Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தி சேனல்களைக் கலக்கும் டாப் 5 சீரியல்கள்!

இந்தியில் இந்த 5 தொடர்கள்தான் தொடர்ந்து நான்கைந்து வாரமாக டாப் லிஸ்டில் வருகிறது. வரிசையில் சில மாற்றங்கள் இருக்குமே தவிர, இவைதான் டாப் 5 சீரியல்கள். இவை பற்றிய சின்ன பயோ.. 

டாப் 5 இந்தி சீரியல்கள்

உதான் 

தமிழில் ராஜ் டிவியில் ‛பூ விழி வாசலிலே' என்கிற பெயரில் ஒளிபரப்பாகிறது இந்த தொடர். தந்தை இறந்து விடுகிறார், தாய் கர்ப்பமாக இருக்கிறார். இறுதி காரியத்துக் கூட காசில்லாமல் நிலச்சுவன்தாரிடம் பணம் கேட்டு போகிறார்கள். அவர்கள் வயிற்றில் உள்ள பிள்ளையை 7 வயதில் அடிமையாகக் கொடுக்க வேண்டும் என்கிற உத்தரவுடன் பணம் தருகிறார்கள். அதற்குப் பிறகு நடப்பதுதான் கதை. கடந்த 2014-ல் ஒளிபரப்பைத் தொடங்கிய இந்தத் தொடர் இன்றும் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இது 5 வது இடத்தில் உள்ளது. 

தாரக் மேத்தா கா ஊல்தா சாஷ்மான் 

சோனியின் 'சாப்' என்கிற பொழுதுபோக்கு சேனலில் 8.30 மணிக்கு சூப்பர் ப்ரைம் டைமில் செம போடு போட்டுக்கொண்டிருக்கும் தொடர் இது. தாரக் மேத்தா என்கிற எழுத்தாளர் குஜராத்தி வார இதழான சித்திரலேகாவில் தொடராக எழுதிய கதைதான் இது. கடந்த 2008-ல் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. அதிக நாள் ஒளிபரப்பாகும் தொடர்களில் இதுவும் ஒன்று. ஒரு குடியிருப்புக்குள் ஒவ்வொரு குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுமே கதை. 

கும்கும் பாக்யா 

ஆங்கில நாவலான சென்ஸ் அன்ட் சென்ஸிபிளிடியின் கதையை இந்திய தன்மைக்கு ஏற்றது போல மாற்றிய தொடர் இது. இரண்டு சகோதரிகள் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் தொடர் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட தொடர். இந்தி மீடியா டான் ஆகிய ஏக்தா கபூர் தயாரிப்பில் உருவான இந்தத் தொடர் வரும் ஏப்ரல் வந்தால் இரண்டு வருடங்களை நிறைவு செய்கிறது. ஜீ டிவியின் ப்ரைம் டைமான இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 

சக்தி 

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் இந்தத் தொடர் இரு சகோதரிகள், அவர்கள் குடும்பம் பற்றியது. கடந்த மே மாதம் ஒளிபரப்பாகத்தொடங்கிய இந்தத் தொடர் சில வாரங்களில் டாப் 5 இடங்களுக்குள் நுழைந்துவிட்டது. முன்னாள் ‛மிஸ் இந்தியா’ ரூபினா திலைக் லீடிங் ரோலில் நடிக்கும் இந்த நெடுந்தொடர் குறைந்தது இன்னும் 30 மாதங்களாவது ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது. 

நாகினி 2 

டாப் 5 இடங்களில் முதல் இடத்தில் இருக்கும் நெடுந்தொடர் நாகினி. கலர்ஸ் சேனல் ஒளிபரப்பிய இந்த சீரியல் இந்தியில் செம ஹிட். இதன் முதல் பாகம் தமிழில் டப் செய்யப்பட்டு சன் டிவியில் ஒளிபரப்பானது. நாகினியின் சீக்ரெட் ஆஃப் சக்ஸஸ், பழிவாங்கத் துடிக்கும் இச்சாதாரி பெண் நாகமாக நடித்திருக்கும் மோனி ராய். நாகினி கிளப்பிய இன்ப அதிர்ச்சியிலிருந்து தமிழ்நாட்டு ஆண் ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. டி.ஆர்.பி ரேட்டிங்கையும், யூத்களின் பல்ஸ் ரேட்டையும் ஒருசேர ஏறவைத்த இந்த சீரியலின் ’சீசன் 2’ மோனி ராயின் ரசிகர்களுக்காகவே, தற்போது பார்ட் 2 ஒளிபரப்பாகி வருகிறது. மோனி ராய் இதிலும் ஷிவானியாக வந்து பட்டையக் கிளப்பி வருகிறார். 

                  - வரவனை செந்தில்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close