Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாங்க ஸ்ட்ரிக்ட் இல்லை! - ‘நடுவர்’ குஷ்பு!

 
ஆகஸ்ட் மாதம் 6-ம் முதல் தேதி ஜீ - தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சிக்கான ஆடிஷன் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆறு முதல் 14 வயது வரையிலான சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தலாம். இதில் பல்வேறு சுற்றுக்கள் இடம்பெறும்.  இந்த நிகழ்ச்சியில் குஷ்பு, பாக்யராஜ், அர்ச்சனா ஆகியோர் நடுவர்களாகப்  பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியைத்  தொகுத்து வழங்குகிறார் தொகுப்பாளர் கீர்த்தி. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு முதல் 8 மணி வரை ஒளிப்பரப்பாகவிருக்கிறது இந்நிகழ்ச்சி.
 
நிகழ்ச்சியில் பிஸியாக இருந்தவர்களில் ஒருவரான நடிகை குஷ்புவிடம் பேசினோம்,
 
இந்த நிகழ்ச்சிக்கு உங்களை நடுவரா கூப்பிட்டதும் எப்படி இருந்தது?  
 
முதல்ல இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டதும் பயம் வந்துடுச்சு. நம்மள வச்சு குழந்தைங்களைக் கிண்டல் பண்ணி கலாய்ச்சிடுவாங்களோனு. பாவம்ல குட்டீஸ்!
 
ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சிக்கான ப்ரமோவில் நடுவர்களும் ஆடல், பாடல்னு அசத்தியிருக்கீங்களே?
 
இந்த நிகழ்ச்சிக்கான ப்ரமோவுக்காக என்னிடம் பயந்துட்டேதான் கேட்டாங்க. எனக்கு இந்த கான்சப்ட் ரொம்ப பிடிச்சிருந்ததால ஓ.கே. சொல்லிட்டேன். நல்லா வந்திருக்குல்ல?
 
உங்க மூன்று நடுவர்களில் யார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்?
 
இப்போதான் இதுமாதிரி புதுசா ஒரு ஷோ ஆரம்பிச்சிருக்கோம். குழந்தைகளிடம் ஸ்ட்ரிக்டா இருக்கிறதை விட அவங்களுக்கு வழிகாட்டி மாதிரி இருக்கணும் என நினைக்கிறேன்.
 
-வே. கிருஷ்ணவேணி
 
படங்கள்: வசீம் இஸ்மாயில் (மாணவப் புகைப்படக்காரர்)

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close