Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நிஜத்தில் கவிதா ரொம்ப டெரர்!’ - ‘பிரியமானவள்’ நிரஞ்சனி!

’அட..அட...என்ன ஒரு தங்கமான பொண்ணு. இப்படி ஒரு மருமகள் கிடைக்காதா?’ என்று மகன்களைப் பெற்ற அம்மாக்களை ஆசையாய் பார்க்க வைத்திருக்கும் சின்னத்திரை மருமகள்தான் ‘பிரியமானவள்’ தொடரின் கவிதா...இல்லையில்லை நிரஞ்சனி. அவருடன் ஜாலியாக ஒரு காபி டைம் டாக் அடித்தோம்...

உங்களைப்பற்றி...

"என் சீரியல் பேர்தான் நிறைய பேருக்கு ஞாபகத்தில் இருக்கும். ஆனா, என்னோட பேர் நிரஞ்சனி அசோக். பெற்றோரோட சொந்த ஊர் திண்டுக்கல். அவங்க செட்டில் ஆனது சென்னை. அதனால, டிபிக்கல் சென்னை பொண்ணு நான்." 

ஸ்கூல், காலேஜ் படிப்பு...

"ஸ்கூலிங் எல்லாமே அண்ணா ஆதர்ஷ் கேர்ள்ஸ் ஸ்கூல். எஸ்.ஆர்.எம் காலேஜ்ல விஸ்காம் முடிச்சேன்."

.ஃப்ரெண்ட்ஸ்..

"என்னோட கலகல குணத்துக்காகவே ஃப்ரெண்ட்ஸ் எக்கசக்கம். ஒரு இடத்தில் உட்கார மாட்டேன். துறுதுறுனு ஓடிட்டும், லொடலொடனு பேசிட்டும் இருப்பேன். விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு எனக்கு அவ்ளோ...ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க."

சீரியல் என்ட்ரி...

"காலேஜ்ல ஒரு கல்ச்சுரல் புரோக்ராம்ல பார்த்துட்டுத்தான் கூப்பிட்டாங்க. அப்பாவோட பர்மிஷனோட அழகி சீரியல் ஆடிஷன் கலந்துக்கிட்டேன். அப்புறம், நிறைய மாடலிங்...சினிமா சான்ஸ் கூட வந்தது. அதுக்கப்புறம் ‘பிரியமானவள்’ல அன்பான, அடக்கமான மருமகள் இப்போ."

நிஜத்தில் நிரஞ்சனி...

"சீரியல் கவிதாக்கும், நிஜ நிரஞ்சனிக்கும் நிறைய வித்தியாசம் இருக்குங்க. என்னோட வீட்ல சீரியலைப் பார்த்துட்டு ‘நீயாம்மா இது?’ அப்படினு கலாய்ச்சு எடுத்துட்டாங்க. ஆனா, மருமகளா போகிற வீட்டில், அட்லீஸ்ட் கவிதா அளவுக்கு முடியாட்டியும், பாந்தமான மருமகளா இருக்க ட்ரை பண்ணுவேன்."

சமையல்...

”ஹா..ஹா..ஹா...நல்ல கேள்விங்க. இப்போதான் சமையல் கத்துட்டு இருக்கேன். ஓரளவு தேறிட்டேனு நினைக்கறேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சமைச்சு எடுத்துட்டு போய் எல்லாரையும் சாப்பிட வச்சு, டிரையல் பார்த்து கொடுமை பண்ணிட்டிருக்கேன்.

நிரஞ்சனி - சிவரஞ்சனி; ஆஃப் ஸ்கீரின் ஃப்ரெண்ட்ஷிப்...

”பாவங்க அவ. ஆன் ஸ்கீரினில் மட்டும்தான் அவ என்னை கொடுமை படுத்துவா. வெளில அவளைத்தான் நான் கொடுமைப்படுத்தறேன். ரெண்டு பேரும் அவ்ளோ க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அவ ஒரு நாள் ஃபோன் பண்ணாட்டி கூட, ‘ஏன் ஃபோன் கால் இல்லை?’ன்னு அவ வீட்டுக்கே போய் சண்டை போடுவேன். நிஜத்தில் கவிதா டெரர்...அவந்திகா அப்பாவி” சொல்லிவிட்டு கலகலவென கண்களை உருட்டி சிரிக்கிறார் நிரஞ்சனி.

-பா.விஜயலட்சுமி

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close