Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாணி போஜன், ரக்‌ஷிதாவின் ஃபேஷன் சீக்ரெட் இதுதான்!

டிவி உலகில் தற்போதைய ஃபேஷன் ட்ரெண்ட் செட்டர்ஸ் என்றால் அது `சரவணன் மீனாட்சி’ ரக்‌ஷிதா, `தெய்வமகள்’ வாணி போஜன்தான். ஒருகாலத்தில் நதியா புடவை, நதியா வளையல், குஷ்பு ப்ளவுஸ் என்று சினிமா பிரபலங்களின் உடைகள் ஊரையே கலக்கியது போல, இந்த இரண்டு அழகுப் பெண்களும் சீரியல் வழியாக ஃபேஷன் டிஸைனிங்கை பெண்களிடம் பரப்பி வருகின்றனர். `இவ்ளோ அழகா இக்கீங்க... எதெல்லாம் உங்களோட ஃபேஷன் சீக்ரெட்...’ என்று அவர்களிடமே கேட்டோம்.

வாணி போஜன் ரக்‌ஷிதா

ரக்‌ஷிதா (சரவணன் மீனாட்சி):

“சரவணன் மீனாட்சியில் நடிச்சுட்டு இருந்தாலும், நான் முழுக்க முழுக்க பெங்களூரு மருமகள். அதனால் சென்னையில் உடைகளோ, ஆபரணங்களோ அதிகமா வாங்குறதில்லை. ஆனாலும், பட்டுப் புடவைகள், சில்க் காட்டன் சேலைகள் மாதிரியான உடைகளை `நல்லி’யில் வாங்குவேன்.

பெங்களூருவைப் பொறுத்தவரையில், இந்த மாதிரியான ஃபேஷன் பொருட்களுக்காகவே ஒரு பெரிய தெரு இருக்கு. அங்கதான் அதிகமா வாங்குவேன். பருத்திப் புடவைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் தரமான காட்டன், கட்டுறதுக்கு எளிதான காட்டன் புடவைகள் என்னோட முதல் தேர்வு.

மாடர்ன் ட்ரெஸ் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனால், சீரியலில் எப்பவும் புடவை மட்டும்தான் கட்டணும். மார்டன் ட்ரெஸ் போட முடியலையேன்னு எனக்கு ரொம்பவே ஏக்கம். இருந்தாலும் இந்த ஏக்கம், சரவணன் மீனாட்சி மூலமா தீர்ந்திருக்கு. நிறைய மாடர்ன் ட்ரெஸ் போட சந்தர்ப்பம் கிடைச்சுது.  நிறைய கற்கள், மணிகள் வச்ச ப்ளவுஸ் எனக்கு ரொம்ப இஷ்டம். கொஞ்சம் ஒல்லியா இருக்கிறவங்க முக்கால் கை வைச்சு ப்ளவுஸ் தைச்சுப் போட்டா அது அவங்களை இன்னும் க்யூட்டா காட்டும்.

வாங்கி வச்சுருந்த ஸ்கர்ட், டாப், சல்வார்க்கெல்லாம் வேலை கிடைச்சதே சரவணன் மீனாட்சி மூலமாத்தான். ஆண்டிக் நகைகள் எனக்கு ரொம்பவே இஷ்டம். அதேமாதிரி மணிகள் கூட நம்மை அழகா காட்டும். ஷூட்டிங் நேரம் தவிர மத்த நேரங்களில் நான் அதிகமா மேக்கப் பண்றதில்லை. மேக்கப்பில் மூலிகைப் பொருட்கள்தான் என்னோட முதல் தேர்வு” என்று அழகின் ரகசியம் சொன்னார் ரக்‌ஷிதா.

வாணி போஜன் (தெய்வமகள்):

“புடவை...சேலை...சாரி இப்படி எந்த வார்த்தையில் சொன்னாலும் எனக்குப் பிடிக்கும். எஸ், நான் புடவையோட மிகப்பெரிய ஃபேன். நல்லிக்குப் போனால் எப்படியும் ஒரு ஆறேழு புடவையாவது வாங்கிடுவேன்.

குர்தீஸ் பொறுத்தவரை காட்டன், ஜியார்ஜெட் துணிகள் பிடிக்கும். டிசைனர் புடவைகள் வாங்குறதா இருந்தா காரை எடுத்துகிட்டு நேரா `மன் மந்திர்’ போய்டுவேன். மாடர்ன் ஆடைகள் பெரும்பாலும் `ஷாரா ஷாப்’தான். மேக்கப் பொருள்களில் என்னோட பெஸ்ட் தேர்வு ‘மேக்’தான். இருந்தாலும், நம்முடைய தோளுக்கு  எது பொருத்தம்னு பார்த்துதான் மேக்கப் வகைகளை தேர்ந்தெடுக்கனும். அது ரொம்ப ரொம்ப முக்கியம்.

நகைகளில் களிமண், மெட்டல், ஆண்டிக், கோல்டுனு எதில் கிடைச்சாலும் ஜிமிக்கிஸ் வாங்கிடுவேன். கழுத்துக்குக் குட்டிகுட்டி ஆக்சிடைஸ்டு ஜூவல்ஸ், மெல்லிசான செயின் போட ரொம்பப் பிடிக்கும். எப்பவுமே கச்சிதமா புடவைக் கட்ட தெரிஞ்சு, அதுக்கு பர்ஃபெக்ட் மேட்சா பிளவுஸும் அமைஞ்சுட்டா பிரின்ஸஸ், குயின் எல்லாம் நீங்கதான்” முத்தாய்ப்பாய் முடித்தார் வாணி போஜன்.

அப்புறம் என்ன? உங்களோட மனம் கவர்ந்த ஹீரோயின்ஸோட ஃபேஷன் அப்டேட்ஸ் தெரிஞ்சுடுச்சே...ஹேப்பியா பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்?

- பா.விஜயலட்சுமி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close