Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்

“மூட்டு வலி ஏற்பட 200-க்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன. நம்முடைய எலும்பு மூட்டு மிக அருமையான கட்டமைப்பைக்கொண்டது. இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட எலும்புகள் உள்ள இடத்தில் மூட்டுக்கள் உள்ளன. எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராயாமல் இருக்க அவை சேரும் இடத்தில் பீங்கான் போன்ற வழுவழுப்பான குருத்தெலும்பு உள்ளது. இதில் நோய்த்தொற்று, ஆட்டோ இம்யூன் பாதிப்பு, காயம் என்று ஏராளமான காரணங்களால் வலி ஏற்படுகிறது. எப்போதாவது ஒருநாள் வலித்தால், பயப்படத் தேவை இல்லை. இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் வலி தொடர்ந்தால், கட்டாயம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்” என்கிறார் எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர் கேசவன்.

“50-60 ஆண்டுகளுக்கு முன்பு வரை, மூட்டு அழற்சி ஏற்பட்டவர்கள் வாழ்நாள் முழுக்க முடங்கியிருக்க வேண்டிய நிலை இருந்தது. முதல் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை 1960-ல் நடந்தது. அந்த அறுவைசிகிச்சை இடுப்பு எலும்பில் செய்யப்பட்டது. அதன் பிறகு, தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவிட்டது.  இப்போது, மூட்டு மாற்று அறுவைசிகிச்சைக்குப் பதில், ஆர்த்ரோஸ்கோப்பி எனப்படும் சிறுதுளை அறுவைசிகிச்சை வந்துவிட்டது. அதிலும், ஸ்டெம் செல் பயன்படுத்தி செய்யப்படும் அறுவைசிகிச்சையில், மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்யாமலேயே, நம்முடைய ஸ்டெம் செல்லை எடுத்து, கார்ட்டிலேஜ் பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தப்படும். சில நாட்களில் அந்த ஸ்டெம் செல், கார்ட்டிலேஜ் செல்லாக வளர்ந்திருக்கும்.

மூட்டு வலி, மூட்டு அழற்சி ஏற்பட்டவர்கள் அனைவருக்கும் மூட்டு மாற்று  அறுவைசிகிச்சையைப் பரிந்துரைப்பது இல்லை. ஆரம்பநிலையிலேயே பிரச்னையைக் கண்டறிந்து, மருந்துகள் மற்றும் பிசியோதெரப்பி சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம், மூட்டு பாதிப்பைத் தவிர்க்க முடியும். இவை எதுவும் பலனளிக்காத நிலையில், வெறும் ஒருசில சதவிகிதத்தினருக்குத்தான் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, எந்தத் தயக்கமும் இன்றி, ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்” என்கிறார்.

மூட்டு வலி ஏன் ஏற்படுகிறது?

மூட்டு மாற்று அறுவைசிகிச்சை அவசியமா?

மூட்டு வலிக்கு நவீன ஸ்டெம் செல் சிகிச்சை பலன் அளிக்குமா?

கீழ் முதுகு வலி ஏன் ஏற்படுகிறது?

எலும்பு அடர்த்திக் குறைவைத் தவிர்க்க, செய்ய வேண்டியது என்ன?

அன்பு வாசகர்களே, ஜூன் 16 முதல் 23 வரை தினமும், 044-66802904. என்ற எண்ணுக்கு போன் செய்தால், மூட்டு வலி, கீழ் முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கும் வழிகள், நவீன சிகிச்சைமுறைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர் ஏ.ஆர்.கேசவன்


“பெரியவர்களுக்கு மாரடைப்பு, இதய செயல் இழப்பு உள்ளிட்ட இதய நோய்கள் முதுமை காரணமாக ஏற்படுவது உண்டு.  ஆனால், குழந்தைகளுக்குப் பிறவிக் குறைபாடு காரணமாக இதயத்தில் ஓட்டை போன்ற பிரச்னை ஏற்படுகிறது. 60 சதவிகித இதய ஓட்டை தானாகச்  சரியாகிவிடும்.  40 சதவிகிதப்  பிரச்னைகளுக்குத்தான் அறுவைசிகிச்சை தேவைப்படும். குழந்தைகளுக்கு ஏற்படும் இதயப் பிரச்னைகளை, கருவில் இருக்கும்போதே கண்டறியலாம். 12 வார கர்ப்ப காலத்தில் எக்கோ செய்யும்போது, சிசுவின் இதயத்தில் ஏதேனும் பிரச்னை உள்ளதா, பிரச்னை இருந்தால் அது மிகவும் சிக்கலானதா, சாதாரணமானதா எனக் கண்டறிந்து, அதற்கு ஏற்ப முடிவு செய்யலாம். சாதாரணக் குறைபாடாக இருந்தால், குழந்தை பிறந்த உடன் அறுவைசிகிச்சை செய்து சரிசெய்யலாம்” என்கிறார் மூத்த இதய நோய் சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன்.

“இதயத்தில் ஓட்டை காரணமாக, மகாதமனியில் ரத்தம் திரும்ப வருகிறது. இதனால், குழந்தையின் நிறம் நீலமாக மாறியிருக்கும். இந்தக் குழந்தைகளை நீலக் குழந்தைகள் (Blue babies) என்று சொல்வார்கள். இது மிகப் பெரிய சிக்கலான பிரச்னை. இதைச் சரிசெய்ய, நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் அந்தக் குழந்தைக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். முன்பு, அறுவைசிகிச்சை செய்தாலும், அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய காலம் மிகவும் அபாயகரமாக இருந்தது. ஆனால், இப்போது தொழில்நுட்பம் முன்னேறிக்கொண்டே இருப்பதால், குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.

இதயத்தின் மேல் அறையை இணைக்கும் சுவரில் ஓட்டை ஏற்படலாம். இதை ஏ.எஸ்.டி என்போம். இதனால், பெரிய அளவில் பிரச்னை வராது என்றாலும், அறுவைசிகிச்சை செய்து அதை அடைக்க வேண்டும். இதற்கு, மூன்று முதல் நான்கு வயது வரை சரியான வயது. கீழ் அறையில் உள்ள சுவரிலும் ஓட்டை ஏற்படலாம். இதை, பி.எஸ்.டி என்போம். இது 60 சதவிகிதம் பேருக்குத் தானாக மூடிக்கொள்ளும். 40 சதவிகிதம் பேருக்கு மட்டும் அறுவைசிகிச்சை செய்து மூட வேண்டும். ஆறு வயதுக்கு மேல் ஆகியும் ஓட்டை இருந்தால், அதை அறுவைசிகிச்சை செய்து கட்டாயம் மூட வேண்டும்” என்கிறார் டாக்டர்.

குழந்தைகளுக்கு ஏற்படும் இதய நோய்கள் என்ன?

குழந்தை நீல நிறமாக இருக்கக் காரணம் என்ன?

இதய மேல் அறையில் ஏற்படும் ஓட்டையை அடைப்பது அவசியமா?

இதய அறுவைசிகிச்சையில் ஸ்டெம் செல் பயன்பாடு என்ன?

தொற்று நோய் பாதிப்புகள் எப்படி இதயத்தைப் பாதிக்கின்றன?

அன்பு வாசகர்களே, ஜூன் 24 முதல் 30 வரை தினமும், 044-66802904. என்ற எண்ணுக்கு போன் செய்தால், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இதய பாதிப்புகள், தவிர்க்கும் வழிகள், அறுவைசிகிச்சைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் இதய நோய் சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன்

- பா.பிரவீன் குமார்
படம்: தி.குமரகுருபரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஹலோ வாசகர்களே...
காய்களைச் சாப்பிடுங்கள்... நோய்களை விரட்டுங்கள்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close