Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நான் ஒண்ணும் சுட்டி இல்ல.. காலேஜ் படிக்கறேனாக்கும்!' -'சுட்டி டிவி' சிந்துஜா ஓபன் டாக்!

சுட்டி டிவியின் ஆஸ்தான நிகழ்ச்சித் தொகுப்பாளினி.. ’ஹாய் சுட்டி!’ என அழைத்தால் ‘ஹல்லோ.. நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன்’ என அதிர்ச்சி கொடுக்கிறார் சிந்துஜா.
 

நீங்க கல்லூரி மாணவியா?

“ஆமா... வெளிய சொல்லிடாதிங்க. (கண்சிமிட்டுகிறார்). மயிலாப்பூர் தான் பிறந்து வளர்ந்தது. அப்பா, அம்மா ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க. நான் பிகாம் மூன்றாம் ஆண்டு!”

 தொலைக்காட்சி வாய்ப்பு எப்படி வந்தது?

“ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தப்ப, குழந்தைகள் க்ளப்புல  குழந்தைகள் தினத்துக்காக ஒரு கலை நிகழ்ச்சி. அதுக்கு சிறப்பு விருந்தினரா சுட்டி டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் வந்திருந்தாங்க. நான் அன்னிக்கு நேரு வேடம் போட்டு நடிச்சேன். என்னை அவங்களுக்கு பார்த்த உடனே பிடிச்சுப் போயிடுச்சு. அப்போ தான் டிவியில பேசுறியா அப்படின்னு கேட்டாங்க. நானும் ரொம்ப சந்தோஷமா சரின்னு சொல்லிட்டேன். அங்க சிறப்புத் தேர்வெல்லாம் நடந்துச்சு!”
 

கேமரா பயம் இருந்ததா?
 

ஆமா. நான் போய் கேமரா, மைக்லாம் பார்த்து பயந்ததும் டீம்ல எல்லாரும் எனக்கு பொறுமையா சொல்லிக் கொடுத்தாங்க. சாதனான்னு ஒரு பொண்ணு. எனக்கு முன்னாடியே சேர்ந்திருந்தாங்க. நான் கேமராவை விட அவங்களத்தான் அதிகமா பார்ப்பேன். இப்ப நானும் சாதனாவும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்.

இப்போ என்ன நிகழ்ச்சிகள் செய்திட்டு இருக்கீங்க?

“சுட்டி செய்திகள், ஜில்லுன்னு ஒரு சம்மர். இது ரெண்டும் தான். வருஷா வருஷம் இந்த ஜில்லுன்னு ஒரு சம்மர் நிகழ்ச்சிக்காக புதுப்புது ஊர்களுக்கு பயணம் செய்வோம், நிறைய குழந்தைகளைச் சந்திப்போம். அவங்களுக்கு அன்பளிப்புகள், விளையாட்டுன்னு ஜாலியா போகும். அந்த நிகழ்ச்சி தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!”அடுத்த திட்டம் என்ன?

“எனக்கு இந்த சுட்டி டிவி தான் முதல் வாய்ப்புக் கொடுத்தது. என் மனசுக்கு நெருக்கமா, எல்லாத்துக்கும் மேல - என்னோட படிப்புக்கும் இடையூறுகள் இல்லாம என்னோட நேரத்துக்கு சரியா அமைஞ்சிருக்கு. அடுத்து என்ன செய்யப் போறேன்னும் இன்னும் யோசிக்கல. ஆனா நல்லா சந்தோஷமா, சிரிச்சுக்கிட்டே ஒரு நிகழ்ச்சி செய்யணும். அப்படி ஒரு வாய்ப்பு வந்தா நிச்சயம் என்னோட நிகழ்ச்சித் தொகுப்பு அடுத்தக் கட்டம் போகும். பெர்சனல் லைஃப்ல கேட்டீங்கன்னா, படிப்பு முடிஞ்சு  நிறைய கற்பனைக்கு வேலைக் குடுக்கற மாதிரி வேலை அமைச்சுக்க ஆசை. அது மீடியா தான். என்னோட எதிர்காலமும் அதுதான்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.”

கல்லூரி நண்பர்கள் என்ன சொல்றாங்க?

‘நான் சுட்டி டிவியில வரேன்னு தெரிஞ்ச உடனே நிறைய பேர் எனக்காக சுட்டி டிவி பார்க்குறாங்க.  சின்னவங்க மட்டும் இல்ல, நிறைய பெரியவங்களே சுட்டி டிவி விரும்பிப் பார்க்குறாங்க, என்னைப் பார்த்தா, உடனே கண்டுபிடிச்சு நீ சிங்கு கூட வர நிகழ்ச்சி ரொம்ப அருமையா இருக்குன்னு சொல்லுவாங்க!”

உங்க பலம் பலவீனம்?

“நான் பயங்கரமான வாயாடி. யார் பேசினாலும் உடனே நட்பாகிடுவேன். அதுதான் பலம். அதே சமயம் நாம ஒருத்தர நண்பரா நினைச்சா அவங்களும் அதே மாதிரி நினைப்பாங்களான்னு தெரியாது. அதனால சில நேரங்கள்ல மனச்சங்கடமா அமைஞ்சிடும். அது பலவீனம். ஆனாலும் இதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு!”

பிடிச்ச ஹீரோ..ஹீரோயின்?
 

“ஹீரோயின் நயன்தாரா... ஹீரோ எப்பவுமே தலைவர் தான். 22ம் தேதி பெரிய திட்டம் போட்டிருக்கோம். கல்லூரி நண்பர்கள்லாம் சேர்ந்து கபாலி முதல் நாள் காட்சி. சும்மா விசில் பறக்க விடணும். கடவுளே டிக்கெட் கிடைக்கணும். எனக்காக நீங்களும் வேண்டிக்கோங்க ப்ளீஸ்”


ஷாலினி நியூட்டன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close