Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த சீரியல் பாடல்கள் எல்லாம் நினைவிருக்கிறதா? (வீடியோ)

சீரியல் பாடல்கள்

ஜாலியாகவோ, சோகமாகவோ எப்படி இருந்தாலும் நமக்கான ஃபேவரைட் நேரங்களை அதிகமாக இசையுடன் தான் கொண்டாடுவோம். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானில் தொடங்கி இன்று சந்தோஷ் நாராயணன் பாடல்கள் வரை பல திரைப்பாடல்கள் நம்முடைய மியூசிக் ப்ளேயர்களை அலங்கரிக்கும். நம்முடைய செல்ஃபோன்களில் தரவிறக்கம் செய்திடாத, ஆனால் அடிக்கடி கேட்டுப்பழகியிருக்கும் தமிழ் சீரியல்களின் இன்ட்ரோ பாடல்கள் என்னென்ன என்று பார்ப்போம். அதில்  சில பாடல்கள் நம்முடைய ரிங் டோனாக கூட இருந்திருக்கும். நாஸ்டாலஜிக் மெமரியில் ஒளிந்திருக்கும்  பெஸ்ட் டிவி சீரியல் பாடல்கள் சில...

சித்தி: 

அண்ணாமலை, சித்தி, செல்வி, செல்லமே, அரசி என்று ராதிகாவின் நடிப்பிலும் தயாரிப்பிலும் வெளியான எல்லா சீரியல்களுமே ஹிட் ரகம். அதில் சித்தி எல்லோருக்குமே ஸ்பெஷல். சிவக்குமார், விஜய் ஆதிராஜ், ராதிகா நடித்திருக்கும் ‘கண்ணின் மணி கண்ணின் மணி’ என்ற சித்தி பாடல் எப்போதுமே இல்லத்தரசிகளுக்கு பூஸ்ட் கொடுக்கும்  ஃபேவரைட் பாடல்.

கோலங்கள்:

ஒரு பக்கம் ராதிகா அசரடிக்க, அதற்கு போட்டியாக சன் டிவியில் 7 மணிக்கு ஒளிபரப்பான சீரியல் தான் கோலங்கள். நடிகை தேவயானியின் சீரியல் முகம்,  இன்றுவரை அழியாத கோலங்களில் ஒன்று.

ராஜராஜேஸ்வரி: 

ஒரு காலத்தில் ஏ.வி.எம். புரொடக்‌ஷன் தொடர்ந்து சென்டிமென்டல் சீரியல்களாக எடுத்தது போல, சரிகம தயாரிப்பில் அடுத்தடுத்து பக்தி சீரியல்களாக வெளியானது. சூலம், வேப்பிலைக்காரி வரிசையில் தி பெஸ்ட் இந்த “ராஜராஜேஸ்வரி”. 

வசந்தம்: 

“ஒவ்வொரு மலருக்கு வசந்தம் வருகிறது....”  பாடலின் ஸ்பெஷல் என்னவென்றால் டி.இமான் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இப்பாடலைப் பாடியிருப்பார். அன்றைய காலத்தில் சினிமா பாடலுக்கு இணையாகப் பேசப்பட்ட பாடல் இது.  

மைடியர் பூதம்: 

நான்கு மணிக்கு பள்ளி முடிந்துவிட்டால் பசங்க ஐந்து மணிக்கெல்லாம் வீட்டில் ஆஜர் ஆகிவிடுவார்கள். சிறார்களை டார்கெட் செய்து சன் டிவியில் ஒளிபரப்பான மாயாஜால சீரியல் மைடியர் பூதம். 

காதலிக்க நேரமில்லை: 

முழுக்க முழுக்க காதலுக்காக மட்டும் தயாரிக்கப்பட்ட விஜய் டிவி சீரியல். ‘என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு’ என்ற இந்த பாடல் நிச்சயம் இப்பொழுதும் பலரின் ரிங்டோனாக இருக்கும். 

 

கனா காணும் காலங்கள்: 

யூத்களை இழுத்துப் பிடித்து நாடகத்தை பார்க்கவைத்த முதல் சீரியல் “ கனாகாணும் காலங்கள்”. விஜய் டிவி ஒளிபரப்பிய நாடகம். இந்த நாடகத்தை மறுஒளிபரப்பவும் தற்பொழுது விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. 

ஸ்மால் வொண்டர்: 

அமெரிக்காவில் படு ஃபேமஸான டிவி சீர்யலை தமிழில் டப் செய்து ஒளிபரப்பியது அன்றைய விஜய் டிவி. குட்டி சுட்டி ரோபோவின் அட்டகாச ரகளை தான் சீரியல். 

மெட்டி ஒலி:-

திருமணமும், திருமணம் சார்ந்த நிகழ்வுகளுமே மெட்டி ஒலி சீரியலின் அடி நாதம். ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு சந்திக்கும் பிரச்னைகளை வைத்து உருவானது இந்த சீரியல். 800க்கும் மேலான  எபிசோட்களைத் தாண்டி வெற்றி பெற்றது. பாடல் வரிகள் தான் இப்பாடலின் ப்ளஸ்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close