தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே! 'தூங்குற குழந்தையை எழுப்பக் கூடாது. நல்லாத் தூங்கினாத்தான் குழந்தை புஷ்டியா வளரும்!’ - எல்லா வீடுகளிலும் பெரியவர்கள் சொல்வது, பெரிய உண்மை. குழந்தை பிறந்து ஒரு சில வாரங்கள் வரை நாளின் பெரும் பகுதியைத் தூங்கியே கழிக்கிறது. பிறந்த குழந்தைகள் ஒரு நாளின் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 20 மணி நேரத்துக்கும் மேலாகத் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். சிறு வயதில் இதுபோல் நீண்ட நேரம் ஆழ்ந்த தூக்கத்திலேயே (Slow Wave Sleep & மூன்றாம் நிலைத் தூக்கம்) இருக்கும்போது உடல் வளர்ச்சிக்குத் தேவையான 'ஹார்மோன் சுரப்பி’கள் நன்றாக வேலை செய்யும். குழந்தையின் உடல் வளர்ச்சியும் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும். ஒன்று அல்லது ஒன்றரை வயதில் இருந்து குழந்தையின் தூக்க நேரம் என்பது படிப்படியாகக் குறைந்துகொண்டே வரும். எல்.கே.ஜி. படிக்கும் குழந்தை இரவில் தொடர்ச்சியாக 10 அல்லது 12 மணி நேரம் தூங்கினாலும் மதிய வேளையிலும் குறைந்தபட்சம் இரண்டு. . .
COMMENT(S):