Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அட! சக்திமான் டைட்டில் சாங் இதுவா? சீரியல் பாடல்கள் (பார்ட் -2)

சீரியல் சாங்ஸ்

டிவிக்களில் வெளியான மிகவும் விரும்பப்பட்ட டிவி சிரியல் இன்ட்ரோ பாடல்கள் பற்றி நேற்று பதிவிட்டோம். ’இதுமட்டும்தானா பாஸ், இன்னும் நிறைய இருக்கு’ என்று தங்களுக்குப் பிடித்த சீரியல் சாங்ஸ் கமெண்டில் பட்டியல் இட்டிருந்தார்கள் நம் வாசகர்கள். அப்புறம், நேயர் விருப்பத்தை மிஸ் பண்ண முடியுமா? இதோ ‘நீங்கள் கேட்ட பாடல்கள்’.... 

சூலம்: 

ராஜராஜேஸ்வரி தொடரைத் தொடர்ந்து சரிகமவிலிருந்து தயாரிக்கப்பட்ட மற்றுமொரு பக்தி தொடர் தான் சூலம். தொடர் முழுவதும் நடிப்பில் மட்டுமின்றி பக்திப் பரவசத்திலும் நம்மை நனைய வைப்பார் நடிகை சுவலட்சுமி. 

வேலன்:-

கந்தனுக்கு, கடம்பனுக்கு, முருகனுக்கு, வேலனுக்கு அரோகரா வேல்..வேல்...வேல்.. என்று ஒரு காலத்தில் ஒட்டுமொத்த தொலைக்காட்சியையுமே பரபரக்கவைத்த தொடர் தான் வேலன். நடிகை சீதா நாயகியாக முழுத்தொடரிலும் பக்திப் பழரசம் பிழிந்திருப்பார்.. 

கிருஷ்ணதாசி:-

ஜெமினி கணேசன், ரஞ்சிதா, நளினி என்று நட்சத்திரப் பட்டாளங்களே ஒன்று சேர்ந்து நடித்து, அதில் வெற்றியையும் பெற்ற தொடர்களில் ஒன்று கிருஷ்ணதாசி. சுவாரஸ்யமான நெடுந்தொடர். 

சிதம்பர ரகசியம்

பாடல்களே இல்லாமல், பின்னணி இசையில் மட்டும் நம்மை மிரளவைக்கும் சிதம்பர ரகசியம். சிதம்பரத்தில் நடக்கும் சம்பவங்களும், அதன் ரகசியமும் தான் ஒட்டுமொத்தத் தொடரும் த்ரில்லரில் தூள் கிளப்பிய இந்த தொடரை மறுஒளிபரப்பு கூட செய்யலாம் என்று கமென்டில் பரிந்துரைக்கிறார் வாசகர் அருண்குமார். 

சக்திமான்: 

நம்மால் மறக்கமுடியாத ஒரு தொடர் சக்திமான். டிவி தொடர்கள் பிரபலமான நேரத்தில்  நம்மைக் கட்டிப்போட்ட முதல் தொடர். மாயாஜாலமும், காமெடியும், சண்டையும் என சக்திமான் பின்னிப் பெடலெடுத்திருப்பார். தற்பொழுது மீண்டும் சக்திமான் டிவிகளில் வரவிருக்கிறான். அதற்கான படப்பிடிப்புகள் மற்றும் இதர வேலைகள் தற்பொழுது நடந்துவருகிறது.  

 

ஜென்மம் X;-

எல்லாம் மாயை.... எல்லாம் மர்மம்... எதுவும் தெளியவில்லை... ஜென்மம் எக்ஸ்... என்று ஹஸ்கி வாய்ஸில் மிரளவைத்து இரவில் தூங்கவிடாமல் செய்த அதிபயங்கரமான தொடர் தான் ஜென்மம் எக்ஸ்.  இதுபோன்ற ஹாரர் நாடகங்கள் தற்பொழுது எந்த டிவியிலும் இல்லை. தற்பொழுது தமிழில் ஹாரர் படங்கள் வரிசை கட்டுவது போல, டிவி தொடர்களிலும் மீண்டும் ஒருமுறை ஹாரர் தொடர்கள் வலம் வந்தால் நலம். 

 

- பி.எஸ்.முத்து

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
[X] Close