வேப்பிலைக்கு நிகரான கறிவேப்பிலை! வேம்பின் உரிமைக்கு வெள்ளைக்காரன் காப்புரிமை கோரிய பிறகுதான், 'ஐயோடா.... இது எங்க பாட்டன் சொத்து....’ என்று விழித்தெழுந்து உலக நீதிமன்றப் படிகள் ஏறி இறங்கி, உரிமையை மீட்டுவந்தோம். வேம்பின் அருமையை மறந்துபோனதன் விளைவுதான் இது. இதே நிலைமை வெகு விரைவில் கறிவேப்பிலைக்கும் வரலாம்! காய்கறிக் கடைகளில் கொசுறாகக் கிடைத்தாலும் மகத்தான மருத்துவக் குணங்களைக்கொண்டது கறிவேப்பிலை. முடி கொட்டுவதைத் தவிர்க்க, செரியாமையைப் போக்க, அமீபியாசிஸ் (Amebiasis) எனப்படும் ஒரு வகை வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த, வயோதிகத்தில் வரும் 'அல்சைமர்’ (Alzheimer) எனும் ஞாபக மறதியைக் குறைக்க எனப் பல பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்கும் கறிவேப்பிலையை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கொண்டாடுகின்றனர். 1950-ல் அமெரிக்க நாட்டின் சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 'கறிவேப்பிலை ரத்த சர்க்கரை அளவை 42 சதவிகிதமும், ரத்தக் கொழுப்பை 30 சதவிகிதமும் குறைக்கிறது’ என்ற உண்மை தெரியவந்தது. இதுதவிர, 'இந்திய சமையலில் வாசனைக்குச் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, பெருங்குடல் புற்றுநோயைத். . .
நம்மிடம் முறையன பதிவுகள் இல்லாததெ அடுத்தவன் பெட்டன்ட் வாங்குகிறான். நமது அரசு எதாவது செய்யவேண்டும், ஆனால் இங்குதான் ஆட்சியை பிடிப்பது ஒன்றுதானே குறிக்கோளாக இருக்கிறது...
COMMENT(S): 3
Very useful information thanks to vikatan
நம்மிடம் முறையன பதிவுகள் இல்லாததெ அடுத்தவன் பெட்டன்ட் வாங்குகிறான். நமது அரசு எதாவது செய்யவேண்டும், ஆனால் இங்குதான் ஆட்சியை பிடிப்பது ஒன்றுதானே குறிக்கோளாக இருக்கிறது...
நம் ஊர் தாவரங்களின் மதிப்பு யாருக்கு தெரிகிறது!