வரும். என் மேல அளவுக்கு அதிகமா பாசம் வெச்சுருக்காங்க!”   
 
அப்போ, முதலில் காதலைச் சொன்னது யார்?
 
“ நட்பா பேசிட்டு இருந்தோம். அப்புறம் அவங்களும் என்னோட நிகழ்ச்சியெல்லாம் பார்த்துட்டு அடிக்கடி போன் பண்ணுவாங்க, அப்படியே ஒரு நாள், 'உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கிறீங்களா'ன்னு கேட்டேன். அவங்க அதுக்கு,  ' அப்போ நீங்க என்ன காதலிக்கலையா'ன்னு கேட்டாங்க. இல்ல காதலிக்கிற காரணத்தாலதான் கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு கேட்டேன்னு சொன்னேன். அவங்களுக்கும் பிடிச்சுப் போச்சு என்னை. நான்தான் முதல்ல காதல சொன்னேன். மூன்றரை வருஷம் காதலிச்சோம்!”
 
மூன்றரை வருட காதலா... மறக்க முடியாத ஓர் தருணம்?
 
“ நாங்க மூணு வருடங்களுக்கு மேல காதலிச்சோம்னுதான் பேரு. ஆனா எங்களுக்கு தனி சந்திப்பு அமையவே இல்ல. முக்கியமா என் முகம் வேற நிறைய பேருக்கு அடையாளம் தெரியும். அதுக்கு பயந்துகிட்டே தனி சந்திப்புகள் வேண்டாம்னு முடிவு செய்தோம். திருச்சியில ஏதாவது நிகழ்ச்சிகள், கல்யாணம் இப்படி போகும் போது அவங்களும் கூட்டத்துல வந்து உக்காந்திருப்பாங்க. நாங்க சந்திச்ச எல்லா தருணங்களும் எங்களை சுத்தி ஒரு பெரிய கூட்டம் இருந்துகிட்டே இருக்கும்!” . 
 
உங்க வீட்ல எப்படி சொன்னீங்க?
 
“ நான் எங்க சொன்னேன். அம்மாவா கண்டுபிடிச்சாங்க. ஒரு நாள் வைஷ்ணவிய ஒரு தோழியா வீட்ல அம்மாவுக்கு அறிமுகப்படுத்தலாம்னு கூட்டிக்கிட்டு போனேன். வைஷ்ணவி,  அம்மாவை பார்க்கப் போறோமேன்னு மரியாதையா நினைச்சு, சேலைக் கட்டிகிட்டு வந்துட்டாங்க. அம்மா பார்த்த உடனே, 'யாருடா இது...?'ன்னு கேட்டாங்க. நான் என் தோழி’ன்னு சொன்னேன். அம்மா சந்தேகமா பார்த்தாங்க. சரியா சொல்லணும்னா கண்டுபிடிச்சிட்டாங்க. ஆனா கேட்டுக்கலை. நானா சொல்லும் போது அவங்களுக்கு முழு சம்மதம்!” 
 
வைஷ்ணவி வீட்ல உடனே சரின்னு சொல்லிட்டாங்களா?
 
“ நீங்க வேற... அவங்க வீட்ல சம்மதம் வாங்கி கல்யாணம் பண்றதுக்குள்ள பெரிய யுத்தமே நடந்துடுச்சு. எனக்கு நடிப்புத் துறையில வேலை. அவங்க வீட்ல கறாரா முடியாதுன்னு சொல்லிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா எடுத்துச் சொல்லி, புரியவெச்சோம். வைஷ்ணவியும் விடாப்பிடியா இருந்தாங்க. என்ன அவங்களால மறக்கவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஒருவழியா அவங்க அம்மா- அப்பா சரி சொல்லி, ஒருகட்டத்துல நாங்களே மாப்பிள்ளை பார்த்திருந்தா கூட இப்படி பார்த்துருக்க மாட்டோம்னு சொன்னாங்க பாருங்க, அந்தத் தருணம் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சரவணகுமாரா’ன்னு ஒரு எதிரொலி எனக்குள்ள கேட்டுச்சு!”
 
 
வைஷ்ணவி பத்தி சொல்லுங்களேன்!
 
“ வைஷ்ணவி ரொம்ப பக்குவமானவங்க. எனக்காக நிறைய விட்டுக்கொடுப்பாங்க. ஒரு தனியார் கம்பெனியில வேலை செய்துட்டு இருந்தாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் வேலைய விட்டுட்டாங்க. திருச்சி பக்கத்துல கரூர்தான் சொந்த ஊர். நான் ரொம்பக் கோபப்படுவேன். எல்லாத்துக்கும் அவங்கதான் விட்டுக் கொடுப்பாங்க. அவங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு, கொஞ்சம் செல்லம். சமையல், வீட்டு வேலை இதெல்லாம் இப்போதான் கத்துக்கிட்டு இருக்காங்க. நான் கஷ்டப்பட்டு சாப்பிட்டுகிட்டு இருக்கேன். இப்போ நான் வேலை விஷயமா கொஞ்சம் வெளியூர் சுத்திட்டு இருக்கேன். அதனால இப்போ அவங்க, அம்மா வீட்ல இருக்காங்க.  ஒரு சின்ன செலவுல 'நியூயார்க் நகரம் உறங்கும்’ பாட்டு பின்னனியில பாடிகிட்டு இருக்கு !”
 
திருமணம் எப்படி நடந்துச்சு?
 
“ கல்யாணம் சிம்பிளா நடந்துடுச்சு. உண்மைய சொன்னா ’நாடோடிகள்’ படம் பாணியில கொஞ்சம் ஓட்டம், நண்பர்கள் உதவி. அப்புறம் என்னோட அப்பா , அம்மா உதவி இப்படிதான் கல்யாணம் நடந்துச்சு. திருச்சியிலயே வரவேற்பு. நிறைய நண்பர்களையெல்லாம் கூப்பிட்டு, கொஞ்சம் பிரம்மாண்டமா நடத்தினோம். ரோபோ ஷங்கர்லாம் வந்திருந்தார். சென்னை நண்பர்களுக்கு சீக்கிரம் ஒரு சந்திப்பு நடத்தணும்!”
 
இப்போ வாழ்க்கை எப்படி இருக்கு... நண்பர்கள் என்ன சொல்றாங்க?
 

“கல்யாணம் ஆகிட்டாலே  வயசாயிடுச்சு ’அங்கிள்’ன்னு சொல்றாங்க. எங்க நட்பு வட்டாரத்துலயே எனக்கு தான் முதல் கல்யாணம். இந்தப் பசங்க கலாய் தாங்க முடியலை. ஆனா எனக்கு பொறுப்பு அதிகமா ஆகியிருக்கு. என்னை நம்பி ஒரு பொண்ணு இருக்கான்னு சந்தோஷமாவும் இருக்கு. ஆனா எல்லாத்துக்கும் எங்க அப்பா, அம்மா எனக்கு பக்கபலமா இருந்தாங்க. வைஷ்ணவி வீட்லயும் எங்கக் காதலை புரிஞ்சிக்கிட்டதுக்கு அவங்க அப்பா அம்மாவுக்கு நன்றி சொல்லணும் !” நெகிழ்கிறார் TSK 

 
 

 

 
- ஷாலினி நியூட்டன் -
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close