Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைட்டமின் சீக்ரெட்ஸ் - 7

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
B2 ரிபோஃபிளேவின்

பிகாம்ப்ளெக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தது ரிபோஃபிளேவின் (பி2). நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடலுக்கு ஏற்றவாறு மாற்றுவதில் துணைபுரிகிறது. நீரில் கரையக்கூடிய வைட்டமின் என்பதால், தினசரி உணவில் கட்டாயம் இருக்க வேண்டியது அவசியம்.

எதில் நிறைந்துள்ளது?

பால் மற்றும் பாலில் இருந்து கிடைக்கும் பொருட்களான ஸ்கிம்மிடு மில்க், தயிர், வெண்ணெய், சீஸ் போன்றவற்றில் இருக்கிறது.

புரோகோலி, கீரை வகைகளில் நிறைந்துள்ளது.

முட்டை மற்றும் இறைச்சியில் ரிபோஃபிளேவின் அதிக அளவு இருக்கிறது.

காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவற்றில் குறைந்த அளவுக்கு உள்ளது.

ரிபோஃபிளேவின் பணிகள் என்னென்ன?

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் இருந்து கொழுப்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து போன்றவற்றை உடல் பயன்படுத்தக்கூடிய வகையில் ஆற்றலாக மாற்றித் தருவதில் ரிபோஃபிளேவின் சத்துக்கு முக்கியப் பங்கு உண்டு.

உடலில் உள்ள தோல் பகுதியின் உட்புறமும், வெளிப்புறமும் ஆரோக்கியமாக இருக்க உதவிபுரிகிறது. உடலில்  அமிலத்தன்மையைக் கட்டுக்குள்வைக்கிறது.

தலைமுடி, நகங்கள், கண்கள் போன்றவற்றின் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.

ரிபோஃபிளேவின் குறைந்தால் என்ன நடக்கும்?

ரிபோஃபிளேவின் குறைபாட்டை   `அரிபோஃபிளேவினோசிஸ்’  (Ariboflavinosis) என்கின்றனர் மருத்துவர்கள். வாயில்  வெடிப்புபோல ஏற்பட்டு, கீறல் மாதிரி விழும்; நாக்கில் கடுமையாக வலி ஏற்படும்; கண்கள் சிவந்துபோகும்; மூக்கு, உதடு, தோல், நகங்கள் போன்றவற்றில் செதில்கள் போல (Scaliness) உருவாகும்.

குழந்தைகளுக்கு ரிபோஃபிளேவின் குறைபாடு காரணமாக, உடல் பலவீனம் அடையும்.

இந்தியாவில்  எல்லா குழந்தைகளுக்கும் பால்  கிடைப்பது இல்லை. எனவேதான் ரிபோஃபிளேவின் குறைபாடு இந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது.

ரிபோஃபிளேவின் குறைபாடு ஏற்படாமல் தடுக்கவும், குறைபாடு குணமாகவும் மாத்திரைகள் சாப்பிடுவதைவிட, பால் பொருட்கள் மற்றும் பருப்புவகைகளை உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும். 

கர்ப்ப காலத்தில் ரிபோஃபிளேவின் குறைபாடு ஏற்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு இதய நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே, ரிபோஃபிளேவின் நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.

- பு.விவேக் ஆனந்த்


ரிபோஃபிளேவின் நாள் ஒன்றுக்கு, யார் யாருக்கு எவ்வளவு தேவை?

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
உச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 7
மூலிகை இல்லம் - 12
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close