நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா? அசத்தலான அழகு, அல்ட்ரா மாடர்ன் தோற்றம், நுனி நாக்கு ஆங்கிலம் என்று படு ஸ்டைலாக இருப்பவர்கள்கூட சில சமயம் அருகில் வந்து வாய் திறந்தால், 'குப்’ என்று துர்நாற்றம் தூக்கும். தர்மசங்கடத்தில் நெளிந்து வளைந்து நாம் டான்ஸ் ஆட வேண்டி இருக்கும். ''உயிர் போற அவசரமான வேலையாக இருந்தாலும், அவரிடம் நேரில் சென்று பேச மாட்டேன். போனோட முடிச்சுக்குவேன்'' என்று ஒரு சிலர்குறித்து பயத்தோடும் முகச்சுழிப்போடும் சொல்லப்படுவதற்குக் காரணம்... வாய் துர்நாற்றம்! ஒழுங்காகவும் முறையாகவும் பற்களை பிரஷ் பண்ணாமல் இருப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு முதல் காரணம். ஒரு நாளைக்குக் குறைந்தது இரண்டு தடவையாவது பல் துலக்குவது அவசியம். குறிப்பாக, இரவு படுக்கைக்குப் போவதற்கு முன்னர் பல் விளக்குவது மிகவும் அவசியம். சில வெளி சமாச்சாரங்களும் இருக்கின்றன. வெங்காயம், பூண்டு இதெல்லாம் சாப்பிட்டால், அந்த வாடை அதிக நேரம் வாயிலேயே சுற்றிக்கொண்டு இருக்கும். சின்ன வெங்காயத்தைப் பச்சையாகச். . .
COMMENT(S): 2
உஙகள் சேவை நாட்டுக்கு தேவை
vikatan is super. I always like vikatan