எங்க வீட்டு டயட்! 'ரசித்துச் சாப்பிடும் உணவு ருசியாக இருந்தால் மட்டும் போதுமா? அதுவே சத்தாகவும் சகல நோய்களையும் போக்கும் அருமருந்தாகவும் இருந்தால்... ஆயுசுக்கும் ஆரோக்கியமாக வாழலாம்!’ என்பதே மருத்துவர்கள் சொல்லும் மகத்தான உண்மை! இருமல், ஜலதோஷம் எனச் சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்கு மட்டும் அல்லாமல், காய்ச்சல் முதல் காமாலை வரை அத்தனை நோய்களின் வீரியத்தையும் குறைக்கும் அருமருந்து வீட்டில் சமைக்கும் உணவுதான். அப்படி, சட்டென நோயின் பிடியில் இருந்து நம்மை விடுவிக்க கை கொடுத்த உணவு செய்முறைகளையும் அனுபவங்களையும் வாசகர்கள் இங்கே நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்கள். நெல்லிக்காய் சாம்பார் குடும்பத்துடன் ஊட்டிக்குப் போயிருந்தோம். ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்தால் எல்லோருக்கும் ஜுரம், தலைவலி. வெளியில் சாப்பிட்டது ஏற்றுக்கொள்ளாமல் வாய் முழுவதும் கசப்பு. உடல் சூட்டினால், சிறுநீர் கழிக்கவும் சிரமம். இந்நிலையில், தனது வீட்டில் விளைந்த நெல்லிக்காய்களை உறவினர் ஒருவர் கொண்டுவந்து தந்தார். புளிக்குப் பதிலாக நெல்லிக்காய். . .
COMMENT(S): 2
ஓட்ஸ் சப்பாத்தி ரொம்ப நல்ல பயனுள்ள ரெசிப்பி. நான் இதைத்தான் டின்னருக்கு சாப்பிடப்போகிறேன்.
superosuper