சைனஸ் உடலுக்கு மைனஸ்! ''காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா!'' என்கிறார் பட்டினத்தார். ஒருகணம் சுவாசம் நின்றாலும் உயிர் தடுமாறிவிடும். சுவாசத்தில் பிரச்னையை ஏற்படுத்தி நம்மை மூச்சுத் திணறவைக்கும் ஒரு பிரச்னை சைனஸ்! நாளடைவில் ஆஸ்துமாவாக மாறவும் வாய்ப்பு உள்ள சைனஸ் குறைபாடுகுறித்து 'காது மூக்கு தொண்டை’ மருத்துவர் எம்.குமரேசன் விரிவாகப் பேசினார். ''சைனஸ் என்பது என்ன?'' ''நம் தலையில் நிறைய எலும்புகள் இருக்கின்றன. இந்த எலும்புகளில் இருக்கும் வெற்று அறைகளைத்தான் சைனஸ் என்று சொல்கிறோம். இந்த சைனஸ் அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இந்த சைனஸ் அறைகளை, பொட்டு எலும்புக் காற்று அறை (நெற்றியில் இருப்பது), மெத்தை எலும்புக் காற்று அறை (இரு கண்களுக்கு இடையில் இருப்பது), கன்ன எலும்புக் காற்று அறை (இரண்டு கன்னங்களிலும் இருப்பது), ஆப்பு எலும்புக் காற்று அறை (பின்னந்தலையில் இருப்பது) என்று நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். இந்த. . .
COMMENT(S): 2
மருத்துவரின் விலாசம் செல் எண் கொடுப்பீர்களா ப்ளிஸ்?
It is a real one, everyone must read this one.