Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“சின்னத்திரைல இப்போ டாப் ஸ்டார்ஸ் பாம்பும், பேயும்தான்!” - நந்தினி இயக்குநர் சொல்லும் ரகசியம் #VikatanExclusive

நந்தினி ராஜ்கபூர்

ஒன்றரை கோடியில் பிரமாண்ட பங்களா செட், கிராஃபிக்ஸில் மிரட்டும் அனகோண்டா பாம்புகள், க்யூட் பேய், ஸ்வீட் நாகினி என்று அசரடிக்கிறது ‘நந்தினி’ சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட். படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் இயக்குநர் ராஜ்கபூர். இவர், அஜித்தின் ‘அவள் வருவாளா’, ‘ஆனந்தப் பூங்காற்றே’ மற்றும் சத்யராஜ் நடிப்பில் ‘கல்யாண கலாட்டா’ என பல வெற்றிப் படங்களைத் தந்தவர். வெள்ளித்திரையில் மிளிர்ந்தவர், இப்போ ‘நந்தினி’ சீரியலின் இயக்குநர். 

“சினிமா டூ சீரியல் எப்படியிருக்கு?”

"நந்தினியை சீரியலா நினைக்கலை. இதையும் சினிமா மாதிரிதான் எடுத்துக்கிட்டு இருக்கேன். சுந்தர்.சி-யின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில் தான், இந்த சீரியலுக்கும் கேமிரா. படத்துக்குலாம் பயன்படுத்துற ‘ரெட் கேமிரா’தான் பயன்படுத்துறோம். அதுவும் 4K தொழில்நுட்பத்தில் எடுக்கும் முதல் தமிழ் சீரியல் ‘நந்தினி’ தான். சினிமாவ விட்டு எங்கயும் போகலை, சினிமா எப்போதும் என் கூடத்தான் இருக்கு. சுந்தர்.சி, வசனகர்த்தா பத்ரி கூடவே நானும் சேர்ந்துதான் சீரியலுக்கு டீம் வொர்க் பண்றோம். சீரியலையும் சினிமாவா பார்க்கிறதுதான் எங்க வெற்றியோட சீக்ரெட்.” 

நந்தினி

“வில்லனா பல படங்களில் நடிச்சுட்டு இருக்கீங்க, இந்த நேரத்தில் ஏன் சீரியல் ஆசை?”

"ஒருநாள் சுந்தர்.சி சார் கூப்பிட்டு சன் டி.வி.யில் சீரியல் பண்ணப்போறேன்னு ஆலோசனைக் கேட்டார். பேசிட்டு இருக்கும்போது, ‘நீங்களே இயக்கிறீங்களா?’னு ஒருபோடு போட்டார். எனக்கு படம்தான் எடுக்கத் தெரியும்னு சொன்னேன். சின்னத்திரைக்குப் படம் இயக்குங்கன்னு சொல்லிட்டார். எங்க நட்புக்காக, சினிமாவையே சீரியலுக்குள்ள கொண்டுவந்துட்டேன். முதல் பத்துநாள், காயத்ரி ரகுராம் நடிக்க, கல்லிடைக்குறிச்சி பக்கத்துலதான் ஷூட் ஆரம்பிச்சோம். எந்தப் ப்ளானும் இல்லாம தான் முதல் 50 எபிசோடும் ஷூட் பண்ணினோம். ஆனா தயாரிப்பாளரா சுந்தர்.சி. பக்கா ப்ளானோட தான் இருந்தார். அதன்படி இப்போ சீரியலும் செம ஹிட்டா போய்க்கிட்டு இருக்கு.” 

"பாம்புக்கும் - பேய்க்கும் சண்டை! ஐடியா சூப்பரா இருக்கே?”

“சினிமாவோ, சின்னத்திரையோ சில விஷயங்கள் ட்ரெண்ட் ஆகும். சின்னத்திரையில் இப்போ ட்ரெண்ட் பாம்பும், பேயும்தான். அவங்கதான் டாப் ஸ்டார்ஸ். தனித்தனியா அதுகளுக்குனு சீரியல் வந்து செம ஹிட். அதான், ஒரே சீரியல்ல இரண்டு விஷயத்தையும் கொண்டுவந்துட்டோம். பெரியவங்க முதல் சிறார்கள் வரைக்குமே பாம்பு-பேய் காம்போவ ரசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. வேணா உங்களுக்கு ஒரு ஓப்பன் சேலஞ்ச், இரவு 9 மணிக்கு எல்லார் வீட்டுலையுமே ‘நந்தினி’ தான் இருக்கா. போய் பாருங்க தெரியும். மக்களுக்கு நந்தினியை ரொம்ப பிடிச்சுப் போச்சு.” 

நந்தினி ராஜ்கபூர்

" பின்னணி இசையில் மிரட்டுறீங்களே?” 

" டைட்டில் பாட்டு மட்டும் ஹிப்ஹாப் ஆதி, நட்புக்காக பண்ணினார். தவிர, சீரியலுக்கான அனைத்து இசையும் தினாதான். சின்னச்சின்ன இடங்களிலும் இசையில் அசரடிக்கிறார். டயலாக் இல்லாத இடத்தையெல்லாம் தினாவோட இசை தான் நிறைக்குது. தினாவின் இசை நந்தினிக்கு மிகப்பெரிய பலம். "

“அதுசரி... இந்த சீரியல் எத்தனை எபிசோடு போகும்?”

“ பாம்பையும் - பேயையும் சண்டப்போட வச்சி, அவங்க கிட்டயே கேட்டுச் சொல்லுறேன். அந்த ரெண்டு பேரையும் வரச்சொல்லுங்கப்பா.... ஸ்டார்ட்.... கேமிரா.... ஆக்‌ஷன்..” என்று அடுத்த எபிசோடுக்கு ரெடியானார் ராஜ்கபூர்.

- ரா.அருள் வளன் அரசு,

படங்கள்: ப.சரவணகுமார் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
[X] Close