Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்டார் ஃபிட்னெஸ்

ன்று கையில் குழந்தையுடன் இருக்கும் குடும்பப் பெண்களிடம் “உங்கள் சீக்ரெட் க்ரஷ் யார்?” எனக் கேட்டுப்பாருங்கள். ‘அர்விந்த் சுவாமி’ என்ற பதில் வரும். ‘அழகென்ற சொல்லுக்கு அர்விந்த் சுவாமி’ எனப் புதுமொழி உருவாக்கிய பேரழகன். கோடம்பாக்கம் கொண்டாடிய நாயகன். இடையில் கொஞ்ச காலம் அவுட் ஆஃப் லைம்லைட். இதோ, இப்போது 46 வயதில் ஸ்லீக் லுக்கில் அதிரடிக்கிறார். “இந்த பேக் டு ஃபார்ம் எப்படி பாஸ்?” என்று கேட்டோம்.

டிமோத்தி என்பவர்தான் அர்விந்தின் வொர்க்அவுட் பிளானை வடிவமைத்தவர். “ஒரு நல்ல டிரெய்னர் என்ன சொல்லிக்கொடுக்கிறார் என்பது முக்கியம் அல்ல. எப்படிச் சொல்கிறார் என்பதுதான் முக்கியம். அந்த டிரெய்னர் உங்கள் நண்பராக இருக்கலாம், புரொஃபஷனல் பயிற்சியாளராக இருக்கலாம். ஆனால், ஒரு வழிகாட்டி இருப்பது நல்லது” என்கிறார்.

காலையில் கார்டியோ, மாலையில் வெயிட் பயிற்சி... ஜிம்மில் இதுதான் அர்விந்த் சுவாமியின் வொர்க்அவுட் டைரி. முதல் நான்கு மாதங்கள் தினமும் ஜிம்முக்கு வந்து அதிரடியாக எடை குறைத்தார். அதன் பின், வாரம் மூன்று நாட்கள் என அதை மெயின்டெய்ன் செய்ய உழைத்துக்கொண்டிருக்கிறார்.

புரோட்டின் உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வது, உணவின் அளவைக் குறைத்து ஆறு வேளை சாப்பிடுவது என டயட்டிலும் பெரிய மாற்றத்தைக்கொண்டு வந்தார். இதனால், செரிமானம் எளிதானது. உடலுக்குத் தேவையான ஆற்றலும் கிடைத்தது.

“உங்களால் இது முடியாது” என்று சொன்னால், அதுதான் அர்விந்த் அடுத்து செய்யும் விஷயமாக இருக்கும். “நம்மால் செய்ய முடிவதையே செய்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கு? வொர்க்அவுட் விஷயத்திலும் இப்படியான மோட்டிவேஷன் தேவை” என்கிறார் ஸ்டார் ஹீரோ.

எல்லாவற்றையும் விட, வொர்க்அவுட் என்பது ஆரோக்கியத்துக்கானது. தன்னை அழகுபடுத்திக்கொள்ளும் எதையுமே அர்விந்த் சுவாமி விரும்பமாட்டார். இயல்பாக இருப்பதையே விரும்புவார். இந்த டயட், வொர்க்அவுட் எல்லாம் அவரை அழகாகக் காட்ட அல்ல... ஆரோக்கியத்துக்காக.

- கார்க்கிபவா

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
கல்லீரல் வைரஸ் தவிர்ப்போம்!
உடலினை உறுதிசெய் - 19
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close