Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கீழாநெல்லி

`கீழவாய் நெல்லி’, `கீழ்க்காய் நெல்லி’, `இலஞ்சியம்’ என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மூலிகைச்செடி கீழாநெல்லி. முழுத் தாவரமும் மருத்துவப் பலன்கள் கொண்டது.

கீழாநெல்லி, மஞ்சள்காமாலைக்கு மட்டுமே பயன்படக்கூடியது எனப் பலர் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. சர்க்கரை நோய், உடல் வெப்பம், மாந்தம், நாவறட்சி, கண் நோய்கள், மேக நோய்கள், ரத்தக் கழிச்சல்  பிரச்னைகளுக்கும் கீழாநெல்லி தீர்வு தரும்.

கீழாநெல்லி இலையை ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கலந்து காலைதோறும் வெறும் வயிற்றில் குடித்துவர, வயிற்றுப்புண்கள் ஆறும்.

கீழாநெல்லியின் இளங்கொழுந்தைப் பறித்து, குடிநீராகச் செய்து ஒரு நாளில் இரண்டு மூன்று முறை பருகிவந்தால் சீதக்கழிச்சல் குணமாகும்.

இதன் இலையை உப்புடன் சேர்த்து அரைத்து, சொறி, சிரங்கு மீது தடவிவந்தால் குணமாகும்.

கீழாநெல்லி இலையையும் வேரையும் நிழலில் உலர்த்திப் பொடிசெய்து வைத்துக்கொள்ள வேண்டும். அரிசி கழுவிய நீரில் இந்தப் பொடியைச் சேர்த்துக் குழைவாகக் கலக்கி, உடலில் உள்ள புண்கள், வீக்கங்கள் மீது தடவிவர, அவை சரியாகும்.

இலையையும் வேரையும் கழுவி, குடிநீராகச் செய்து, சூடாக அருந்தினால், காய்ச்சல் குணமாகும். இதே நீரை ஆறவைத்து தினமும் காலை மாலை குடித்துவர, உடல் வலிமையாகும்; பசி எடுக்கும்.

நாட்பட்ட நோய்களால் உடல் மெலிந்து வருந்துபவர்கள், கீழாநெல்லிச் செடியை சுத்தம்செய்து, எலுமிச்சை அளவு பசுந்தயிரில் கலந்து, நாள்தோறும் காலை மாலை  என, 45 நாட்களுக்கு உண்டுவர, உடல் வெப்பம் தணியும். மேகவெட்டை முதலிய நோய்கள் குணமாகும்.

- பு.விவேக் ஆனந்த்


மஞ்சள் காமாலை நீங்க...

கீழாநெல்லியின் முழுச்செடியையும் நீரில் கழுவி சுத்தம்செய்து நன்கு அரைத்து, அதில் இருந்து எலுமிச்சை அளவுக்கு எடுத்து, 250 மி.லி வெண்ணெய் நீக்கிய மோரில் கலந்து, காலை மாலை வெறும் வயிற்றில் குடித்துவர வேண்டும். இந்த நாட்களில் கொழுப்புப் பதார்த்தங்களை அறவே தவிர்த்து, எளிதில் செரிமானம் ஆகும் கஞ்சி வகைகளை உண்டுவர வேண்டும். சிறிது காலம் உப்பில்லா பத்தியம் இருப்பதும் நல்லது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஹெல்த்தியாக இருக்க 20 வழிகள்
பற்களை சிதைக்கும் 8 பழக்கங்கள்
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close