Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''என் பொண்ணைத்தவிர மத்த எல்லாரும் நடிக்கிறாங்க..!'' - காயத்ரி ரகுராம் அம்மா #BiggBossTamil #VikatanExclusive

அம்மாவுடன் காயத்ரி ரகுராம்

டந்த இரண்டு நாள்களாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் புதிய சர்ச்சைக்கு திரி போட்டிருப்பவர், காயத்ரி ரகுராம். அவர் சொன்ன வார்த்தைகள் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து, காயத்ரியின் அம்மா கிரிஜாவிடம் பேசினோம். மூன்று மாதங்களாக அமெரிக்காவில் இருந்தவர், இன்றுதான் சென்னைக்கு வந்துள்ளார். 

''டி.வியில பிக்பாஸ் நிகழ்ச்சிய பார்க்க முடியாத சூழல் அமைஞ்சதால ஆன்லைன்ல கண்டிப்பா பார்த்துடுவேன். ஏங்க, ஒரு வீட்டில் அக்காவும் தங்கச்சியும் சண்டைப் போடறதில்லையா? ஒரு பொண்ணுக்கு கோபமே வரக்கூடாதா? ரோபோ மாதிரியா நடந்துப்பாங்க. ஏதோ ஒரு வார்த்தையைச் சொன்னதுக்கு இப்படியா திட்டுவாங்க.

காயத்ரி பி.ஜே.பி கட்சியில் இருக்கிறதால அப்படி பண்றாங்களானு தெரியலை. எல்லாத்தையும் கட்டுப்படுத்திட்டு இருக்கிறதுக்கு அவள் ஏசுவா, புத்தரா? ஒரு நார்மலான பொண்ணை சீண்டிவிட்டால் கோபம் வரும்தான். காயத்ரி பத்தி எங்க வீட்டு முனியம்மாவை கேட்டுப் பாருங்க. யாரைப்பத்தியும் அநாவசியமா பேசக்கூடாதுனு சொல்ற கேரக்டர் காயத்ரி. மத்தவங்க மேல அவ்வளவு பாசம் காட்டுவா. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அவள் படுக்கைக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு போர்டில் 'ஐ மிஸ் யூ மாம்'னும், அக்கா பசங்க மூணு பேரின் பெயர்களையும், மனோஜ் அண்ணா, ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் குறிப்பிட்டு எழுதியிருக்கா. மனசுக்குள்ள அவ்வளவு பாசம் வெச்சிருக்கா. எந்த விஷயமாக இருந்தாலும் மனசுக்குள்ளே வெச்சுப்பாளேத் தவிர, வெளியில் பேசத் தெரியாது. ரோட்டுல ஏதாவது பிரச்னை நடந்தால்கூட இறங்கிப்போய் பேசுவா. ஒரு நாய் அடிபட்டால்கூட ஓடிப்போய் உதவி செய்யுற மனசு அவளுக்கு.'' 

''எச்ச, சேரி பிகேவியர்னு சொல்லியிருக்காங்களே...'' 

''அவ சொன்னதுல என்ன தப்பு? கமெண்ட் பண்றவங்களுக்கு சேரி வார்த்தைகளைப் பற்றி முதல்ல தெரியுமா? எச்ச, சேரி பிகேவியர் என்கிற வார்த்தையை வெச்சு இப்படி எழுதிட்டே இருக்காங்களே, அவங்கெல்லாம் வேலைக்கே போறதில்லையா. வேலை வெட்டி இல்லாம இருக்காங்கபோல. ஒரு பொண்ணு கோபிச்சுக்கவே கூடாதா? மத்தவங்களுக்கு அடிமையா, கையைக் கட்டி நிக்கணுமா? காலம் மாறுது மாறுதுனு சொல்றாங்க. ஆனா, இன்னும் மாறலைன்னு தோணுது.'' 

காயத்ரி ரகுராம்

'' 'பிக் பாஸ்' வாய்ப்பு வந்தபோது காயத்ரிகிட்ட என்ன சொன்னீங்க?'' 

''அதே நேரத்துல ஜீ தமிழ் டி.வியில் டான்ஸ் ஷோவுக்கும் காயத்ரியை நடுவராகக் கூப்பிட்டிருந்தாங்க. 'நீ அதுக்குப் போகலாமே'னு சொன்னேன். 'பிக்பாஸ் சப்ஜெக்ட் வித்தியாசமா இருக்கு. ஒரே வீட்ல குடும்பமா சமைச்சுப் பரிமாறிட்டு இருக்கிறது நல்லா இருக்கும். எனக்கு கலந்துக்க விருப்பமா இருக்கு'னு சொன்னா. நானும் ஓகே சொன்னேன். இப்போ என் பொண்ணு பெயரைக் கெடுக்கணும்னே ஒரு குரூப் கிளம்பியிருக்கு. ஆனா, அவள் அதையெல்லாம் தாண்டி வந்துடுவா. இந்த நிகழ்ச்சியில ஜெயிக்கிறாளோ இல்லையோ, வாழ்க்கையில் கண்டிப்பா ஜெயிச்சிடுவா.'' 

''வீட்டில் காயத்ரி எப்படி?'' 

''வீட்ல காயத்ரி சமையல்கட்டு பக்கமே வந்ததில்லை. ஆனா, நிகழ்ச்சியில் அத்தனை பேருக்கும் சமைச்சுப் போட்டிருக்கா. கஞ்சாகருப்பு ஓர் இடத்தில 'காயத்ரி மேடம், அம்மா மாதிரி எல்லாருக்கும் சமைச்சுப் போடுறாங்க'னு சொல்லியிருந்தார். அதைக் கேட்கும்போது பெருமையா இருந்துச்சு.'' 

''காயத்ரி இந்த நிகழ்ச்சியில் எப்படி நடந்துக்கறதா நினைக்கிறீங்க?'' 

''அவள் ரொம்ப ஸ்ட்ரிக்டான பெர்சன். மத்த எல்லாருமே ஃபேக்கா நடிக்கிறாங்க. என் பொண்ணுதான் உண்மையா இருக்கா. அவ கூட இருக்கிறவங்க எல்லாரையும் கவனிச்சுப் பாருங்க. மேக்கப், லிப்ஸ்டிக் போட்டுட்டு இருப்பாங்க. ஆனால், காயத்ரி எந்த மேக்கப்பும் இல்லாம சாதாரணமா இருப்பா. 'ஏன் காயத்ரி ஒரு மேக்கப்கூட போடாம இருக்கா'னு பலரும் என்கிட்டே கேட்டாங்க. வீட்ல இருக்கும்போது மேக்கப் போட்டுட்டா இருப்பாங்க. இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, வீட்டுக்குள்ளே எப்படி இருப்பீங்களோ அப்படி இருக்கணும்னு சொல்லியிருந்தாங்க. காயத்ரி மட்டும்தான் அப்படி நடந்துக்கிறா'' 

காயத்ரி ரகுராம்

''உங்களைச் சுற்றி இருக்கவங்க இந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு என்ன சொல்றாங்க?'' 

''அமெரிக்காவுல இருக்கும் தமிழர்கள் பலர், 'பிக்பாஸ்ல மத்த எல்லோரையும்விட உங்க பொண்ணுதான் உண்மையா நடந்துக்கிறாங்க. மனசுல பட்டத்தைச் சொல்றாங்க'னு பாராட்டினாங்க.'' 

''இந்த நிகழ்ச்சியில் காயத்ரி ஜெயிப்பாங்கனு நினைக்கிறீங்களா?'' 

''நீங்க ஆரம்பத்திலிருந்தே நிகழ்ச்சியைக் கவனிச்சிருந்தா தெரியும். உள்ளே வந்த எல்லாருமே தான் வின் பண்ணுவோம்னு சொன்னாங்க. கஞ்சா கருப்பும், இவளும்தான் அப்படிச் சொல்லலை. 'இங்க எல்லோருடனும் ஒண்ணா இருக்கணும். ஒரு சேஞ்ச் வேணும். அதுக்குத்தான் வந்தோம்னு'னு சொன்னாங்க. காயத்ரிக்கு 'தலைவி' குவாலிட்டி நிறைய இருக்கு. அவ கரெக்டா இருக்கிறதால், தன்னை மாதிரி மத்தவங்களும் கரெக்டா இருக்கணும்னு நினைக்கிறா.'' 

காயத்ரி ரகுராம்

''காயத்ரியை பார்க்க முயற்சி செஞ்சீங்களா?'' 

''அவளைப் பார்க்கணும்னு போல இருக்கு. பார்க்க அனுமதிக்க மாட்டோம்னு சொல்லிட்டதால் வருத்தமா இருக்கு. இந்த நேரத்துல அவளை கொடுமைக்காரி, அது இதுனு எழுதறது மனசுக்கு இன்னும் கஷ்டமா இருக்கு. பொண்டாட்டிக்கிட்ட திட்டு வாங்குறவங்க எல்லாம், காயத்ரி பற்றி ட்விட்டர், ஃபேஸ்புக்ல எழுதிட்டிருக்காங்க.'' 

''வெளியில் வந்த பிறகு இந்த கமெண்ட்ஸை எல்லாம் காயத்ரி எப்படி எடுத்துப்பாங்க?'' 

''அவள் போல்டான கேரக்டர். எதுக்கும் பயப்படாதவள். அவள் அமெரிக்காவில் படிச்சுட்டிருந்தப்போ மேட்ரிமோனி சைட்ல வரன் பார்த்து அவளுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம். நல்ல ஃபேமிலினுதான் சொன்னாங்க. ஆனால், அவ மாமியார் அவளை மாப்பிள்ளைகிட்டயிருந்து பிரிச்சுட்டாங்க. அங்கிருந்து என் பொண்ணை காப்பாத்தி கூட்டிட்டு வராமல் போயிருந்தால் என்ன ஆகியிருப்பானு தெரியலை. அந்த சமயத்தில் அவள் போல்டா ஃபேஸ் பண்ணினா. இப்படி எங்க வாழ்க்கையில் என்ன நடக்குதுனு தெரியாமல் பலரும் அரைகுறையா எழுதறாங்க. ஏதோ ஒரு வார்த்தையைச் சொன்னதுக்கு இப்படி தரக்குறைவா எழுதுறாங்களே, நாளைக்கு உண்மை தெரிஞ்சா கொட்டின வார்த்தைகளைத் திருப்ப முடியுமா?'' என்கிறார் கிரிஜா, வருத்தமான குரலில்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close