மனமே மந்திரம்! ''உள்ளே வரலாமா?'' என்று கேள்வி கேட்டுவிட்டுக் கதவைத் திறந்து உள்ளே வந்தார் அந்த 30 வயது இளைஞர். ஆக்ஷன் ஹீரோ போன்ற தோற்றம். கச்சிதமான ஆடை அலங்காரம் என அவரது நடை உடை பாவனைகள் எல்லாவற்றிலுமே ஒருவித நேர்த்தி! என் எதிரில் வந்து அமர்ந்தவர், ''டாக்டர்... இந்தக் கடிதத்தை முதல்ல படிச்சுப் பாருங்க'' என்றவாறே கடித உறை ஒன்றைக் கொடுத்தார். கடிதத்தைப் படித்த எனக்குப் பேரதிர்ச்சி. அந்தக் கடித வரிகள் இவைதான்: 'மாண்புமிகு மன நல மருத்துவருக்கு வணக்கம்! நான் படித்து முடித்து நல்ல வேலையிலும் இருக்கிறேன். கல்யாணத்துக்காக வீட்டில் பெண் பார்க்கிறார்கள். இவர்கள் பார்த்துச் சொல்லும் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ள என்னால் முடியாது. ஏனென்றால், நானும் .... கட்சித் தலைவரின் மகள் ..வும் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறோம். நான் வேறு யாரையாவது திருமணம் செய்துகொண்டால் நிச்சயம் அவள் தற்கொலை செய்துகொள் வாள். இதை எங்கள் வீட்டாரிடம் சொன்னால், எல்லோரும். . .
COMMENT(S): 1
அதீத தாழ்வு மனப்பான்மையின் விளைவால் மனப்பிறழ்வு!நோய்மையை குணா திரைப்படம் வழி புரிதலை ஏற்படுத்திய எளிமைக்கு பாராட்டுக்கள்!